Categories
உலக செய்திகள்

திக் திக் திக்….. ஒரே நாளில் 420 மரணம்…. பெரும் ஷாக்கில் உலக நாடுகள்…!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 420 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

சீன மக்களுக்கு கட்டாய பரிசோதனை…. ஜப்பான் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சீன நாட்டில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து பல நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் அரசு, சீன நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தெரிவித்திருப்பதாவது, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு… பிரதமரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய மந்திரி…!!!!!

ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறு சீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்தவர் கென்யா அகிபா. இவர் அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தன்னுடைய சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, கென்யா அகிபாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புமியோ […]

Categories
உலக செய்திகள்

அடக்கொடுமையே…!! பேரழிவை ஏற்படுத்தும் பனிப்பொழிவு….. 17 பேர் உயிரிழப்பு…!!!

ஜப்பானில் பனிப்பொழிவு இயல்பை விட மூன்று மடங்கு அதிகமானதால், 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடக்கு கடற்கரையின் நிலைமை இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. பல நகரங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய தீவு ஒன்றில், மின் நிலையம் அழிந்ததால், 20,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகளில் மின்சாரம், ஹீட்டர் போன்றவை செயல்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் மற்றும் பாலங்களில் அடி அடியில் பனி குவிந்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

“இது ஜப்பானின் முட்டாள்தனமான முயற்சி”… மிரட்டல் விடுத்த வடகொரியா…!!!!!

வடகொரியா தனது பிராந்திய எதிரி நாடான ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக அவ்வபோது ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஜப்பானுக்கும், வடகொரியாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து  வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அந்த “புதிய கொள்கையின் கீழ் வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் உறுதி அளித்துள்ளது”. இதனையடுத்து ஜப்பானின் புதிய ராணுவ கொள்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

நீங்க ரெடியா?…. குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.3 லட்சம் பரிசு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் தற்போது பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால் பல நாடுகளிலும் புதுப்புது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிறப்பு விகிதம் குறைந்து வரும் இந்த நேரத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஜப்பான் அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

சீன அரசாங்கத்தை விமர்சித்த ஜாக் மா?…. இப்போ எங்கிருக்கிறார் தெரியுமா?…

அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் சீன அரசாங்கத்தை விமர்சித்து விட்டு ஜப்பான் நாட்டில்  தஞ்சமடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா என்னும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் மீது அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது, அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் சீன அரசாங்கத்தை கடுமையாக சாடினார். அதன் பிறகு ஜாக் மாவை காணவில்லை. பொதுவெளியில் […]

Categories
உலக செய்திகள்

குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு…. எந்த நாட்டில்?… வெளியான தகவல்…!!!

ஜப்பானில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,99,636 குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 4.9% குறைவு என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஜப்பான் அரசு, குழந்தை பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பிற்கு மானியங்களை அதிகப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனினும் பிறப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கார்த்தியுடன் இணைந்த பிரபல இயக்குனர்…. இது நம்ம லிஸ்டிலியே இல்லையே…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை‌யே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.  கடந்து செப்டம்பர் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படம் வெளியானது. இந்த படத்தில் வதந்திய தேவனாக நடித்த கார்த்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இதற்கிடையில் மித்ரன் […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப இரைச்சலா இருக்கு”…. அமெரிக்க இராணுவ தளத்திற்கு எதிராக…. 14வது முறையாக தொடரப்பட்டுள்ள வழக்கால் பரபரப்பு….!!!

அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் நடக்கும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் மேற்கு பகுதியிலுள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஒலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது கெட்டப்பில் நடிகர் கார்த்தி…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்திலும் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்குவர இருக்கிறது. அத்துடன் அவர் சர்தார் திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். சர்தார் திரைப்படத்தில் இடம்பெற்ற கார்த்தியின் வயதான தோற்றம் ரசிகர்களை கவர்ந்ததால் 2ம் பாகம் படத்திலும் வயதான கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பது போல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் “ஜப்பான்”…. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் “ஜப்பான்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் “ஜப்பான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த “ஜப்பான்” திரைப்படம் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் “ஜப்பான்”…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!!

கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் 25-வது திரைப்படமாக ஜப்பான் திரைப்படம் உருவாகின்றது. இத்திரைப்படத்தை ராஜமுருகன் இயக்க அனு இமானுவேல் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் உறைந்த நாட்டு மக்கள்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பிரபல நாடான ஜப்பான் நாட்டில்  அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று  மதியம் 1.39 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில்  பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. டோக்கியோவுக்கு வடக்கே உள்ள இபராக்கி மாகாணங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும் கடுமையான நிலை அதிர்வை உணர்ந்துள்ளது. இதனால்  ஷிங்கன்சென்  புல்லட் ரயில்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “ஜப்பான்”… புதிய அப்டேட் வெளியீடு….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்து வருகிறது. இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் ரிலீசாகி விட்டது.   அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நடிகர் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜப்பானிலும் வசூல் வேட்டை நடத்தும் RRR…. எம்புட்டு வசூல் தெரியுமா…??

ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் சென்ற மார்ச் 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொமரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு என்ற சுதந்திரம் போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்து இருந்தனர். இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, […]

Categories
உலக செய்திகள்

“இதனால்தான் கடலில் தள்ளி விட்டேன்”…. குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்த…. 81 வயது முதியவர் ஜப்பானில் அதிர்ச்சி….!!!!

ஜப்பான் நாட்டில் ஹிரோஷிப் புஜிவாரா என்ற முதியவருக்கு 81 வயது ஆகின்றது. இவருடைய மனைவி 40 வருடங்களுக்கு முன்பு கால்களை இழந்துள்ளார். அதிலிருந்து ஹிரோஷி தான் அவருடைய மனைவியை கவனித்து வந்துள்ளார். தற்போது இவருக்கும் வயதானதால் மிகவும் சோர்வடைந்துள்ளார். இதனால் அவருடைய மனைவியை கவனிக்க முடியாததால் அவரை வீல் சேருடன் கடலில் தள்ளி விட்டுள்ளார். இதனையடுத்து ஹிரோஷியே தனது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலகசெய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை… மக்களே பாதுகாப்பாக இருங்கள்… ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர எச்சரிக்கை…!!!!!

வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் தென்கொரியா படைகளுடன் சேர்ந்து வருடம் தோறும் கொரிய எல்லை பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டு போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பையும் தாண்டி கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ்”… எந்த படம் தெரியுமா…????

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்படுகின்றது. இந்திய திரைப்படங்களை ஜப்பானில் ஆர்வமுடன் பார்க்கின்றார்கள். ரஜினியின் முத்து திரைப்படத்திற்கு ஜப்பான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல திரைப்படங்கள் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்டு வருகின்றார்கள். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தையும் ஜப்பானில் வெளியிட்டார்கள். அண்மையில் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த முதல் நாளே ஒரு கோடி வசூல் செய்தது. தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

மெய்சிலிர்க்க வைக்கும் காதல்…. பல வருடங்களாக… கடலுக்குள் மனைவியை தேடும் கணவர்….!!!

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் உருவான சுனாமியில் மாயமான தன் மனைவியின் உடலை 11 வருடங்களாக கணவர் தேடி வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் சுனாமி உருவாகி உலக நாடுகளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. இந்த பேரழிவில் சுமார் 19,759 நபர்கள் உயிரிழந்ததாகவும், 2500-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒனாகவா என்ற பகுதியில் வசித்த யூகோ சுனாமியில் மாயமானார். அவரின் கணவர் சுனாமியில் உயிர் […]

Categories
உலக செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக மீண்டும் வடகொரியா ஏவுகணை வீச்சு…? ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!!!

தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டது தென்கொரியாவும் தன்னுடைய பங்கிற்கு இரண்டு சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்னும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் அடுத்தடுத்த இரண்டு குறுகிய தொலைவு  பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதன் முறையாக…. பறக்கும் பைக் அறிமுகம்…. எத்தனை கோடி தெரியுமா?…

ஜப்பான் நாட்டில் ஏர்வின்ஸ் நிறுவனமானது முதல் முறையாக பறக்கும் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாகனம் சார்ந்த தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, தற்போது உலகிலேயே முதல் தடவையாக பறக்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்து எர்வின்ஸ் நிறுவனம் அசத்தியிருக்கிறது. டெட்ராய்டு என்ற இடத்தில் வாகன கண்காட்சி நடந்தது. அதில் பறக்கும் பைக்கை முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளனர். எர்வின்ஸ் நிறுவனம், இந்த பைக்கை தயாரித்திருக்கிறது. அந்த பைக்கானது, தொடர்ச்சியாக சுமார் 40 நிமிடங்கள் வரை பறக்கக்கூடிய […]

Categories
உலகசெய்திகள்

அக்டோபர் 1 ம் தேதி… ஜப்பானில் ரிலீஸ் ஆகும் அபர்ணா பாலமுரளி படம்…!!!!!!

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் அவரது நடிப்பில் திரைக்கு வந்த படம் சர்வம் தாள மையம் ஒழிப்பதிவாளர் ராஜுமேனன் இயக்கிய இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, வினித், குமரவேல் போன்றோர் நடித்திருக்கின்றனர். இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

14 வருடங்களுக்கு பிறகு…. திடீரென உயர்ந்த நூடுல்ஸ் விலை…. காரணம் என்ன….?

நூடுல்ஸ் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியாக உள்ளனர். ரஷ்யாவிற்கும் உக்கிரைனுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் உக்ரைன் தான் கோதுமை உற்பத்தியில் முன்னணி நாடாக திகழ்கிறது. ஆனால் போரின் காரணமாக உக்ரைனைலிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலும் முடங்கியதால் கோதுமையை அடிப்படையாக தயார் செய்யப்படும் நூடுல்ஸ் விலை தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த நூடுல்ஸ் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான்: முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இறுதி சடங்கில் மோடி பங்கேற்பு…. வெளியான தகவல்….!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமராக ஷின்ஜோஅபே (67) இருந்து வந்தார். கடந்த 2006-07, 2012-20 காலக் கட்டத்தில் அங்கு அவர் பிரதமர் பதவி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். சென்ற 2020 ஆம் வருடம் அவர் உடல்நல பிரச்சினையை காரணம் காட்டி பதவி விலகினார். எனினும் கட்சி செயல்பாடுகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கான தேர்தல் பிரசார கூட்டத்தில் சென்ற ஜூலை மாதத்தில் அவர் கலந்துகொண்டார். இதற்கென நாட்டின் மேற்கு […]

Categories
உலக செய்திகள்

மக்களே மது குடிக்க மறக்காதீங்க…. அரசின் கோரிக்கையால் அதிர்ந்துபோன மக்கள்……!!!!!

ஜப்பான் நாட்டில் வரி வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அதனை சரி செய்யும் நோக்கில் மக்கள் தொடர்ந்து மது அருந்த வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு வரி வருவாய் பெருக்க கையில் எடுக்கும் முதல் ஆயுதம் என்றால் அது மதுபானம் தான். கொரோனா நோய் பரவலுக்கு பின்பு ஜப்பானில் பொதுமக்களிடையே மது அருந்தும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக 40 முதல் 60 வயது உள்ளவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு நம்ம ஊரே பரவால்ல போல….! மது குடிக்க வாங்க…. அரசு அழைப்பு….!!!!

கொரோனா காலத்திற்குப் பிறகு ஜப்பான் நாட்டில் மது குடிக்கும் பழக்கத்தை ஏராளமான இளைஞர்கள் கைவிட்டுள்ளனர். இதனால் அந்நாட்டிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றுவதற்காகவும் வருவாய் இழப்பை சரி செய்வதற்காகவும் இளைஞர்களுக்கு மது குடிக்கும் போட்டியை நடத்த அரசு முன்வந்துள்ளது. இளைஞர்கள் மது குடிக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கும் வினோத நிகழ்வு ஜப்பானில் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக் பரவி வருகிறது.

Categories
உலக செய்திகள்

”அதற்கு மட்டும் நோ”…. தன்னை தானே வாடகைக்கு விட்ட வாலிபர்…. சம்பளம் எவ்வளவு தெரியுமா…..????

ஜப்பானில் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞர் ஒருவர் தன்னைத்தானே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியோவை சேர்ந்த ஷோஜி மோரி மோட்டோ என்ற இளைஞர் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புதிய தொழில் ஒன்றை தொடங்க வேண்டும் என்று சிந்தித்து கொண்டு இருந்தார். அப்போது தன்னைத்தானே வாடகைக்கு விடலாம் என்று சிந்தித்து தற்போது அந்த தொழிலை செய்து வருகிறார். கடைக்கு செல்வதற்கு விளையாடுவதற்கு எளிதான வேலை […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான்: தீவிரமடையும் ஒமிக்ரான் தொற்று…. அறிமுகமான புது தடுப்பூசி….!!!!!

உலகம் முழுதும் கொரோனா தொற்று இதுவரை முழுமையாக ஓயவில்லை. இதற்கிடையில் உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா வைரசின் 7வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அங்கு தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்படகூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு….!!!

திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா பகுதியில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. அதன் பிறகு ஒரு சில பகுதிகளில் நிலநடுக்கமானது 7 ஆகவும் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்குரிய நிதியுதவியை நிறுத்துங்கள்… ஜப்பானிடம் முன்பே கூறிய ரணில் விக்ரமசிங்கே… வெளியான தகவல்…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தங்கள் நாட்டிற்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்துமாறு 2007-ஆம் வருடத்தில் ஜப்பானிடம் கூறியதாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை நாட்டிற்கான நிதி உதவியை நிறுத்துங்கள் என்று ஜப்பான் நாட்டிடம் தற்போதைய அதிபர் அணில் விக்ரமசிங்கே கடந்த 2007 ஆம் வருடத்தில் கூறியதாக விக்கி லீக்ஸ் தெரிவித்திருக்கிறது. விக்கிலீக்ஸ், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு, ஜப்பான் அரசிற்கும் நடந்த உரையாடல் குறித்த ஆவணம் ஒன்றை வெளியிடப்பட்டிருக்கிறது. Newly elected President of […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே…. இறுதிசடங்கு குறித்து வெளியான தகவல்….!!!

பிரபல நாட்டின் முன்னாள் அதிபரின் இறுதிச்சடங்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த ஷின்சோ அபே கடந்த 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஜப்பான் நாட்டின் கடல் சார் முன்னாள் உறுப்பினர் தெத்சுயா யமகாமி என்பவரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செப்டம்பர் 27-ஆம் தேதி அபேவின் இறுதிச்சடங்கு நடைபெறும் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை தாக்கிய கொடூர குரங்கு…. தேடும் பணி தீவிரம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

பிரபல நாட்டில் குரங்கை வலைவீசி தேடி வருகின்றனர். ஜப்பான் நாட்டில் உள்ள யமக்குச்சி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் ஓகோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கடந்த 8-ம் தேதி ஒரு குரங்கு நுழைந்து பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கியது. அதன் பிறகு 4 வயது சிறுமியின் கால்களிலும் கொடூரமாக தாக்கியுள்ளதோடு, சில நபர்களையும் தாக்கியுள்ளது. இந்நிலையில் திடீரென மழலையர் பள்ளிக்குள் நுழைந்த குரங்கு அங்கிருந்த ஒரு 4 வயது சிறுமியையும் கொடூரமான […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில்….. ஜப்பானிய மூளை காய்ச்சல்….. 23 பேர் பலி….. பெரும் அதிர்ச்சி….!!!!

அசாமில் ஜப்பானிய மூளை காய்ச்சலால் ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தர். வெள்ள பாதிப்புகளுடன் ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரசின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன்படி, நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர் என அசாமின் தேசிய சுகாதார […]

Categories
உலக செய்திகள்

2025-ஆம் வருடத்திற்கான உலக தடகளப்போட்டி…. எந்த நாடு நடத்துகிறது?… வெளியான தகவல்…!!!

வரும் 2025 ஆம் வருடத்தில் நடக்கவுள்ள உலக தடகளப் போட்டியை ஜப்பான் நடத்தவிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசு, வரும் 2025-ஆம் வருடத்தில் நடக்கவுள்ள உலக தடகள போட்டியை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் இந்த உலக தடகள போட்டியை நடத்துவதற்கு சில நாடுகள் ஜப்பானுடன் போட்டிபோட்டன. அந்த நாடுகள், சிங்கப்பூர் மற்றும் நைரோபி சிலோசியா ஆகும். ஆனால், தற்போது ஜப்பான் தான் வரும் 2025-ஆம் ஆண்டிற்கான உலக தடகள போட்டியை நடத்தவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு…. அம்பலமான சதித்திட்டம்…!!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அது திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே கடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருக்கும் சதி திட்டம் தெரியவந்திருக்கிறது. ஷின்சோ அபேயை சுட்டு கொலை செய்த யமகாமி என்ற நபர் தங்கி […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்…. ஆளும் கட்சி வெற்றி ….. வெளியான சூப்பர் தகவல்….!!!

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது அதன்படி நாடாளுமன்ற மேலவை தேர்தல் ஜூலை பத்தாம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பிரதமர் பூமி ஷோ கிட்ட மேலான ஆளும் லிப்ரல் ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது அக்காட்சியின் மூத்த நிர்வாகி முன்னாள் பிரதமனுமான சென்று அவை பல நகரங்களுக்கு சென்று ஆளும் கட்சிக்கு வாக்கு சேகரித்து வந்தார். அப்போது கடந்த 8 ஆம் தேதி நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்… மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் கட்சி வெற்றி…!!!

ஜப்பான் நாட்டில் சுட்டு கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் கட்சி, நாடாளுமன்ற மேலவை தேர்தலில் வெற்றி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஒரு நபரால் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு அனுதாபங்கள் அதிகரித்தது. இந்நிலையில் தேர்தலில் மொத்தமாக இருந்த 248 இடங்களில் அவரின் கட்சி அதிகப்படியான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது பிரதமரான கிஷிடோ […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. அமைதியான முறையில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்…. வெளியான முக்கிய தகவல்….!!!

நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் நாடாளுமன்ற மேல் சபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தல் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து ஏற்கனவே எல்டிபி கட்சி வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பாகவே கூறப்பட்டிருந்தது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஷின்ஜோ அபே மரணம்….. தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை…!!!

ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஷின்ஜோ மரணம்…. “இன்று துக்கம் நாள்”…. அரைக்கம்பத்தில் தேசியக்கொடி…!!!

ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

மரணமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர்… டோக்கியோவிற்கு வந்தடைந்த உடல்…!!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த நிலையில் அவரின் உடல் டோக்கியோவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே நேற்று காலை நேரத்தில் நாரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்புறம் நின்ற மர்ம நபர் ஒருவர், திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

“இதயத்தை துளைத்த குண்டு” அதிக இரத்தம் வெளியேறியதால் மாரடைப்பு…. அபேவின் மரணத்திற்கு மருத்துவர் விளக்கம்…!!!

பிரபல நாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே (67) இருந்தார். இவர் நேற்று நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் உறுப்பினராக இருந்த யகாமி (41) என்பவர் தான் வீட்டில் தயாரித்த துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்தார். அதன் பின் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் திடீரென அபே மீது துப்பாக்கிச் சூடு […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்…. ஜோ பைடன் ஆழ்ந்த இரங்கல்….!!!

ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் மறைவு… கடும் வேதனையடைந்துள்ளேன்… பிரதமர் மோடி உருக்கம்…!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மரணமடைந்ததை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஜப்பான் நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற மேல் சபை தேர்தல் நடைபெற இருப்பதால், நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே நாரா என்னும் நகரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மயக்கம் அடைந்த வரை பாதுகாவலர்கள் உடனடியாக ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமரை சுட்டு கொன்ற நபர்…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு வாக்குமூலம்…..!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் கடந்த 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். அதாவது சாலை பகுதியில் நடந்த அந்நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதனால் அபேவின் முதுகுப் பக்கத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் பலி….. வெளியான அறிவிப்பு…. சோகம்…..!!!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். சாலைப்பகுதியில் வைத்து நடந்த அந்நிகழ்ச்சியில் ஷின்சோஅபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதன் காரணமாக ஷின்சோஅபே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து பணியிலிருந்த […]

Categories
உலக செய்திகள்

“சைபர் மிரட்டல்” 1 வருடம் சிறை தண்டனை…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

இணையதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்புபவர்களுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ஹின்னா ஹிமுரா (20)இணையதளத்தில் ஒருவர் அவதூறான கருத்துக்களை பரப்பியதால் மனம் உடைந்து கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இணையதளத்தில் அவதூறான கருத்துக்களை பரப்புபவர்கள் மற்றும் சைபர் மிரட்டல் விடுப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான்: முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிசூடு…. கையும் களவுமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் கடந்த 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். அதாவது சாலை பகுதியில் நடந்த அந்நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதனால் அபேவின் முதுகுப் பக்கத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நாரா எனும் இடத்தில் பொதுக்கூட்டம்உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து ஷின்சோ அபே கீழே விழும்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தோடியதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். […]

Categories

Tech |