ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஆய்ச்சி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இறந்து போன கோழிகளை பரிசோதித்தப் போது அவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. இங்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பறவை காய்ச்சல் வந்ததாக […]
Tag: ஜப்பான் நாட்டில்
பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடாவிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து புமியோ கிஷிடா தனிமைடுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகின்றார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்பிற்குள்ளான பல்வேறு விஷயங்களில் மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது. ஜப்பான் நாட்டில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்கொலைகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது 2020 மார்ச் மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஜப்பானில் 800-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து கடந்த கால தற்கொலை நிலவரங்களைக் கொண்டு ஒப்பிடுகையில், ” இந்த நிலவரம் கடும் அதிகரிப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேரிடர் […]
ஜப்பான் நாட்டில் இன்று ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்நோயால் தற்போது 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டில் முதல் முறையாக டோக்கியோவில் இன்று ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் […]
தென் ஜப்பானில் சகுராஜிமா என்ற எரிமலை திடீரென வெடிக்க தொடங்கியுள்ளது. தெற்கு ஜப்பான் நாட்டில் ககோஷிமா என்ற பகுதியில் உள்ள சகுராஜிமா என்ற எரிமலை திடீரென வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8 மணியளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. வெடிக்கப்பட்ட எரிமலையிலிருந்து சிவப்பு-சூடான பாறைகள் மற்றும் சாம்பல்கள் வெடிப்பதை உள்ளூர் ஊடகங்கள் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர். […]
தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் ஒரே நாளில் 1 லட்சத்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள மக்கள் தற்போது கொரோனாவின் 7-வது அலையை சந்தித்து வருகின்றனர். அங்கு வேகமாக பரவும் பி.ஏ 5 ஒமைக்ரான் வகை கொரோன நோய் தொற்று தொடந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு […]
பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே ஆவார். இவருடைய வயது 67 ஆகும். கடந்த 2006-07 மற்றும் 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானின் பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசத்தொடங்கிய சில மணி நேரத்தில் […]
ஜப்பான் நாட்டில் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான ‘இச்சிஜோ கோமுடென்’ மிதக்கும் வீட்டை உருவாக்கியது. இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று அந்நிறுவனம் கூறுகின்றது. இந்த வீட்டின் அமைப்பு தனித்துவமானது என அந்நிறுவனம் கூறுகின்றது. ஏனெனில் இந்த வீடு நீர்ப்புகா தன்மையை கொண்டுள்ளது. இதில் தண்ணீர் அளவு அதிகரித்தவுடன், வீடு மிதக்கத் தொடங்குமாம். மேலும் இந்த வீடு சாதாரண இல்லம் போல் தெரிகின்றது, ஆனால் அதைச் சுற்றிலும் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதும், வீடு […]