துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுடப்பட்ட ஷின் சோ அபே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Tag: #ஜப்பான்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உரையாற்றும்போது, அவரது மார்பில் சுடப்பட்டதில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மேற்கு ஜப்பானிலுள்ள நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இவரை மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மார்புப் பகுதியில் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் ஷின்சோ அபே கீழே சரிந்தார். இதனையடுத்து அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]
ஜப்பான் நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள இஷிகவா என்ற மாகாணத்தில் சுசு நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 19ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து தொடர்ந்து நில சரிவு ஏற்பட்டால் பொருட்கள் சேதமாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் […]
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு மக்களை பூமி தாங்கும் என்று கூறியிருக்கிறார். ஜப்பான் நாடு வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் கண்ட நாடாக இருக்கும் ஜப்பானில் தொடர்ச்சியாக மக்கள்தொகை குறைந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அதிகமாக முதியவர்கள் தான் இருக்கிறார்கள். எனவே, பிறப்பு விகிதம் ஜப்பானில் அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஜப்பான் என்ற ஒரு நாடு காணாமல் போகும் என்று டெஸ்லா […]
ஜப்பான் நாட்டின் ஆய்வாளர்கள் கெட்டுப்போன உணவுகளிலிருந்து சிமெண்ட் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்கள். கான்கிரீட் தயாரிக்க மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்படையக் கூடிய வாயுக்கள் வெளியேறுகின்றன. இதனால், சிமெண்டிற்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஒன்றை கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெற்றியை நெருங்கி விட்டனர். அதாவது வீடுகளில் மீதமாகும் உணவுகள் மூலம் சிமெண்டை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். வீண் செய்யப்படும் உணவுகளில் மூன்று […]
ஜப்பான் நாட்டின் விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் ஆமை புகுந்ததால் விமானங்கள் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் இருக்கும் நரிடா என்னும் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் ஒரு ஆமை புகுந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த விமான நிலயத்திலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விமான நிலையத்திற்கு அருகே ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. அங்கிருந்து தான் ஆமை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோ எடை கொண்டிருந்த அந்த ஆமையை வலை போட்டுப் […]
ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை இருந்துள்ளது. அதற்காக 12 லட்சம் ரூபாய் செலவழித்து அவர் நாய் போல மாறியுள்ளார். ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற இளைஞர், அண்மையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அழகான நாய் ஒன்று நடப்பது, குறைப்பது என பல சேட்டைகளை செய்கின்றது. இறுதியில் அந்த நாய் பேசத் தொடங்குகிறது. அதன்பிறகுதான் அந்த இளைஞர் நாய் வேடத்தில் இருந்தார் என்பது […]
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஜப்பானில் இருந்து தங்களுக்கு பொருளாதார உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அதிபர் கோட்டபாய ராஜபக்சே காணொலிக் காட்சி மூலமாக பேசியிருக்கிறார். அப்போது, அவர் தெரிவித்ததாவது தங்கள் நாட்டின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய நாடு. இலங்கை, தற்போது சந்தித்திருக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதத்தில் […]
ஜப்பான் நாட்டிலுள்ள டோ என்ற டுவிட்டர் பயனாளர் ஒருவருக்கு நீண்டகால விசித்திர கனவு ஒன்று இருந்துள்ளது. அதாவது அவர் தனது வாழ்க்கையில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ள நாய் போன்று உருவம் கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதற்கான முயற்சியில் இறங்கிய அவர், உண்மையான நாய் வடிவம் கொண்ட உடையை ஜெப்பெட் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்க ஏற்பாடு செய்துள்ளார். அந்த நபருக்காக தனித்துவம் வாய்ந்த நாய் வடிவம் கொண்ட உடைய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்களை […]
குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டின் தலைநகருக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாட் என்ற நாற்கர பாதுகாப்பு அமைப்பில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நான்கு நாடுகள் சேர்ந்து செயல்படுகிறது. இந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நேரடியாக கலந்து கொள்ளும் இரண்டாவது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் இன்று ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, […]
இந்தியா, ஜப்பான்,அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்துகொள்கிற குவாட் 2-வது உச்சிமாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று துவங்குகிறது. இம்மாநாடு இந்தோ-பசிபிக் பிராந்திய விஷயங்கள், பரஸ்பர ஆர்வமுள்ள உலகளாவிய பிரச்சினைகள் பற்றி தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோகிஷிடா அழைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா போன்றோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆஸ்திரேலியாவின் […]
அணு உலையை செயலிழக்க செய்யும் பணிகளில் டெக்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஜப்பானில் கடந்த 2011 ம் வருடம் மார்ச் 11 ஆம் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாக கருதப்பட்டு வந்த புகுஷிமா டாய்ச்சி அணு உலைக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் கிடைக்காமல் போனது. மேலும் இதனால் 6 யூனிட்டுகளில் 3 யூனிட்கள் சேதமடைந்து இருக்கின்றன. இதனால் இதனை சுற்றியுள்ள […]
குவாட்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் நாட்டிற்கு சென்றிருக்கும் ஜோபைடன் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அமைக்கப்பட்ட குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பினுடைய உச்சிமாநாடானது, ஜப்பான் நாட்டில் வரும் 24-ஆம் தேதி அன்று நடக்கவிருக்கிறது. அதில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசவிருப்பதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருக்கிறார். குவாட் அமைப்பில் இருக்கும் […]
உயர்நிலை பள்ளி கூடத்தில் சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் மத்திய பகுதியில் யமனாஷி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் மாணவிகள் கலந்து கொள்ளும் 5 ஆயிரம் மீட்டர் நடை பந்தய போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்தயத்திற்கு கலந்து கொள்வதற்கு முன் 3 மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதனால் பயந்து போன போட்டி ஏற்பாட்டாளர்கள் அந்த 3 […]
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் யோனாகுனி என்னும் நகரத்தில் திடீரென்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. யோனாகுனி நகரத்தின் தென்மேற்கு பகுதியில் சுமார் 68 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால், ஏதும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஜப்பான் மக்கள் எப்போதுமே சுறுசுறுப்புக்கு பேர் போனவர்கள். அவர்களுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2011 ஆம் ஆண்டு சுனாமி வந்து நாடே அழிந்த போது 2 வருடத்தில் அதிலிருந்து மீண்டு வந்தனர். அந்த நாட்டில் பொதுவாக பயன்படுத்துகின்ற ரயிலில் கூட நேரத்தை மிகவும் பின்பற்றுகின்றனர். அங்கு வரும் பயணிகள் ரயில் சில நிமிடம் தாமதமாக வந்தால் அந்த ரயிலின் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்படுவார். அதுமட்டுமல்லாமல் அவரின் சம்பளத்தில் இருந்து 30 […]
வடகொரியா இந்த வருடத்தின் 15-வது ஏவுகணையை இன்று பரிசோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பக்கத்து நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரியா அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது. இந்நிலையில் இந்த வருடத்தில் 15-ஆம் முறையாக இன்று அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஜப்பான் நாட்டின் […]
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டிற்கு என தனித்தனி சிறப்பு இருக்கும். அந்நாட்டின் நடைமுறைகளும் வித்தியாசமாக இருக்கும். அப்படிதான் ஜப்பானில் பல வித்தியாசமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பொதுவாக ஜப்பானில் நேரம் என்பது மிகவும் முக்கியம். அங்கிருக்கும் அனைவரும் நேரத்தை மிகவும் மதிப்பு மிக்கதாக கருதுகின்றனர். குறிப்பாக ஜப்பானில் ஓடும் ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரும். ஒருவேளை 2 அல்லது 3 நிமிடங்கள் தாமதமாக வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?. அப்படி ரயில் தாமதமாக […]
பிரபல நாட்டில் இரட்டை தன்மை பயன்பாடு கொண்ட ஒரு வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர். இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பது நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் இருக்கிறது. அந்த வகையில் வித்தியாசமான தொழில் நுட்பங்களை கண்டுபிடிப்பதில் ஜப்பான் நாடு பெயர் பெற்றது. இவர்கள் இரட்டை பயன்பாட்டுத் தன்மை கொண்ட ஒரு மினி பேருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மினி பேருந்து சாலை மற்றும் ரயில்வே தண்டவாளத்தில் இயங்கும். அதாவது சாலையில் ஓடும் போது மினி பேருந்து ரப்பர் […]
ஜப்பான் நாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ஜப்பான் நாட்டில் இளமையானவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அதற்கு பதிலாக முதியவர்கள் தான் அதிகமான குற்றங்களில் ஈடுபடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் ஜப்பான் ஜெயிலில் கைதிகளுக்கு நல்ல அறை வசதி, தரமான உணவு மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை அரசாங்கம் முறையாக செய்கிறது. இதனால் தான் வயதானவர்கள் அதிக குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதன்பிறகு பொதுவாக நாம் வீடு அல்லது […]
ஜப்பானில் இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள குழந்தை ரோபோ ஒன்றை பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக உருவாக்கியுள்ளார்கள். ஜப்பானில் பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பிடியாராய்டு என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை ரோபோவை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரோபோ மருத்துவர்கள் குழந்தைகளுக்கு பல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களிடமிருந்து வரும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது இதய செயலிழப்பு மற்றும் வலிப்பு […]
உலகத்தில் தண்ணீர் என்பது அனைவருக்குமே அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு தண்ணீர் இல்லையெனில் எதுவுமே இல்லை என்று கூட சொல்லலாம். அதிலும் குறிப்பாக குடிப்பதற்கு தண்ணீரின்றி நம்மால் வாழவே முடியாது. ஆனால் ஜப்பான் காரர்கள் நிறைய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பது போன்று தற்போது புதிதாக ஒன்றை கண்டறிந்துள்ளனர். அது என்னவென்றால் ஜப்பான் காரர்கள் தண்ணீரை நேரம் பார்ப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டில் ஒசாகா என்ற ஊரில் ஒசாகா ஸ்டேஷன் சிட்டி என்ற ஒரு […]
ஜப்பான் நாட்டில் 26 நபர்களுடன் சென்ற சுற்றுலா படகு கடலில் மூழ்கிய நிலையில் நேற்று வரை 11 நபர்களின் சடலம் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் காஸு1 என்ற படகு 26 நபர்களுடன் மாயமானது. எனவே, அந்த கடல் பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று வரை பத்து நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு, ஒரு குழந்தையின் சடலமும் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பகுதியில் படகை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஷிரேடோகோ என்ற தீபகற்பதிற்கு அருகில் […]
ஜப்பானில் 24 சுற்றுலாப் பயணிகளுடன் மாயமான படகை தேடும் பணியில் ஆறு ரோந்து படகுகள் மற்றும் 5 குட்டி விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இவற்றின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 10 மணி நேரம் கழித்து படகில் பயணம் செய்ததில் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. படகு மாயமாவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அந்த படகில் இருந்து அவசர உதவிக்கு அழைப்பு வந்ததாகவும், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்தின் […]
ரஷ்யாவுடன் ஜப்பான் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. உக்ரைனுடனான போர் பதற்றம் தொடர்கின்ற நிலையில் ரஷ்யாவும் ஜப்பானும் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த தகவலை ஜப்பானின் மீன்பிடி நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி ரஷ்ய ஆறுகளில் பிறந்த சால்மன் (Salmon), ட்ரவுட் (Trout) வகை மீன்களைப் பிடிப்பதற்கு அந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. டோக்கியோவும் மாஸ்கோவும் இந்த மாதத் தொடக்கத்தில் மீன்பிடித்தல் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தையானது ஒப்பந்தத்தில் முடிந்திருக்கிறது.2,050 டன் சால்மன், ட்ரவுட் […]
உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 59 நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் புதின் கவரப்படுத்தினார். இதுதொடர்பான செய்தி ஜப்பானை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் உக்ரைனுக்கு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முகக்கவசங்கள் மற்றும் டிரோன்களை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்து இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ராணுவம் அமைச்சகம் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் இருப்பதாவது “உக்ரைன் அரசுக்கு என்பிசி சூட்டுகள்(அணு,உயிரி, இரசாயன ஆயுததாக்குதலுக்கு எதிரானவை), முகக்கவசங்கள், டிரோன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது நாட்டை பாதுகாக்க உக்ரைனியர்களின் போராட்டம் தொடர்கிறது. இதன் காரணமாக […]
வட கொரியா அணு ஆயுதங்களை தாங்கிசெல்லும் ஏவுகணைகளை சோதனை மேற்கொண்டு உலக நாடுகளுக்கு அவ்வபோது அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தொலை தூரம் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என்று பல விதமான ஏவுகணைகளை வட கொரியா பரிசோதித்து வருகிறது. அதாவது அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் அடிப்படையிலும் தங்களது ஆயுத பலம் குறித்து உலக நாடுகளுக்கு வெளிப்படும் வகையிலும் இந்த ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. […]
உலக அளவில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை உடைய நாடுகள் பட்டியலில் ஜப்பான் மற்றும்சிங்கப்பூர் தொடர்ந்து முதலாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஒருநாட்டு மக்கள் தங்களது பாஸ்போர்ட்டைக் கொண்டு விசா இன்றி எத்தனை நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பது போன்ற சில விடயங்களின்படி சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்னும் விடயம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் Henley Passport Index சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. ஜப்பான் மற்றும் சிங்கப்பூரின்பாஸ்போர்டுடன் 192நாடுகளுக்கு விசாஇன்றியே போகலாம் என்பதால், அந்த 2 நாடுகளுமே […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் செய்து வரும் அத்துமீறிய செயலைக் கண்டித்து பல நாட்டு தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சர்வதேச சமூகத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை பிறப்பித்திருக்கும் அதே வேளையில் ஜப்பான் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதியாக செயல்படுத்தும். சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்யாவின் இந்த […]
இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ரஷ்யாவின் ஷக்லின் தீவில் உள்ள கடல் பகுதியில் அதிக அளவில் உள்ளது. ரஷ்ய எண்ணெய் நிறுவனம் இந்த இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் அரசும் ஷக்லின்-2 என்ற இந்தத் திட்டத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுகிறது. ஜப்பானின் இரண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் மொத்தம் 22.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு இந்த திட்டத்தின் மூலம் அதிக அளவில் இயற்கை […]
தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 18 மாகாணங்களில் அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதும் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு இருந்தது. […]
உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் வகையிலான ரோபோ ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா தொற்றினை தொடர்ந்து உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்கு ஊழியர்கள் தயங்கி வருகின்றனர். இதனால் அங்கு ஊழியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பணியாளர்களின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக யமாட்டோ ஸ்கேல் என்ற நிறுவனமானது புதிய ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த ரோபோ நூடுல்ஸ், சிக்கன், காய்கறி என விதவிதமான உணவு பொருட்களை எல்லாம் மிக நேர்த்தியாக பேக் செய்யும்படி […]
ஜப்பானில் மாணவிகள் பள்ளியில் குதிரைவால் சடை அணிந்து வர தடை செய்யப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் இருக்கும் பள்ளிகள், மாணவிகள் இனிமேல் பள்ளிக்கூடத்திற்கு குதிரைவால் சிகை அலங்காரம் செய்து வரக்கூடாது என்று தடை செய்திருக்கிறது. அதாவது குதிரைவால் அலங்காரம் செய்து வந்தால் மாணவிகளின் கழுத்துப்பகுதி தெரியும் வண்ணம் இருக்கிறது. இது மாணவர்களுக்கு ஆபாசத்தை தூண்டும் விதத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஒரு நடுநிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரான மோடோகி சுகியாமா தெரிவித்ததாவது, நான் ஒரு போதும் இவ்வாறான […]
உக்ரைனில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளேஸ்டேஷன் மற்றும் நிண்டெண்டோ ஆகிய ஜப்பான் நிறுவனங்கள் ரஷ்யாவில் ஏற்றுமதி செய்வதை நிறுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது . ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனினும், ரஷ்யா பின்வாங்காமல், தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான் நாட்டின் பிளேஸ்டேஷன் மற்றும் […]
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு எதிராக பேரணியாக மக்கள் சென்றிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11 வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்நிலையில் உக்ரைனுக்கு ஜப்பான் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது […]
அணு உலையின் கழிவுகளை கடலில் வெளியேற்றும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி பேரலை ஏற்பட்டது.அந்த பேரலையால் ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குமுன் 1986-ஆம் ஆண்டு சுரப்பியில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட விபத்தை விட புகுஷிமா அணு உலை விபத்து மிகப்பெரிய விபத்தாக பதிவாகியுள்ளது. இதனால் புகுஷிமா கடற்பரப்பில் கதிர்வீச்சு கலந்ததால் அங்கு மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் […]
ஜப்பானில் மோசமான வானிலை நிலவுவதால் விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் மோசமான வானிலை நிலவுகிறது. மேலும் ஜப்பானில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது திங்கள் கிழமை அன்று ஹோக்கைடோவில் வினாடிக்கு 138 அடி வேகத்தில் காற்று வீசியுள்ளது. மேலும் மூன்று மணி நேரத்தில் 9 அங்குலங்கள் வரை பணி விழுந்துள்ளது. இதனை அடுத்து தீவின் தலைநகரான சப்பொரோ நகரம் உள்பட பல பகுதிகளில் பணியினால் 32 அங்குலமாக […]
உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஜப்பான் பிரதமர் மற்றும் பிரிட்டன் பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]
தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் ஹோன்சு தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல்50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.இங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீடிரென தீ பிடித்து தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். மேலும் ஒரு சில தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் […]
ஜப்பானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர்களால் சுமார் 1300 வருடங்களாக உலகின் மிக பழமையான ஹோட்டல் ஒன்று இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் Nishiyama Onsen Keiunkan எனப்படும் ஹோட்டல் ஒன்று சுமார் 1300 ஆண்டுகளாக இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹோட்டல் கிபி 750 ல் தொடங்கப் பட்டுள்ளதாகவும் இதனை ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர்கள் நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹோட்டல் ஜப்பானிலுள்ள யமனாஷி பகுதியில் உள்ளதாகவும், அந்நாட்டிற்கு […]
ஜப்பான் இளவரசி யாகோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ ஆவர். இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யகோவிற்கு நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு […]
ஜப்பானில் உள்ள கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் மாயமாகியுள்ளது. ஜப்பானில் உள்ள மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்திலிருந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் விமானம் ஒன்று புறப்பட்டது. இதன் பெயர் எப் 15 ஜெட் விமானம். இது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று மாயமானது. இந்த விமானம் ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதனுடன் […]
சுமார் 75 வருடங்களுக்கு முன் போரில் மூழ்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் என்ற போர்க்கப்பல், தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 1944 ஆம் வருடத்தில் அமெரிக்கா, ஜப்பானை எதிர்த்து போரிட்டது. அப்போது, யுஎஸ்எஸ் என்ற அமெரிக்க போர்க்கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த போர்க்கப்பல் உலகிலேயே மிகப்பெரிதாக கருதப்பட்டது. ஜப்பான் கடற்படையுடன் நடந்த மிகக்கடும் போரில், இந்த போர்க்கப்பலை, ஜப்பான் நாட்டின் யாமோடா தாக்கியது. இதில், அமெரிக்க போர்க்கப்பல் சுமார் 186 நபர்களுடன் தண்ணீரில் மூழ்கியது. சுமார் 75 வருடங்களுக்கு […]
ஜப்பானில் வெந்நீரில் வேகவைத்து பின்னர் 2 நாட்கள் ஊறவைக்கப்பட்ட கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பீர் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில் நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகள் முதலில் வெந்நீரில் வேக வைக்கப்படுகிறது. அதன்பின்பு அவைகள் 2 நாட்கள் ஊற வைக்கப்படுகிறது. இதனையடுத்து அதிலிருந்து எடுக்கப்படும் கரப்பான் பூச்சிகள் கபுடோகாமா என்ற பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் நிலையில் அதனை ஜப்பானியர்கள் பீராக மாற்றுகிறார்கள். இந்த பீரை ஜப்பானியர்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து குடித்து வருகிறார்கள். இதற்கு […]
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஜப்பான் அரசாங்கம் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஜப்பானிலுள்ள தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுடைய 80 லட்சம் சிறுவர்களுக்கு […]
ஐ.நா, பீஜிங் மாகாணத்தில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக முதல் தடவையாக தபால் தலை வெளியிட்டிருக்கிறது. சீனாவின் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்காக ஐ.நாவின் தபால் நிர்வாக பிரிவானது, முதல் தடவையாக தபால் தலை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடக்கிறது. இந்நிலையில், ஹாக்கி, பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் பொறிக்கப்பட்ட தபால் தலைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சாப்பாடு தான் முக்கியம், அணு ஆயுதங்கள் இல்லை என்று கூறிய நிலையில், மீண்டும் அந்நாடு ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணைகள் சோதனையை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும். குறிப்பாக, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொள்ளும். இதனிடையே புத்தாண்டன்று, நாட்டு மக்களிடம் அதிபர் கிம் ஜாங் உன் பேசியதாவது, “தற்போதைய பொருளாதார நிலையில், […]
ஜப்பானில் தண்டவாளத்திலும், சாலையிலும் இயங்கக்கூடிய பார்ப்பதற்கு மினி பேருந்து போல் இருக்கும் வாகனத்தை கண்டறிந்துள்ளார்கள். ஜப்பானில் தண்டவாளத்திலும், சாலையிலும் இயங்கக்கூடிய பார்ப்பதற்கு மினி பேருந்து போல் இருக்க கூடிய வாகனத்தை கண்டறிந்துள்ளார்கள். இந்த இரட்டை பயன்பாட்டைவுடைய மேற்குறிப்பிட்டுள்ள வாகனம் சாலையில் செல்லும்போது ரப்பர் டயரில் இயங்குகிறது. அதேபோல் தண்டவாளத்தில் செல்லும்போது ரப்பர் டயரிலிருந்து இரும்பு சக்கரங்கள் கீழிறங்கி ரயில் போல் இயங்குகிறது. இந்த 21 பேர் பயணிக்கக்கூடிய மினி பேருந்து சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் […]