சீனாவில், வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை பார்க்க, எங்கள் நாட்டின் அரசு அதிகாரிகள் வரமாட்டார்கள் என்று ஜப்பான் அறிவித்திருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ஜப்பான் நாட்டின் சார்பில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆம் வருடத்திற்கான தலைவர் மற்றும் தங்கள் நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் இருவரும் தான் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சீன நாட்டில் உய்குர் முஸ்லிம்களை எதிர்த்து மனித உரிமை மீறல் […]
Tag: #ஜப்பான்
ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி, தான் தங்கியிருந்த ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின், பிரபல பாடகியான சயாகா கன்டா, மாட்சுடா சீகோ என்ற பிரபல பாடகரின் மகளாவார். இவர், கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனவே, அவரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த சமயத்தில் அவரின் […]
ஜப்பான் அரசு கடந்த 2019ஆம் வருடத்திற்கு பின் இன்று மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது. ஜப்பான் நாட்டில் கடந்த 2019 வருடத்திற்கு பின் இன்று குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டின் பிரதமரான கிஷிடா-கியோடா ஆட்சியில் தற்போது தான் முதல்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அதாவது கடந்த 2019 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று ஒரே குடும்பத்தில் உள்ள நான்கு நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. […]
ஜப்பானில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 27 நபர்கள் மூச்சுத்திணறி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் ஒசாக்கா மாகாணத்தின் கிஷிமோடோ என்னும் நகரத்தில், இருக்கும் 8 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடத்தில், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இக்கட்டிடத்தின், 4-ஆம் தளத்தில் இன்று காலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதன்பின்பு, கட்டிடம் முழுக்க தீ பரவியதில் பலர் தீயில் மாட்டிக்கொண்டனர். அதன்பின்பு தீயணைப்புத்துறையினர், அங்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். […]
ஜப்பானில் புதிய வகை குட்டி ஸ்கூட்டர்கள் காற்றடைத்து ஓட்டி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் புதிய வகை குட்டி ஸ்கூட்டர்கள் காற்றடைத்து ஓட்டி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹிரோகி சட்டோ என்பவர் பொய்மோ ( POIMO ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சூட்கேஸ் வடிவில் இருப்பதால் இதனை கைகளிலேயே எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். அதோடு மட்டுமில்லாமல் பலூனுக்கு காற்றடிப்பது போல் இந்த […]
ஜப்பானில் காற்றடைத்து ஓட்டிச் செல்லக்கூடிய புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை உருவாக்கியுள்ளனர். ஜப்பானில் காற்றடித்து ஓட்டிச் செல்லக்கூடிய புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை உருவாக்கி இருக்கின்றனர். பொய்மொ என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த ஸ்கூட்டரை டோக்கியோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஹிரோகி சட்டோ என்பவர் தயாரித்துள்ளார். சூட்கேஸ் சைசில் இருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, எளிதாக எங்கு வேண்டுமானாலும் கைகளிலே தூக்கிச் செல்லலாம். மேலும் தேவைப்படும் இடத்தில் பலூனுக்கு காற்றுடைடிப்பது போல் அடைத்து பயன்படுத்தலாம். தற்போதைக்கு மணிக்கு […]
ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிப்பது அருவருப்பை ஏற்படுத்துகிறது. பானங்கள் உடலுக்கு நல்லது என நினைத்தாலும் சில பானங்களின் மூலப்பொருள் எது என்று நமக்கு வெளியில் தெரிவதில்லை. இந்த உலகத்தில் சாப்பிடுவதற்கு பழங்கள், காய்கறிகள் அல்லது இறைச்சி என பல்வேறு உணவுப் பொருட்கள் இருக்கிறது. எனினும் சீனா போன்ற நாடுகளில் பூச்சிகள், ஈக்கள் போன்றவற்றை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் உணவு முறைகள் நமக்கு வித்தியாசமானதாக தோன்றும். ஆனால் அது அவர்களின் உணவு கலாச்சாரத்தின் […]
பிரதமர் இல்லத்தில் இதுவரை பேய் பிசாசை பார்க்கவில்லை என ஜப்பான் பிரதமர் பேட்டியளித்துள்ளார். ஜப்பானில் கடந்த 1963ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது.அப்போது பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூத்த அதிகாரி உட்பட பலர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அந்த அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் பேய்கள் இருப்பதாக பல கட்டுக்கதைகள் எழுந்து வந்தன. இதனால் ஜப்பானில் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த ஷின்ஜோ அபே, அவருக்குப் பின்னர் ஒரு ஆண்டாக […]
ஜப்பான் நாட்டில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், 5-என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள வட கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இபாரகி என்னும் பகுதியில் தான் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் பதறியடித்து வெளியில் ஓடி வந்துள்ளனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால், எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், சுனாமிக்கான எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைக் கண்டறிய புதிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தொற்று அறிகுறியில்லாமல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக புதிய தொழில்நுட்ப முறை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கயோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, நெருப்புக்கோழியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களை முககவசத்தின் மீது தடவ வேண்டும். இதனை அடுத்து அதன் மீது புறஊதாக் கதிர்களை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பொழுது முககவசம் ஒளிருமானால் அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை […]
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானில் நேற்று காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக காகோஷிமா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவாகியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கிழக்கு தீர்க்க ரேகையில் 129.4 டிகிரியிலும், வடக்கு அட்சரேகையில் 29.4 டிகிரியிலும் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் நிலநடுக்கம் சில பகுதிகளில் […]
பிரிட்டன் அரசு ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களோடு ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. பிரிட்டனில் புல்லட் ரயில்களை இயக்கக்கூடிய பணிகள் தீவிரமாக நடக்கிறது. அதன்படி சுமார் 360 கிமீ அமெரிக்க டாலர்கள் செலவில், 54 மின்சார ரயில்களை தயாரிப்பதற்காக பிரிட்டன் அரசு, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. லண்டனில் புறப்பட்டு, லிவர்பூல், மான்செஸ்டர் மற்றும் கிளாஸ்கோ நகரங்களுக்கு இடையில் இந்த அதிவேக […]
ஜப்பானில் இன்று அதிகாலை நேரத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இருக்கும் புகுஷிமா என்னும் மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும், சில இடங்களில் 20 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதே பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் அரசு ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால், இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று முதன் முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. அதன் பின்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று முதல் ஓமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, தற்போது அங்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியா […]
ஜப்பான் அரசு ஓமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறது. ஜப்பான் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் அங்கு குறைவான நபர்கள் தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். ஆனால் மே மாதத்திற்குப் பின் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தற்போது, மொத்த மக்கள் தொகையில் 77% நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் ஜப்பானிலும் இரண்டு […]
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் மீது பாரீஸ் நீதிமன்றத்தில் சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 39 வயது நபர் Vincent Fichot, டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்த சமயத்தில், மைதானத்திற்கு அருகே உண்ணாவிரதம் இருந்து அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரின் மனைவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில், அந்த பெண், தன் கணவரிடமிருந்து இரு பிள்ளைகளையும் எங்கோ கடத்தி சென்றுவிட்டார். இதனால், […]
ஜப்பான் நாட்டில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பாதிப்பு ஒரு சுற்றுலா பயணிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டிற்கு சமீபத்தில் நமீபியாவிலிருந்து ஒரு சுற்றுலா பயணி வந்திருக்கிறார். அவருக்கு ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளதாவது, ஜப்பான் நாட்டிற்கு வந்த அந்த சுற்றுலா பயணிக்கு, நேற்று முன்தினம் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோன் வைரஸ் பரவ […]
ஜப்பானில் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் ஹோன்ஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகிய மிகவும் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறதென்றால் அந்நாடு புவித்தட்டுகள் அடிக்கடி இடம் பெயரும் இடத்தில் அமைந்துள்ளது. ஆகையினாலேயே ஜப்பானில் மிகவும் அதி பயங்கர நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜப்பானின் வடகிழக்கு பகுதியானஹோன்சு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஒரு குடோனில் தீ பற்றி எரிந்து, பெரும்பகுதி சேதமான நிலையில், அதிர்ஷ்டவசமாக 100 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரத்தில், ஒரு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. அந்த சமயத்தில், குடோனில் 100 பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், நல்ல வேளையாக அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டனர். அதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த சுமார் 64 தீயணைப்பு வாகனங்களையும், ஒரு […]
ஜப்பான் நாட்டில் ஓட்டுனரின்றி தானே இயங்கும் புல்லட் ரயில், சோதனையில் வெற்றிகரமாக ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் ஷிங்கன்சென் என்ற ஓட்டுனரின்றி இயங்கும் அதிவேக புல்லட் ரயிலை, நேற்று சோதனை செய்துள்ளனர். இந்த ரயிலில், 12 பெட்டிகள் இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயில் ஓட்டுனரின்றி இயங்கும். எனினும் எந்த தவறுகளும் நிகழாமல் இருப்பதற்காக ஓட்டுநர்களும் பணியாளர்களும் சோதனையின்போது ரயிலில் இருந்துள்ளனர். நீகட்டா என்ற ரயில் நிலையத்திலிருந்து, ஐந்து […]
ஜப்பான் நாட்டிலுள்ள ஒரு வனப்பகுதிக்குள் செல்லும் மக்கள் யாரும் உயிரோடு திரும்பி வந்ததில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. ஜப்பான் நாட்டில் அகிகஹாரா என்ற தற்கொலை காடு இருக்கிறது. இக்காட்டிற்குள் சென்ற மக்கள் ஒருவரும் திரும்பியதில்லை என்று கூறப்படுகிறது. இந்த காட்டை சுற்றி வாழும் மக்கள் கூறுகையில், இந்த காட்டிற்குள் செல்லும் மக்கள் தற்கொலை செய்து கொள்வார்கள், அதனால், இது “தற்கொலை காடு” என்று அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். மக்கள் நூற்றுக்கணக்கில் அந்த காட்டில் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பது […]
ஜப்பானில் ஃபுமியோ கிஷிடோ மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று ஜப்பான் நாட்டின் பிரதமராக ஃபுமியோ கிஷிடோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜப்பானில் இதற்கு முன்பாக யோஷிஹிடே சுகா என்பவர் பிரதமராக இருந்துள்ளார். அப்போது யோஷிஹிடே சுகா கொரோனா காலகட்டத்தில் நெருக்கடியை சரியாக கையாளாத காரணத்தினால் அவர் மீது பல புகார்கள் முன்வைக்கப்பட்டது. இதனால் யோஷிஹிடே […]
ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 மாதங்களில் முதன் முதலாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினமாக அமைந்துள்ளது. ஜப்பானில் டெல்டா வகை தொற்று பாதிப்பு கடந்த கோடை மாதத்தில் தினந்தோறும் 25 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பரவலான முக கவசம் பயன்பாடு, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக கடந்த செப்டம்பரிலிருந்து நோய்த்தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. மேலும் ஜப்பான் நாட்டில் சுமார் 18 ஆயிரத்து 310 பேர் கொரோனா தொற்றால் […]
ஜப்பான் நாட்டில் 20 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பழத்திற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. ஜப்பானில் விளையும் யுபாரி மெலன் என்ற பழத்திற்கு மக்களிடையே அதிக டிமாண்ட் இருக்கிறது. தற்போது 20 லட்சமாக இருக்கும் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டில் மட்டும் தான் விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அந்நாட்டிலேயே, கடைகள், சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த பழம் கிடைப்பது அரிதாகத் தான் உள்ளது. இதன் விலை 20 […]
ஜப்பானில் மின் உற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜப்பானின் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டை சேர்ந்தவர்கள் நடனமாடி போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியதில் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து, அந்நாட்டில் பெரிய அளவிலான […]
ஜப்பானின் ஆளும் கூட்டணி கட்சியானது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. ஜப்பானில் 365 இடங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக கட்சிக்கு 262 இடங்கள் கிடைத்துள்ளது. மேலும் 32 இடங்களில் லிபரல் ஜனநாயக கூட்டணி கட்சியானது வெற்றி அடைந்துள்ளது. இந்த தேர்தல் வெற்றியின் மூலம் புமியோ கிஷிடா மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
ஜப்பானில் இன்று காலை ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் Ibaraki மாகாணத்தில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.14 மணியளவில் ஏற்பட்டது. தற்போது, நிலநடுக்கத்தின் மையப்பகுதி வடக்கே 36.5 டிகிரி அட்சரேகை, 140.6 டிகிரி கிழக்கே தீர்க்கரேகை மற்றும் 60 கி.மீ ஆழத்தில் தஞ்சம் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இபராக்கி மற்றும் […]
சூறாவளியின் பொழுது வீசும் பலத்த காற்றை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் challenergy என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விசேஷமான காற்றாலை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதாவது சூறாவளி, புயல் போன்ற பேரிடரின் போது வீசும் பலத்த காற்றுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த காற்றாலைகள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்குமாம். அதிலும் சாதாரண காற்றாலைகளில் உபயோகப்படுத்தப்படும் பெரிய பிளேடுகள் பலத்த காற்று வீசும் […]
ஜப்பானில் வானில் வட்டமிட்ட பைக்கைக் கண்டு பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். ஜப்பானில் உள்ள A.L.I டெக்னாலஜிஸ் X TURISMO LIMITED EDITION என்னும் புதிய வகை ஹோவர்பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை 5 கோடியே 10 லட்சம் ஆகும். இதில் இரு சக்கர வாகனங்களில் வழக்கமாக இருக்கும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் நான்கு மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோ மீட்டர் வரை வேகமாக பறக்கும். இதன் சோதனை ஓட்டம் […]
ஜப்பானில் மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை திருமணம் செய்து கொண்ட இளவரசி மகோவை கண்டித்து பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. ஜப்பானில் சுமார் நூற்றுக்கணக்கானோர் மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை இளவரசி மகோ திருமணம் செய்து கொண்டதை கண்டித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தனது கல்லூரி பருவ காதலனான கெய் கொமுரோவை இளவரசி மகோ காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் ஏற்கனவே கெய் கொமுரோவின் தாயார் கடந்த 2017-ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் நடந்த போது மோசடி வழக்கு […]
ஜப்பான் இளவரசி சாதாரண குடிமகனை மணப்பதால் கடைசியாக அரச குடும்ப அந்தஸ்துடன் இன்று பிறந்தநாள் கொண்டாடினார். ஜப்பான் இளவரசி மகோ கல்லூரியில் தன்னுடன் படித்த சக மாணவரான கெய் கோமுரோவை காதலித்தார். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்ற சாதாரண நபர்களை திருமணம் செய்தால் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். இந்த முடிவை இளவரசி மகோ காதலனை கரம் பிடிக்க வேண்டி […]
ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஒன்றின் எரிமலையில் நேற்று பெரும் சீற்றம் உண்டாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள பெரிய தீவுகளில் ஒன்றான கியூஷூ தீவில் அசோ என்ற எரிமலை உள்ளது. மேலும் இந்த அசோ எரிமலையானது ஜப்பான் நாட்டின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் நேற்று எரிமலையில் திடீரென பெரும் சீற்றம் உண்டாகியுள்ளது. அதோடு எரிமலை வெடித்து சிதறியதில் வானத்தை முட்டும் வகையில் கரும்புகை வெளியாகியுள்ளது. குறிப்பாக எரிமலையில் இருந்து குழம்பு வெளியாகவில்லை […]
வியாழன் கோளில் சுமார் நான்கு நொடிகள் மட்டும் பிரகாசமான ஒளி தோன்றியதாக வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நமது விண்வெளியில் கோள்கள், சிறு கோள்கள், துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இன்னும் நமது கண்களுக்கு புலப்படாத பல விஷ்யங்களும் உள்ளன. மேலும் நமது கோள்களின் இயக்கத்தினால் தான் அனைத்தும் சீராக இயங்கி கொண்டிருக்கிறது. அதிலும் நாம் வாழும் பூமியை போன்று மற்ற கோள்களும் சில தனிச்சிறப்பை பெற்றுள்ளன. அந்த வகையில் வாயுக்கோள் என்று அழைக்கப்படும் வியாழனில் புவியீர்ப்பு […]
ஜப்பான் நாடாளுமன்ற கீழவையானது கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையை கலைத்துள்ளார். குறிப்பாக 11 நாட்களுக்கு முன்பு முன்னாள் பிரதமரான யோஷீஹிடே சுகாவிடம் இருந்து பதவியை பெற்றுள்ளார். தற்பொழுது புமியோவின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில் நடாளுமன்றத்தின் கீழவையை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் கீழவைக்கு வரும் 31 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இதனை […]
ஜப்பானில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் குழந்தைகள் தற்கொலைகள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மிக அதிகமாக இருக்கிறது என்று உள்ளூர் கல்வி அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அதன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த வருடம் பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் வகுப்பறையை மறக்கும் நிலைக்கு சென்றனர். இதன்காரணமாக தொடக்கநிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரை 415 குழந்தைகள் தற்கொலை செய்ததாக ஜப்பான் கல்வி […]
மிருகக்காட்சி சாலையில் பிறந்த மூன்று மாத இரட்டை பாண்டா கரடிகளுக்கு டோக்கியோ ஆளுநர் பெயர் சூட்டியுள்ளார். ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் யுனொ மிருகக்காட்சி சாலை உள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் கடந்த ஜூன் மாதம் பாண்டா கரடி ஒன்று இரட்டை குட்டிகளை பெற்றேடுத்துள்ளது. அவை ஆண் மற்றும் பெண் பாண்டா குட்டிகளாகும். இதனை அடுத்து மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் பாண்டா குட்டிகளுக்கு பொருத்தமான பெயர்களை எழுதி அனுப்புமாறு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனை தொடர்ந்து பாண்டா குட்டிகளுக்காக […]
ஜப்பான் நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. ஜப்பான் நாட்டில் இவாத் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து 142 கிலோமீட்டர் ஆழத்திலும் 50 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் […]
டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 32 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு 5.9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நிலநடுக்கமானது டோக்கியோவின் கிழக்கிலுள்ள சிபா மாகாணத்தில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. இதனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் […]
ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானில் கடந்த ஓராண்டு காலமாக லிப்ரல் ஜனநாயகக் கட்சியை சார்ந்த யோஷிஹிடே பிரதமராக இருந்தார். அவர் பதவி விலகியதை அடுத்து புதிய கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமராகவும் ஃபுயோ கிஷிடா தேர்வாகியுள்ளார். இவர் 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்று […]
ஜப்பான் நாட்டின் கடல் எல்லைக்குள் பயங்கரமான ஆயுதத்துடன் வட கொரிய நாட்டை சேர்ந்த கப்பல் புகுந்துள்ளது. ஜப்பான் நாட்டின் பொருளாதார மண்டலத்தினுள் வட கொரியாவை சேர்ந்த சோதனை கப்பல் பயங்கரமான ஆயுதத்துடன் புகுந்துள்ளது. அதனை ஜப்பான் கடலோர காவல்படையினர் கண்டறிந்துவிட்டனர். இது குறித்து ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்திருப்பதாவது, வட கொரியாவின் சோதனை கப்பல், மனிதர்கள் செயல்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் ஏவுகணை அமைப்புடன் வந்தது. மேலும், அந்த ஏவுகணை தரையிலிருந்து, வானத்தை நோக்கி பாயக்கூடியது என்று தெரிவித்திருக்கிறது. […]
ஜப்பானில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்ததையடுத்து அந்நாட்டின் பிரதமர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனாவிளிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து ஜப்பான் அரசாங்கம் கொரோனா தொற்றை தடுக்க அந்நாட்டில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மேலும் சீனாவிளிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியினை ஜப்பான் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தற்போது கொரோனா தொற்றால் […]
உச்சி மாநாட்டில் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக புடின் இளம்பெண் ஒருவரை அழைத்து வந்தார். முன்னால் வெள்ளை மாளிகை செயலரான Stephanie Grisham தான் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியதாவது “ஜப்பானில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற புடின் ஒரு கவர்ச்சியான பெண்ணை மொழி பெயர்ப்பாளராக அழைத்து வந்ததார். அவர் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக பெண்ணை அழைத்து வந்து இருக்கலாம் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பெண் Daria […]
ஜப்பானில் புதிய பிரதமராக ஆளுங்கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடா பதவியேற்கவுள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே கடந்த ஆண்டு உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். இதனால் யோஷிஹிதே சுகா பிரதமராக பதவியேற்றார். ஆனால் இவரது தலைமையிலான அரசு கொரோனா பரவலை கையாண்ட விதம் பலனளிக்காததால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. இதனால் தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் யோஷிஹிதே அவர்கள் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. இதனையடுத்து ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் புமியோ […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்துதலுக்கான காலத்தை ஜப்பான் அரசு குறைந்துள்ளது. ஜப்பானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்தியா போன்ற கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 40 நாடுகளிலிருந்து வருபவர்களும் அரசு தங்க வைக்கும் இடத்தில் இருக்கும் மூன்று நாட்கள் உட்பட மொத்தம் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனிமைப்படுத்துதலுக்கான நாட்களை […]
ஜப்பானில் முதியோர் தினத்தை முன்னிட்டு இரட்டை சகோதரிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர் . ஜப்பானில் சுமார் 13 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 29 சதவீதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது அதிலும் 86 ஆயிரத்து 510 பேர் 100 வயதை எட்டியவர்கள் என்றும் மீதி உள்ளவர்கள் 100 வயதை தாண்டியவர்கள் என்றும் அங்குள்ள சுகாதாரம் மற்றும் நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜப்பானில் முதியோர் தினத்தை முன்னிட்டு அங்கு 107 […]
சாந்து புயலால் 5 பேர் படுகாயம் அடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டை புயல் தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு சாந்து என்று பெயரிட்டுள்ளனர். மேலும் அந்த புயலானது பசிபிக் கடலோர பகுதியின் மையத்தில் கிழக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இந்த புயலினால் மணிக்கு 67 மைல்கள் தூரத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனை அடுத்து புயலின் காரணமாக நாகசாகி, யூயேகா மற்றும் சாகா போன்ற பகுதிகளில் இதுவரை 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த புயலால் ஜப்பான் […]
ஜப்பான் நாட்டை சேர்ந்த தைசுகே ஹோரி(36), ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேசன் தலைவராக உள்ளார். இவர் கடந்த 12 வருடங்களாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உறங்குகிறார். அதனால் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளார். நேரத்தை எப்படி குறைப்பது என்பது பற்றி நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறார். இது குறித்து பேசிய அவர், அனைவரையும் போல நானும் 8 மணி நேரம் தூங்கி கொண்டு இருந்தேன். அதனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்க […]
12 வருடங்களாக வெறும் அரைமணி நேரம் மட்டுமே தூங்குவதாக ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 34 வயதான டெய்சுகே ஹோரி என்பவர் கடந்த 12 வருடங்களாக நாளொன்றுக்கு வெறும் அரைமணி நேரம் மட்டுமே உறங்குவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் குறைவான நேரம் மட்டும் தூங்குவோர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் நூற்றுக்கணக்கான மக்களுக்கு குறைந்த நேரம் தூங்குவது எப்படி என்பது குறித்தும் பயற்சி அளித்து […]
ஜப்பான் நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக போடப்பட்ட கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதேபோல் ஜப்பான் நாட்டிலும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் வரும் 12 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. […]