Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாட்டின் அடுத்த பிரதமருக்கான வாய்ப்பு யாருக்கு? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்..!!

ஜப்பான் நாட்டில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டாரா கோனோ நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமரான யோஷிஹிடே சுகா, பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே அந்நாட்டின், ஒரு செய்தி நிறுவனம் அடுத்த பிரதமராகக்கூடிய வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று தொலைபேசி வாயிலாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. எனவே, 1701 மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர், டாரா கோனோவிற்கு 32% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும், பாதுகாப்பு துறை முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

புகுஷிமா கதிர்வீச்சு நீரை…. கடலில் கலக்க திட்டமிட்ட பிரபல நாடு…. பல தரப்பிலிருந்து எழும்பிய எதிர்ப்புகள்….!!

சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது கரையில் இருக்கும் மீனவ மக்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து அதில் கதிர்வீச்சு நீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு உலக நாடுகளை சேர்ந்த சூழலியல் செயல்பாபாட்டாளர்களும் மீனவ […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? ஜப்பானின் அதிரடி உத்தரவு….!!

ஜப்பான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,500 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கொரோனாவின் மாறுபாடு மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21,500 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 42 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதற்கிடையே ஜப்பான் நாட்டின் அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அமலுக்கு கொண்டு வந்துள்ள அவசர நிலை […]

Categories
உலக செய்திகள்

‘சுடோக்கு’ என்னும் புதிர் விளையாட்டு…. உருவாக்கிய ஜப்பானியர்…. புற்றுநோயால் மரணம்….!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடும் சுடோக்கு புதிர் விளையாட்டை உருவாக்கியவர் காலமானார். சுடோக்கு என்னும் விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடக்கூடிய ஒன்று. இது  எண்களை கொண்டு விளையாடப்படும் புதிர் விளையாட்டு ஆகும். சுடோக்கு என்னும் சொல் ஜப்பானிய மொழியில் “சூ வா டொக்குஷின் நி ககீரு” என்ற தொடரின் சுருக்கமே ஆகும். இதன் பொருள் எண்கள் ஓரிலக்க எண்களாய் இருத்தல் வேண்டும். இந்த சுடோக்கு விளையாட்டை ஜப்பானை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானை மிரட்டி வரும் லூபிட் புயல்…. அதிரவைக்கும் வீடியோ…!!!

சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வந்த லூபிட் என்னும் சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஜப்பானில் மூன்று லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. லூபிட் புயல் ஜப்பானை தாக்கும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/dE9mL5JdhJ8

Categories
உலக செய்திகள்

ஜப்பானை தூரத்தும் சூறாவளிகள்…. 300 மில்லி மீட்டர் மழைப்பதிவு…. பாதிப்புக்குள்ளான நகரம்….!!

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளியினால் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் தென்மேற்கு பகுதியில் க்யூஷூ நகரம் அமைந்துள்ளது. இந்த நகரை  சூறாவளி தாக்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளிக்கு லுபிட் என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் அங்கு கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூறாவளி காற்றானது மணிக்கு 125 கிலோ மீட்டரில் வேகத்தில் வீசியுள்ளது. மேலும் மழை பொழிவானது 300 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

புயல் எச்சரிக்கை அறிவிப்பு…. பலத்த காற்று வீசும்…. தகவல் வெளியிட்ட ஜப்பான் வானிலை ஆய்வு மையம்….!!

ஜப்பானில் புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பானில் உள்ள சிபா மாகாணத்தில் புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு மிரினே என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் சிபா பகுதியில் உள்ள 29,000திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இன்று காலை நிலவரப்படி  புயலானது வடகிழக்கு திசையை நோக்கி சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகிறது. இந்த புயலானது கரையை […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா….? புயல் எச்சரிக்கை அறிவிப்பு…. தகவல் வெளியிட்ட ஜப்பான் வானிலை மையம்…!!

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைவடைய உள்ளன. இந்த நிலையில் டோக்கியோ நகரை புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும் போட்டியின் இறுதி நாளான 8 ஆம் தேதி அன்று புயல் தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்… மீறினால் இது தான் கதி… பிரபல நாடு பரபரப்பு அறிக்கை..!!

ஜப்பானில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வெளிநாட்டு பயணிகளின் பெயர்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் நேற்றைய நிலவரப்படி 8,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானில் இரு மடங்காக பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே ஜப்பான் அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை அமலில் வைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களுடைய செல்போன்களில் லொகேஷன் டிராக்கிங்கை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் 4 நகர்களில் கடும் கட்டுப்பாடுகள்.. பிரதமர் அறிவிப்பு..!!

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவி வருவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் டோக்கியோவிலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபா, ஒசாகா, கனகவா மற்றும் சைதமா போன்ற நகர்களில் கடும் விதிகள் பின்பற்றப்படும் என்று பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற போட்டியாளர்…. திடீரென கன்னத்தில் பயிற்சியாளர்…. விளக்கத்தில் வெளியான காரணம்….!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்த வீராங்கனையை அவரது பயிற்சியாளர் கன்னத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே போட்டியில் பங்கேற்பதற்காக  சென்று கொண்டிருந்த ஜெர்மன் ஜூடோ வீராங்கனையான Martyna Trajdos அவரின் பயிற்சியாளர் Claudiu Pusa திடீரென கன்னத்தில் அடிக்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து Martyna அடியை வாங்கிக்கொண்டு போட்டிக்கு செல்கிறார். இந்தவீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் மக்களிடையே […]

Categories
உலக செய்திகள்

காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு…. தகவல் தெரிவித்த அதிகாரிகள்…!!

ஜப்பான் நாட்டில் காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டில் ஷிமோகிடா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இன்று உள்ளூர் நேரமான காலை 6 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 70 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜப்பானில் வசூல் சாதனை படைத்துவரும் “தர்பார்”…. வெளியான கலக்கல் புகைப்படம்….!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜப்பானில் வசூல் சாதனை படைத்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் ரஜினியின் படங்கள் அனைத்தும் ஜப்பானிலும் தொடர்ந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. அந்தவகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘தர்பார்’ திரைப்படம் கடந்த வாரம் ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ஜப்பானில் வெளியான […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு வந்த புதிய சிக்கல் …. வெளியான பகீர் தகவல்….!!!

டோக்கியோவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம்  கூறியிருப்பது ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று  பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில்  ஒலிம்பிக் போட்டிகள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனா  தொற்று பரவல்  அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டி தொடங்க தாமதமானது .அதோடு  அதிக […]

Categories
விளையாட்டு ஹாக்கி

தோல்வியுடன் தொடங்கிய இந்தியா… நெதர்லாந்து அபார வெற்றி…!!!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆட்டத்தின் பாதி நேரம் வரை 1-1 என்ற சமநிலையில் இருந்தது. ஆனால் மூன்றாம் குவாட்டரில் 3 நிமிடங்களில் நெதர்லாந்து 2 கோல் அடிக்க இந்திய அணியால் எதிரணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இந்தியாவுக்காக கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்தார்.

Categories
உலக செய்திகள்

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள்…. கோலாகலமாக தொடங்கிய நிகழ்ச்சி…. வருகை புரிந்த பிரான்ஸ் அதிபர்….!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நேற்று மாலை கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் கலந்து கொண்டுள்ளார். உலக அளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020 ல் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளானது இந்த ஆண்டு நேற்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இதில் மற்ற நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியானது உலக அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதனால் நேற்று மாலை டோக்கியோவில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாடு சின்னாபின்னமாகும்.. சீன அரசு பகிரங்க எச்சரிக்கை..!!

சீனாவிற்கு எதிரான செயல்பாட்டில் தலையிட்டால் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசப்படும் என்று சீன அதிகாரிகள் காணொளி வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை எதிர்த்து ஜப்பான் அரசு ஒரு ராணுவ துருப்பை தைவான் நாட்டிற்கு அனுப்பினால் கூட ஜப்பான் ஒட்டுமொத்தமாக தகர்க்கப்படும் என்று காணொளி மூலமாக எச்சரித்துள்ளனர். சீன ராணுவம் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் ஒரு குழுவினர் இந்த காணொளியை உருவாக்கியுள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டை எச்சரிக்கும் இந்த காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒரு நொடிக்கு 319 டெராபைட் ஸ்பீடா…? அதிர்ச்சியடைந்த இணையத்தள வாசிகள்…. சாதனையை நிகழ்த்திய ஜப்பான்….!!

ஜப்பான் நாட்டின் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள நொடிக்கு 319 டெராபைட் வேகத்தில் இயங்கக்கூடிய இன்டர்நெட் டெக்னாலஜிக்கு தற்போது நெட்டிசன்களின் கவனம் சென்றுள்ளது. லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே ஒரு நொடிக்கு 178 டெராபைட் வேகத்தில் இன்டர்நெட்டை இயக்கி சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது ஜப்பான் நாட்டின் தேசிய தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சாதனையை முறியடித்துள்ளார்கள். அதாவது ஜப்பான் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நொடிக்கு 319 […]

Categories
உலக செய்திகள்

தொடங்கப் போகும் ஒலிம்பிக் போட்டிகள்…. இரு வீரர்களுக்கு தொற்று உறுதி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் இன்னும்  5 நாட்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு மத்தியில் இந்தப் போட்டியானது நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் பரிசோதனைக்கு பிறகே அனைவரும் ஒலிம்பிக் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தனிஅறையில் தங்கப்படுவார்கள். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டி…. பளுதூக்கும் வீரர் மாயம்…. விசாரணையில் தெரிய வந்த உண்மை….!!

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்த உகாண்டா பளுதூக்கும் வீரர் திடீரென மாயமான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளதால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்கள் ஜப்பானிற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஜப்பானில் உள்ள ஒசாகாவில் இசுமிசானோ பகுதியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனிடையே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள ஒலிம்பிக் […]

Categories
உலக செய்திகள்

பங்கேற்க இருக்கும் 206 நாடுகள்…. களைகட்டிய ஒலிம்பிக் கிராமம் திறப்பு….!!

இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானில் ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வரையில் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 11000 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“40,000 டாலர்களுக்கு டிக்கெட்டா!”.. ரசிகரின் உலக சாதனை கனவு.. இடி போல் விழுந்த அதிர்ச்சி..!!

ஜப்பானில் ஒரு நபர் ஒலிம்பிக் போட்டியை நேரில் கண்டு உலக சாதனை படைக்க விரும்பிய நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 45 வயதுடைய கசுனோரி தகிஷிமா என்ற நபர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண சுமார் 40 ஆயிரம் டாலர்களுக்கு டிக்கெட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு, ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண  அனுமதி கிடையாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. எனவே ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்து உலக சாதனை […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் ஆசிரியை சடலமாக மீட்பு.. மர்மமாக உயிரிழப்பு..!!

ஜப்பானில் மாயமான பிரிட்டன் பெண் ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நாட்டிங்ஹாம் பகுதியில் வசித்த ஆலிஸ் ஹோட்கின்சன் என்ற 28 வயது பெண் டோக்கியோவில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். எனவே Kanagawa என்ற பகுதியில் தங்கி, பணிக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களாக அவர் பணிக்கு வராததால் ஜூலை 1ஆம் தேதி என்று அவரின் மேலாளரால் மாயமானார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு, காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே கடந்த ஒரு வாரமாக அவரை காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 15 நாள்தான் இருக்கு…. ரசிகர்களுக்கு தடைவிதித்த டோக்கியோ….. ஜப்பான் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு….!!

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் 15 தினங்களே இருக்கும் நிலையில், டோக்கியோவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 15 தினங்களே உள்ளது. இதற்கிடையே டோக்கியோவில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் பாதிப்பு தினந்தோறும் 920 ஆக அதிகரித்துள்ளது. இதனால் டோக்கியோவில் அவசரகால நிலையை பிறப்பிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி அங்கு தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தல் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் அவசர கால நிலை அறிவிப்பு…. அதிரடி உத்தரவு….!!!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதன்படி வெளிநாட்டு பார்வையாளர்கள் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த அவசர […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயற்சி.. பெண்ணை கைது செய்த பாதுகாப்பு படையினர்..!!

ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை ஒரு பெண் நீரைப் பாய்ச்சி அணைக்க முயற்சித்ததால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜப்பானில் உள்ள மிட்டோ என்ற நகரில் ஒலிம்பிக் ஜோதியை கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் பெண் ஒருவர் சாலையோரத்தில் நின்றிருந்தார். அவர் எதிர்பாராத நேரத்தில், திடீரென்று, தான் வைத்திருந்த பொம்மை துப்பாக்கியை கொண்டு தண்ணீரை பாய்ச்சி ஜோதியை அணைக்க முயன்றார். மேலும் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெறக்கூடாது என்று அவர் முழக்கமிட்டதாக கூறப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை கைது […]

Categories
உலக செய்திகள்

26 மணி நேரத்திற்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்ட அதிசயம் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 23 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் Atami என்ற பகுதியில் கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளது. இதனால் மீட்பு குழுவினர் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நிலச்சரிவு சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .இந்த  நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், வயதான தம்பதிகள் உட்பட 23 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மண்ணுக்கடியில் மொத்தமாக புதைந்த வீடுகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ஜப்பானில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அட்டாமி என்ற நகரத்தில் கடந்த வாரத்தில் கனத்த மழை பெய்திருக்கிறது. இதனால் கடந்த சனிக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டு பலர் பலியாகினர். இதில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Breaking video: The moment a landslide […]

Categories
உலக செய்திகள்

19 பேரை காணோம்..! பிரபல நாட்டில் ஏற்பட்ட பயங்கரம்… அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் 19 பேர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் சில பகுதிகளில் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பித்த பருவமழை காரணமாக கனமழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து டோக்கியோவின் மேற்கே பயங்கர மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் குடியிருப்புகள் டசின் கணக்கில் புதைந்து போனதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நில சரிவில் 19 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேசமயம் நிபுணர்கள் தரப்பில் இதேபோல் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

நிலச்சரிவில் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த வீடுகள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ஜப்பானில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள அடாமி என்ற பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் இன்று காலையில் சுமார் 10:30 மணிக்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் மலைப்பகுதியின்  குடியிருப்புகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்துவிட்டது. இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. A #landslide engulfs houses and leaves 19 people missing in #Japan 's Shizuoka region, a […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு..!!

நேற்று ஜப்பானில் உள்ள போனின் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஜப்பானில் உள்ள போனின் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 16.16 கிலோ மீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த திடீர் நிலநடுக்கத்தால் சேதம், பொருள் இழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ பேரையும் காணோம்..! அதிகாரிகள் அளித்த அதிர்ச்சி தகவல்… பிரபல நாட்டில் சோகம்..!!

கடந்த வருடம் ஜப்பானில் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 17 ஆயிரத்து 500 பேர் மாயமானதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஜப்பானில் கடந்த 2020-ஆம் ஆண்டில் டெமன்சியா எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 17,565 பேர் மாயமானதாக ஜப்பான் நாட்டின் தேசிய காவல் கழகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் மாயமாகி வருவது அந்நாட்டிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகளுடனே அனுமதிக்கப்படுவர்… ஜப்பானில் நடைபெறும் போட்டிகள்… ஒலிம்பிக் நிர்வாகம் தகவல்..!!

ஒலிம்பிக் நிர்வாகம் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான நடவடிக்கையில் ஜப்பான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி தினந்தோறும் 10,000 பேருக்கு ஒலிம்பிக் போட்டிகளை காண அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு ஒலிம்பிக் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒலிம்பிக் போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் எந்த நிலையிலும் கொண்டாட்ட […]

Categories
உலக செய்திகள்

என்ன…! இங்க வச்சு மது குடிக்க கூடாதா…? சுமார் 10,000 த்திற்கும் மேலான போட்டியாளர்கள்…. கருத்து தெரிவிக்கும் பிரபல நாட்டுமக்கள்….!!

ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சுமார் 10,000 த்திற்கும் அதிகமானோர் போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மைதானத்தில் வைத்து மதுவை விற்பனை செய்யவதற்கும், குடிப்பதற்கும் போட்டியின் அமைப்பாளர்கள் தடை விதிப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். ஜப்பான் நாட்டில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சுமார் 33 விளையாட்டுகளை உள்ளடக்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 205 நாடுகளை உடைய 10,000 த்திற்கும் மேலான வீரர்கள் பங்கேற்கலாம் […]

Categories
உலக செய்திகள்

25 ஆண்டுகள் நிறைவு… பிகாச்சுவாக காட்சியளித்த விமானம்… வெளியான அழகிய புகைப்படம்..!!

போகிமான் கதாபாத்திரமான பிகாச்சுவின் உருவத்தை கொண்டு ஜப்பானின் ஸ்கைமார்க் விமான சேவை நிறுவனம் தனது விமானத்தை வடிவமைத்து அசத்தியுள்ளது. போகிமான் அறிமுகமாகி 25 வருடங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு போகிமான் கதாபாத்திரமான பிகாச்சுவின் உருவத்தை கொண்டு ஜப்பானின் ஸ்கைமார்க் விமான சேவை நிறுவனம் தனது விமானத்தை வடிவமைத்து அசத்தியுள்ளது. மேலும் பிகாச்சுவின் உருவங்கள் மற்றும் மஞ்சள் நிற வண்ணங்கள் பூசப்பட்டு டோக்கியோ-ஒகினாவா நகரங்களுக்கு இடையே பறக்கும் போயிங் விமானம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த போகிமான் விமானமானது போகிமான் அறிமுகமாகி […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி…. வெளியான தகவல்…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை முதல் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் 10 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

என்ன..! தடுப்பூசி பாஸ்போர்ட்டா…. இத போட்டவர்களுக்கு முன்னுரிமை…. புதிய முடிவெடுத்த ஜப்பான்….!!

வெளிநாடு செல்ல விரும்பும் பயணிகளில், தேவைப்படுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டதற்கான பாஸ்போர்ட்டை வழங்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதற்கிடையே கொரோனா மிக வேகமாக பரவுவதால், சர்வதேச அளவிலான விமான சேவை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலே காணப்பட்டுள்ளது. அதிலும் சில நாடுகள் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், தனக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலியின் விந்தணுக்கள்.. 6 வருடங்களுக்கு பின் பிறந்த 168 குட்டிகள்..!!

சர்வதேச விண்வெளி மையத்தில், 6 வருடங்களாக எலிகளுடைய விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், அதிலிருந்து 168 குட்டிகள் பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் யாமானாஷி என்ற பல்கலைகழகத்தில் பணியாற்றும் டெருஹிகோ வாகயாமா என்ற முதன்மை ஆசிரியர் தலைமையில் ஆய்வாளர்களின் குழுவானது, கடந்த 2013 ஆம் வருடத்தில் எலிகளுடைய உறைந்த மற்றும் உலர்ந்துபோன விந்தணுக்களை அதிக நாட்கள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது. விண்வெளியில் இருக்கும் கதிர்வீச்சுகளால் உயிரணுக்களில் மரபணு மாற்றம் உண்டாகுமா?மற்றும் விந்தணுக்களால் உருவாகக்கூடிய உயிரினங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!’.. டோக்கியோ ஒலிம்பிக்கின் மூத்த அதிகாரி தற்கொலை.. தொடரும் விசாரணை..!!

ஜப்பானில் கடந்த 2020 ஆம் வருடம் டோக்கியோ ஒலிம்பிக் மூத்த அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் கடந்த 2020-ம் வருட டோக்கியோ ஒலிம்பிக்கின் மூத்த அதிகாரியான Yasushi Moriya(52). இவர் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜப்பானின் சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவில் நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2020 […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவு…. கொரோனாவே காரணம்….!!!!!

ஜப்பான் நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்துள்ளது. அதாவது 2020ஆம் ஆண்டு 8,40,832 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.8% குறைவாகும். கொரோனா காலம் என்பதால் திருமணங்களை தள்ளி போட்டதும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதை திருமண தம்பதிகள் தள்ளி போட்டதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 5.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு..!!

ஜப்பானில் 5.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.  ஜப்பானில் உள்ள ஹோன்சு என்ற நகரத்தில் கிழக்கு கடலோர பகுதியில், திடீரென்று நேற்று இரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் 5.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம், 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் கடந்த […]

Categories
உலக செய்திகள்

உடல் துண்டித்தால் வளரும் அதிசய கடல் அட்டை… விஞ்ஞானிகள் ஆச்சரியம்….!!!!

ஜப்பான் நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ‘ சாகோக்ளோசான்’ என்றால் கடல் அட்டையை ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்போது ஒரு அட்டை உடல் துண்டாகி இறந்துவிட்டது. ஆனால் அதன் தலை இறந்து விடாமல், தனது உடலை வளர்த்துக் கொண்டே வந்தது. சில நாட்களில் அந்த அட்டைக்கு இதயம் உட்பட அனைத்து அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவது இதுவே முதன்முறை என்று விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும்… ஜப்பான் பிரதமர் உறுதி…!!

ஜூலை மாதம் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் கட்டாயம் நடக்கும் என்று ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் கொரோனா என்னும் பெரும் தொற்று ஆட்டிப்படைத்து வருகின்றது. இதனால்  பல நாடுகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பல  நாடுகளில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இரண்டு நாட்களாக இதே நிலைமை தான்..! சுழற்றியடித்த சூறாவளி காற்று… பொதுமக்கள் அச்சம்..!!

ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் பயங்கர சூறாவளி காற்று வீசியதால் அங்குள்ள 92 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் மகினோஹாரா நகரில் நேற்று திடீரென்று சூறாவளி காற்று சுழற்றியடித்தது. அதில் அங்குள்ள கட்டிடத்தில் மேற்கூரைகள் பயங்கர காற்றில் பறந்தன. மேலும் கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் சுக்குநூறாக நொறுங்கியது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கார்கள் சாலைகளில் கவிழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். ஆனால் அந்த சூறாவளி காற்றினால் யாருக்கும் எந்த பாதிப்பும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கரம்… பீதியில் அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

ஜப்பானில் நேற்று திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ஜப்பானில் உள்ள வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மியாகி பிராந்தியத்தில் திடீரென்று நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறிய தகவலின் படி அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 புள்ளிகளாக பதிவாகி, பூமிக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 10.27 மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பணியில் பின்தங்கிய ஜப்பான்…. 4 மாகாணங்களில் அவசர நிலை…. அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை….!!!

ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் 1 % மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவைப் போலவே ஜப்பான் நாட்டிலும் கொரோனா  4 வது அலை பரவி வருகிறது. இதனால் அங்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற பெருநகர பகுதிகளில் உள்ள 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து பிரதமர் யோஷி ஹிடே சுகா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று (வெள்ளி […]

Categories
உலக செய்திகள்

நான் அவன் இல்லை….. 35 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்த நபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் 35 பெண்களை ஏமாற்றி குடும்ப வாழ்க்கை வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் Kansai மாகாணத்தை சேர்ந்த Takashi Miyagawa(39)  என்பவர் 35 பெண்களை ஏமாற்றி குடும்ப வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தற்போது இவரின் பித்தலாட்டத்தை கண்டறிந்த பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்தப் பெண்களிடம் தன்னுடைய பிறந்தநாளை வெவ்வேறு தினங்களாக கூறி ஏமாற்றி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. Miyagwa  என்ற பெண்ணிடம் தனது பிறந்தநாளை பிப்ரவரி 22 என்றும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடத்த ரத்தா ?வெளியான முக்கிய அறிவிப்பு ..!!

ஜப்பானில் கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யப்போவதாக பொதுச்செயலாளர் டோஷிஹிரோ நிக்காய் தெரிவித்துள்ளார். ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூலை 23 தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இதில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஜப்பானில் 5,13,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 0. 4% பேருக்கு மட்டும் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வடகொரியா.. பதற்றத்தில் அண்டை நாடுகள்.. தொலை தூரம் பாயும் ஏவுகணை சோதனை..!!

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியா நீண்ட தொலைவில் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.  வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அமெரிக்காவும், ஜப்பானும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த ஏவுகணை சோதனையானது ஜோ பைடன் அதிபரான பிறகு வடகொரியா மேற்கொள்ளும் முதல் பாலிஸ்டிக் சோதனையாகும். மேலும் ஆயுதங்கள் மற்றும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்துவதாக கூறி வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. ஏற்கனவே வட கொரியா இரு தினங்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி அச்சத்தில் மக்கள்?…!!!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த பூகம்பம் நேற்று மாலை 6.10 மணியில் இருந்து ஏற்பட்டது. இதன் மையமானது இஷினோமாகியில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில், மியாகி […]

Categories

Tech |