ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சற்றுமுன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 என பதிவாகியுள்ளது. மேலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கடலோர பிராந்திய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குறுகிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதில் […]
Tag: #ஜப்பான்
ஜப்பானில் அரசு ஊழியர்கள் 2 நிமிடத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு சென்றதால் நடவடிக்கை எடுக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் சிபாநகரில் உள்ள புனபாஷிலில் ஊழியர்கள் கல்வி வாரியத்தில் பணி புரிந்து வருகிறார்கள். அந்தக் கல்வி வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 5.15 மணிக்கு வேலையை முடித்து கிளம்ப வேண்டும். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் 5. 13 மணிக்கே பணியை முடித்துவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் நேரம் முடியும் முன்பே வெளியேறிய ஊழியர்களுக்கு ‘japantoday’ […]
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் ஜப்பானில் அங்கீகாரம் பெற்று இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “அசுரன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற படமாக அசுரன் திகழ்கிறது. இதனால் இப்படம் “நாரப்பா” […]
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் காணாமல் போன பெண்ணை அவரது கணவர் இன்று வரை கடலுக்கடியில் தேடிக் கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வந்தனர். அந்த சுனாமியின் போது, Yasuo Takamatsu என்பவரது மனைவி yuko அங்குள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கும் வங்கியில் வேலை செய்து வந்தார். மலைப்பகுதியில் இருப்பதால் தனது மனைவிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்று Yasuo […]
ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் 6 அடி 3 அங்குலத்திற்கு அழகான கூந்தலை வளர்த்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்த 35 வயதான ரின் காம்பே என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் 6 அடி 3 அங்குலத்திற்கு அழகான கூந்தலை வளர்த்துள்ளார். மாடலும் நடன கலைஞருமான அவர், குங்குமப் பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் தான் தன்னுடைய கூந்தல் இவ்வளவு நீளமாக வளர்வதற்கு காரணம் என கூறியுள்ளார்.
10 வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்த பெண்ணின் எலும்புக்கூடு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி மியாமி கடற்கரை ஓரத்தில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பின்னர் தடவியல் மற்றும் மரபணு சோதனையில் உட்படுத்தியபோது அது சுனாமியில் காணாமல் போன 61 வயதான […]
நிலாவுக்கு செல்வதற்கு 8 பேருக்கு இலவச டிக்கெட் தரப்போவதாக ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மொய்சவா அறிவித்துள்ளார். நம் அனைவருக்கும் நிலாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தக் கனவு நிறைவேற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நிலாவிற்கு செல்லும் “டியர் மூன்” என்ற திட்டத்தை விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மக்களை நிலாவிற்கு அழைத்துச் செல்ல ஸ்டார் ஷிப் என்ற […]
கொரோனா பரிசோதனையை ஆசனவாய் வழியாக செய்வதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா ? என்ற பரிசோதனை செய்ய பல முறைகள் இருப்பினும் கொரானா பரிசோதனையை ஆசனவாய் வழியாக ஏன் செய்ய வேண்டும், அப்படி செய்யும் பொழுது அது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு உளவியல் வலியை ஏற்படுத்துகிறது என்று ஜப்பான் செய்தி தொடர்பாளர் Katsunobu Kato கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சீனாவில் வசிக்கும் சில ஜப்பானியர்கள் எங்களிடம் […]
ஜப்பானில் கடந்த ஆண்டு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளன. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஜப்பான் நாடு தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான நாடாக பெயர் பெற்றுள்ளது.இந்நாடு, வாழ்வில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தன்னை தானே ஊக்குவித்து கொண்டு முன்னேறும் நாடாக விளங்கிவருகிறது. இந்நிலையில் ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தற்கொலைகள் அதிகமாக உள்ளது என்பதுதான் மிகவும் வேதனையாக உள்ளது. இந்த அக்டோபர் மாதம் வரை கணக்குப்படி […]
கொரானாவுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தை செலுத்த ஜப்பான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஜப்பானில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. G7 நாடுகளில் கடைசி நாடாக இருக்கும் ஜப்பான் காலம் தாழ்த்தியே மக்களுக்கு தடுப்பூசி செலுத்த […]
ஜப்பான் நாட்டின் சொரியு நீர்மூழ்கிக்கப்பல் மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதியதால் பசிபிக் பெருங்கடல் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. ஜப்பான் நாட்டின் தெற்கு தீவான ஷிகோக்கு தீவில் உள்ள சொரியு நீர்முழ்கிக்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்த சம்பவம் குறித்து ஜப்பான் ஊடகம் கூறுகையில் அந்நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலான சொரியுவின் ஆன்டென்னா மாஸ்ட் அதிகமாக சேதமடைந்ததாகவும் , 3 பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.மேலும் சொரியுவுக்கு தான் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் […]
கனடாவில் ஆங்கிலம் கற்க வந்த ஜப்பானிய பெண் சூட்கேசுக்குள் நிர்வாண சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கனடாவிற்கு நட்சுமி கோகாவா என்ற இளம் பெண்ணும் வில்லியம் ஷ்னீடர் என்பவரும் ஆங்கிலம் கற்பதற்காக வந்தனர். கனடா வந்த நான்கே மாதத்தில் நட்சுமி காணாமல் போனார். ஜப்பானில் இருக்கும் தனது மனைவிக்கு போன் செய்வதாக தனது சகோதரரிடம் வில்லியம் மொபைல் வாங்கி பேசியிருக்கிறார். அப்போது அவர் தன் மனைவியிடம்,நட்சுமி மரணம் குறித்து […]
ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை பெண்ணொருவர் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் 48 வயதான யூமி யோஷினோ. இவர் முறையாக வாடகை செலுத்துவில்லை என்ற காரணத்திற்காக குடியிருப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன், அந்த பெண் தங்கிவந்த வீட்டை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த ஃப்ரீசர் பாக்ஸை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஃப்ரீசரை திறந்ததும் […]
கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் சமீப காலமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதே நேரம் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவானது சுகாதாரம், […]
ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 13 கோடி கொடுத்து ஒரு மீனை ஏலத்துக்கு எடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் டுனா கிங் என்றழைக்கப்படும் கியோஷி கிமுரா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்பதில் பிரபலமானவர் ஆவார். அதேபோல் இந்த வருடமும் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வாறு வந்த 276கிலோ கிராம் எடை கொண்ட பெரிய அளவிலான மீன் ஒன்று 193.2 […]
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை […]
பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை மாற்றும் முயற்சியில் ஜப்பான் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் அரசு 2050 ஆம் வருடமளவில் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வை அடைய போவதாகவும் வருடத்திற்கு குறைந்தது 2 ட்ரில்லியன் டாலர் பசுமை வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த பசுமை வளர்ச்சித் திட்டமானது இந்த நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் கார்பன் உமிழ்வை நீக்குவதற்காக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் பிரதமரின் அக்டோபர் உறுதிமொழியை அடைவதற்காகவும் இத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனோவால் ஏற்பட்ட […]
ஜப்பானில் உள்ள ஒரு எரிமலை தனது அழகிய தன்மையால் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகின்றது. ஜப்பானின் சகுராஜிமா எரிமலை சமீபத்தில் வெடித்தது. எரிமலையின் வாயிலிருந்து வெப்ப குழம்பு வெளியேறியதால் மேற்பரப்பில் ஒரு மைல் தூரத்தில் சாம்பல் புகை உருவானது. மேற்பரப்புக்கு மேலே ஒரு மின்னல் புயல் உருவானது போல் இயற்கையான அந்த காட்சியை அற்புதமாக படமாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகை 3000 கிலோ மீட்டர் உயர்ந்துள்ளது. ராய்ட்டர்ஸ் புகைப்படக்கலைஞர் இந்த நிகழ்வை கைப்பற்றுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். Snapshots […]
பல இளம்பெண்களை கொன்ற டுவிட்டர் கில்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த டுவிட்டர் கில்லர் என்று அழைக்கப்படுபவர் Takahiro(27). பல பெண்களை கொலை செய்த இவருக்கு டோக்கியோ நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர், தங்களுடைய தற்கொலை எண்ணங்களை பற்றிய தகவல்களை இணையதளத்தில் பதிவிடும் இளம்பெண்களுடன் டுவிட்டர் மூலம் தொடர்புகொண்டு பழகியுள்ளார். பின்னர் அவர்களின் தற்கொலை எண்ணங்களுக்கு தான் உதவுவதாகவும் அல்லது சேர்ந்து நாம் இறந்து […]
கோழிகளில் உண்டாகும் வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவி விடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவல் மோசமடைந்துள்ளதால், மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவி விடும் என்ற அச்சத்தில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை கொல்லப்பட்டுள்ளன. நோயை உண்டாக்கக்கூடிய H5 வைரஸ் வகை பறவை காய்ச்சல் ஜப்பானின் 8 மாவட்டங்களில் பரவி உள்ளது. எனவே இந்த எட்டு மாவட்டங்களிலும் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த தொற்று ஏற்பட்ட கோழிகளின் இறைச்சிகள் மற்றும் முட்டையில் வைரஸ் […]
கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக தன் நாட்டு மக்களுக்கு வழங்கப்போவதாக ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நிவர், புரெவி என வகைவகையான புயல்கள் வந்து தமிழகத்தையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பான் அரசு, அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு […]
ஜப்பான் நிறுவனம் ஒன்று ஆடம்பரமான, வித்தியாசமான மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளது. கொரோனா எதிரொலியால் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் மாஸ்க் அணிவது என்பது கட்டாயம் ஆகிவிட்டது. மாஸ் என்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு சாதனம். ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. ஆடைக்கு ஏற்ப மாஸ்க் அணிவது, விதவிதமான படங்கள் போட்ட மாஸ்க் அணிவது, அதையும் தாண்டி டிரஸ்க்கு ஏற்ற கலரில் மேட்சாக, சேலைக்கு ஏற்ற கலரில் மேட்சாக மாஸ்க்குகளை தைத்து […]
மனித உடலின் தோல் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் 9 மணி நேரம் உயிர் வாழும் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தொற்று வியாதி நிறுவனமான சிகிச்சைக்காக ஆய்வு இதழில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மனித உடலில் தோள் மேல் பரப்பில் தங்கும் வைரஸ் இரண்டு மணி நேரத்திற்குள் காய்ச்சலை உண்டாக்கும் திறன் கொண்டது. மேலும் மனிதனின் தோல் பரப்பில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ் எளிதில் அடுத்தவர்களுக்கு பரவும் ஆபத்தை […]
வடகொரியாவிடம் இருந்து தப்பிக்க ஜப்பான் தனது ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த போவதாக கூறியுள்ளது. வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதனைத்தொடர்ந்து அதிசக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் தனது ஏவுகணை மற்றும் ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தான் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்தும். இந்நிலையில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன. அதேநேரம் ஜப்பான் வடகொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து […]
குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜப்பானில் இன்று நடைபெறுகிறது. குவாட் கூட்டு நாடுகளில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜப்பானில் இன்று நடைபெறுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு இணைய மற்றும் கடல் பாதுகாப்பு மேம்பாட்டு நிதி மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு மீட்பு நடவடிக்கை ஆகியவற்றை இணைந்து மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க பட உள்ளது. 5ஜி மற்றும் 5ஜிபிளஸ் தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து ஈடுபட ஜப்பான் முடிவு […]
வாக்குவாதத்தில் காதலியை காதலன் தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜப்பானில் உள்ள கோவா நகரை சேர்ந்தவர் மாகோடோ கட்டுமான தொழில் செய்து வருபவர். இவர் தனது காதலியுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று இவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் கொண்ட மாகோடோ தனது காதலியின் மீது மண்ணெண்ணெயை தெளித்து காதலி மீது தீ வைத்துள்ளார். பின்னர் அவசர சேவை அழைத்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு காவல்துறையினர் […]
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்திலும் பயங்கர அதிர்வு ஏற்பட்டது. ஜப்பானின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மியாகி நகரில் நேற்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பந்தனை நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த சக்தி […]
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு பகுதியில் இருக்கின்ற இபராகி பிராந்தியத்தில் நேற்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வீதியில் வெளியேறி தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நேரம் நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
ஜப்பான் நாட்டை போரில் வென்ற 75 ஆவது ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தை சீனா கோலாகலமாக கொண்டாடி வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாடு கடந்த 1931 ஆம் ஆண்டு சீனாவுடன் போரில் இறங்கியது. சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் கடந்த 1945ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்தப் போரில் சீனா வெற்றிக் கொடியை நாட்டியது. இந்நிலையில் ஜப்பானை போரில் வீழ்த்தி இந்த ஆண்டுடன் சீனா 75 […]
ஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகாநியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற ஷின்ஜோ அபே, தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரையில் தான் பதவியில் நீடிப்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பு வருகின்ற 14ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ஆளும் தாராளவாத […]
உடல்நலக்குறைவால் ஜப்பான் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் முதன்மையான தலைவர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த சூழலில் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் அவருடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2006இல் பிரதமராக பதவியேற்ற அவர், 2007இல் ஏற்கனவே உடல்நிலை காரணங்களுக்காக அபே ராஜினாமா செய்துள்ளார். அதன்பின் 2012ஆம் ஆண்டில் அபே, பிரதமராக பதவியேற்று 8 […]
ஜப்பான் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க கல்லறை பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒசாக்கா நகரில் உள்ள உமேடா கல்லறை வரலாற்று சிறப்பு மிக்க கல்லறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கல்லறை அமைந்துள்ள இடத்தில் 1500-க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டின் மேற்கு நகரமான ஒசாக்காவில் அகழாய்வு பணியின் போது ஒரே இடத்தில் இத்தனை எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிடைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்து பார்த்த பொழுது அந்த எலும்புக்கூடுகள் […]
ஜப்பான் நாட்டின் பிரதமராக சுமார் 8 வருட காலமாக நீடித்து நின்று ஷின்சோ அபே சாதனை படைத்துள்ளார். சென்ற 2012ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்ஸோ அபே பதவியில் நிலைகொண்டு வருகிறார். இன்று வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, 2,799 நாள்கள் அவர் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம், அந்நாட்டில் அதிக வருடங்கள் ஆட்சிப் புரிந்து வரும் பிரதமர் என்ற சாதனையை அவர் தனது பதவியின் மூலம் நிரூபித்துள்ளார். 1964 முதல் 1972ஆம் […]
உணவகங்களில் சாப்பிடும் பொழுது முகக்கவசம் அணிந்தவாறு சாப்பிடும் வகையில் ஜப்பானியர்கள் புதிய முக கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா காலகட்டத்தில் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. முக கவசம் அணிவதால் மக்கள் சில சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவோர் முகக்கவசத்தைக் கழற்றி விட்டு சாப்பிடவேண்டிய நிலைமை உள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கத்தில், வாய் மற்றும் மூக்கை மறைத்தவாறு […]
ஊரடங்குக்கு பிறகான காலத்தில், புதிய இயல்பு நிலை மிகக்கடினமாக இருக்கப்போகிறது. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தியும், உலக நாடுகள் முயன்று கொண்டிருக்கிறது. இருப்பினும், முன்பிருந்த சூழல் போல் புதிய இயல்பு நிலை இருக்கப் போவதில்லை. போக்குவரத்து, பள்ளிகள், வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றார்போல் பாதுகாப்பான சூழலை உருவாக்க உலக நாடுகள் தொடர்ந்து முயன்றுவருகின்றது. மற்றொரு முனையில், அரசுகள் விதிக்கும் விதியை மக்கள் பின்பற்றியாக வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, ஜப்பானில் உள்ள தீம் பார்க்குகள் […]
மனித எலும்புக்கூடுகள் உடன் அமானுஷ்யங்கள் உடைய வடகொரிய கப்பல்கள் கடற்கரை ஒதுங்குவதற்கு சீனா காரணம் என ஜப்பான் கூறியுள்ளது. ஜப்பான் சாடோ தீவில் சென்ற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரத்தில் செய்யப்பட்ட படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. அந்தப் படகில் இருந்த துண்டிக்கப்பட்ட இருவரின் தலைகளும் மற்றும் எலும்பு கூடாக இருக்கின்ற ஐந்து நபர்களின் சடலங்களும் ஜப்பான் கடலோர காவல் படையினரால் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்ற இரண்டு ஆண்டுகளாக 50 வடகொரிய ர்களின் சடலங்கள் […]
ஜப்பானில் தொண்டை வலி காரணமாக மருத்துவரிடம் சென்ற பெண்ணிடம் இருந்த சுமார் 3.8 செமீ அளவு கொண்ட ஒட்டுண்ணி புழுவை டாக்டர்கள் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தொண்ட வலி ஏற்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. அப்போது டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்த போது, தொண்டைக்கு உள்ளே எதோ ஒரு புழு போன்ற ஒட்டுண்ணி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, […]
ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் தென் பகுதியான கியூஷு பிராந்தியத்தில் சென்ற வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் குமா நதியில் கரை புரண்டோடிய வெள்ளத்தால், கரையோரப் பகுதிகள் சர்வநாசமடைந்துள்ளது . இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக அந்நாட்டு தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மீட்புப் […]
ஜப்பானில் சுற்றி வந்த ஜாம்பிகள்…..!
அனாவசியமாக வெளியில் நடமாடினால் கொரோனா பிடித்து கொள்ளும் என்று ஜாம்பி வடிவில் பிழிப்புணர்வு : அனாவசியமாக வீதியில் நடமாடினால் கொரோனா பிடித்துக்கொள்ளும் என்றாலும் அச்சப்படாமல் சுற்றி திரிவோரை பயமுறுத்த ஜப்பானில் வீதி நாடகக் கலைஞர்கள் மனிதர்களை கொல்லும் ஜாம்பிகளாக வேடமிட்டு கார்களை டிரைவினில் வழிமறித்து கொலைவெறி நாடகம் ஆடுகின்றன. டோக்கியோவில் உள்ள ட்ரைவின் உணவகங்களில் கேரேய்க்குள் ஒவ்வொரு காராக நிறுத்தி பேய் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர். கழுத்தை கடித்து ரத்தம் குடிப்பது போன்ற காட்சிகளை நிகழ்த்திக் காட்டி […]
18 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வர, இதற்கு தற்போது வரை தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தப்பிப்பதற்கான ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி நாட்டு மக்களுக்கு பயணம் மேற்கொள்ள […]
அமாமி தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை சேகரிக்க ராணுவ மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார் ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று அமாமி தீவு பகுதியில் கடந்த 18ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த கப்பல் யோகோயேட் ஜிமா தீவிற்கு மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அக்கப்பலை தீவிரமாக கண்காணித்து அது குறித்த அனைத்து விபரங்களையும் சேகரிக்க ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு ராணுவத் துறை மந்திரி டாரோ கோனோ […]
ஆன்லைனில் நட்பாய் பழகிய பெண்ணை கொலை செய்து சூட்கேசில் பேக் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜப்பானில் இருக்கும் நிஷியோ என்கிற ஊரில் இருந்த பாலத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக பெரிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை யாரும் எடுத்துச் செல்லாததால் காவல்துறையினர் சென்று திறந்து பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சூட்கேஸில் பெண்ணொருவரின் சடலம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சடலமாக சூட்கேஸில் இருந்தது என்ற பெண்ணின் பெயர் […]
ஜப்பானில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடு தழுவிய சுகாதார அவசர நிலை நீக்கப்படுவதாக பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். ஜப்பானில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைத்து வருவதை அடுத்து அவசர நிலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த மாதம் 7ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் நோய்த்தொற்றின் தீவிரம் கணிசமான அளவு குறையத் துவங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து […]
கொரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது கொரோனா தொற்று எந்த அளவுக்கு வேகமாக பரவுகின்றது என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பப்பட் உணவகத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கொரோனா பரவலை சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜப்பான் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் உணவகத்தின் உள்ளே பத்து நபர்கள் வருகின்றனர். அதில் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர். அவர் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அனைவரிடமும் சகஜமாக பேசுகின்றார். அனைத்து […]
பூங்காவில் மக்கள் கூடுவதை தவிர்க்க 10,000 பூக்களை மலர செய்து ஜப்பான் அரசு அசத்தியுள்ளது கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாமல் உலகநாடுகள் பலவும் தவித்து வருகின்றன. தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றவும் சுத்தமாக கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களை கட்டுப்படுத்த ஜப்பான் அரசு புதிதாய் ஒரு முயற்சியை கையாண்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் சகுரா நகரில் வருடந்தோறும் மலர் விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் விழா கொரோனா தொற்று பரவலின் […]
பூங்காவில் மக்கள் கூடுவதை தவிர்க்க 10,000 பூக்களை மலர செய்து ஜப்பான் அரசு அசத்தியுள்ளது கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாமல் உலகநாடுகள் பலவும் தவித்து வருகின்றன. தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றவும் சுத்தமாக கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களை கட்டுப்படுத்த ஜப்பான் அரசு புதிதாய் ஒரு முயற்சியை கையாண்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் சகுரா நகரில் வருடந்தோறும் மலர் விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் விழா கொரோனா தொற்று பரவலின் […]
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அவசர நிலையை செயல்படுத்த ஜப்பான் பிரதமர் முடிவு செய்துள்ளார் உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா ஜப்பானில் அதன் தாக்கத்தை முன்பைவிட அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று பலியானவர்களின் எண்ணிக்கையும் 200 கிட்ட நெருங்கியுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் ஷின்ஜோ அபே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் […]
கைகளை கழுவ சனிடைசர் இல்லாத காரணத்தினால் ஆல்கஹாலை பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்றை தடுக்க அடிக்கடி கைகளை சனிடைசர் மூலம் கழுவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் அதிக நாடுகளில் சனிடைசர்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சனிடைசர் எனப்படும் கிருமிநாசினியில் 70% முதல் 80% வரை ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜப்பானிலும் சனிடைசர் எனும் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் அதற்கு பதிலாக […]
ஜப்பானின் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ஓர் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் இருந்தது. உலக நாடுகளும் தங்களுடைய நாட்டு வீரர்களை ஜப்பானில் நடைபெறக்கூடிய ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. கொரோனா அச்சுறுத்தல்காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பதை தவிர்க்க முடியாது என்று ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32வது ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஆனால் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனோவின் தாக்கம் காரணமாக […]