ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதன்படி நூர் உல் ஹபீப், சஜத் அகமது, ஷகினா பேகம்,நசீமா அக்தர்,ருபினா பனே, ஜாபர் சலீம் போன்றோர் தான் உயிரிழந்தவர்கள் ஆவர். ஆறு பேரும் விஷம் குடித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் சடலங்களை […]
Tag: #ஜம்முகாஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியான மெகபூபா முப்தி வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள சோபியான் நகரிலிருக்கும் காஷ்மீரி பண்டிட் பாலகிருஷ்ணன் என்பவர் அண்மையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பயங்கரவாதிகளின் தாக்குதலால் படுகாயமடைந்த பால் கிருஷ்ணனின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மெகபூபா அவரது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன்பின் அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். […]
போதை பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த 3 கடத்தல்காரர்கள் போதைப்பொருளை கடத்த முயர்ச்சித்துள்ளனர். இதனால் அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர். மேலும் கடத்தல்காரர்களிடம் இருந்து 36 கிலோ […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குல்சன் சவுக் இடத்தில் அதிக போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் உயிரிழந்தனர். […]
ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3000 ஐ தாண்டி விதி மீறல்களில் ஈடுபட்டதாக மத்திய அரசு பாகிஸ்தான் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ஏராளமான விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சினை என்பது முடிவுக்கு வராத பட்சத்தில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஜம்மு பகுதியில் இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை 3,186 முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், […]
டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைக்கு ஆயிரம் கிலோமீட்டர் கடந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தாயிடமிருந்து தினமும் தாய்ப்பால் கொண்டுவரப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த மாதம் 16ம் தேதி குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சமயம் குழந்தை குடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கேட்டபொழுது குழந்தைக்கு உணவுக்குழாயில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பதறிப்போன குழந்தையின் தாயான டோர்ஜே கணவர் வாங்க்டஸ்க்கு […]
தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில் பாக் அய்யூனிய பிரதேசத்தின் குந்தர்பால் மாவட்டத்தில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களில் இன்று ஆய்வினை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ள படையினருடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தில் பாக் கூறியதாவது, “இதுவரை பயங்கரவாதிகளை ஆயுதங்களைக் கொடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பிவைத்த பாகிஸ்தான் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் […]
காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச எல்லைப் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் கதுவா மாவட்டம் பூஞ்ச் பகுதி வழியாக செல்கின்றது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் சிறிய ரக துப்பாக்கியால் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. இந்தத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள், “பூஞ்ச் பகுதியில் […]
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்பு படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவப்படையினருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவந்திபோரா அடுத்த டிரால் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதை தடுப்பதற்கு போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 3 […]