கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 13ஆம் தேதி 17 வயது மாணவி மர்மமாக இறந்து கிடந்தார்.. இது தற்கொலையல்ல, கொலை தான் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நீதிகேட்டு பள்ளியில் 4 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பள்ளி செயலாளர் சாந்தி, தாளாளர் ரவிக்குமார், […]
Tag: ஜாமீன் மனு
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாததால் விசாரணையை ஒத்தி வைத்தது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கட்டிட உள்வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ரிப்பாப்ளி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் திரு. அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கடந்த 4-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2018 -ஆம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவருக்கு தர வேண்டிய பல லட்சம் ரூபாய் பணத்தை […]
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய சாய்பாஷா கருவூல நிதிமோசடி வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் திரு. லாலு பிரசாத்யாதவ் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் திரு. லாலு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் […]
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முருகன் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் செயராஜ் வென்னிக்ஸ் கொலை வழக்கில் காவலர் முருகன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்றாவது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் ஆவணங்களை தடைய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்த நிலையில் விசாரணை முடிவடைந்து உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் […]