ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தின நிகழ்ச்சி திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ச்சி என்.சி.சி. சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அதிகாரி சந்தீப்மேனன் தலைமை தாங்கினார். இதில் என்.சி.சி. மாணவர்களுக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தொடர்பாக குறும்படம் காண்பிக்கப்பட்டது. அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாததால் அதனை தவிர்ப்பது குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். […]
Tag: ஜாலியன் வாலாபாக் படுகொலை
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நிகழ்த்திய ஜெனரல் டயர் விசாரணையில் தோட்டாக்கள் இருந்தால் இன்னும் சுட்டு இருப்பேன் என பதிலளித்துள்ளார் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை […]
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணி பற்றிய தொகுப்பு பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். […]
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்து இந்திய வீரன் உத்தம் சிங் பற்றிய தொகுப்பு. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஆங்கில ஜெனரல் டயரை நமக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாத அந்த ஜாலியன் வாலாபாக் சம்பவம் 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. ஆயிரம் பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால் கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் கொலை உயிருமாக துடித்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு […]
ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் பின்னணி…!!
சொல்ல முடியாத துயரத்தை கொடுத்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வின் பின்னணி பற்றிய தொகுப்பு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி பல்வேறு காலகட்டங்களில் போராட்டம் நடைபெற்றாலும் 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர போராட்டம் நாடெங்கிலும் தீவிரமடைந்தது. இதனால் மக்களிடையே சுதந்திர போராட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட தொடங்கியது. இதனை யூகித்துக் […]
வருடங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத வரலாறாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை 1918-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி ரவுலட் சட்டம் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும் சிறையில் அடைக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை பாலகங்காதர திலகர் மற்றும் மகாத்மா காந்தி வன்மையாக கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ரவுலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது […]