தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இங்குள்ள பாலித்தீவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியுள்ள நிலையில் இன்று வரை நடைபெறும். இந்த மாநாட்டின் போது உக்ரைன் ரஷ்யா போர், போரினால் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், டிஜிட்டல், உலக பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், […]
Tag: ஜி-20 உச்சி மாநாடு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவில் வரும் 14ஆம் தேதி அன்று ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி 20 அமைப்பில் இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த மாநாட்டின் நடுவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக […]
இந்தியா நூறு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்ததற்கு ஐரோப்பிய கமிஷன் தலைவரான உர்சுலா பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியில் இருக்கும் ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது, ஐரோப்பிய கமிஷன் தலைவரான உர்சுலா வோன் டெர் லேயன் நரேந்திர மோடியை நேற்று சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் பருவநிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, பிராந்தியத்திற்கான முன்னேற்றம் மற்றும் வர்த்தக முதலீடு உறவுகள் போன்றவை தொடர்பில் […]