ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது ஜி 7 நாடுகள் குழுவின் தலைமை பொறுப்பை பிரபல நாடான ஜெர்மனி ஏற்றுள்ளது. இதனால் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அன்னாலெனா போர்பாக் இந்தியாவிற்கு வருவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்த அவர் கூறியதாவது “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ளது. மேலும் பல்வேறு உள் சமூக சவால்கள் இருக்கிறது. ஆனால் இந்தியா பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. மேலும் உக்ரைன் ரஷிய […]
Tag: ஜி-7
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்த விவகாரம் முக்கிய விவாத பொருளாக அமைந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துவது பற்றியும் ஜி 7 தலைவர்கள் மாநாட்டில் தீவிரமாக விவாதம் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜி 7 மாநாட்டின் நிறைவில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
ரஷ்யா நாட்டின் நிபந்தனையை ஜி 7 நாடுகள் நிராகரித்துள்ளது. ரஷ்யாவுடன் நட்பில் இல்லாத நாடுகள் இயற்கை எரிவாயுவிற்கு பணம் செலுத்த வேண்டுமெனில் ரஷ்யா நாணயமான ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்தார். மேலும் இது குறித்து ஜெர்மனியின் எரிசக்தி துறை அமைச்சர் ராபர்ட் ஹேபெக் “பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் கனடா போன்ற நாடுகளின் அதிகாரிகளிடம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்துள்ளனர். அதன் பின் […]
நேட்டோ, ஜி-7 போன்ற அமைப்புகளை தவிர்த்து உலகளாவிய புதியகூட்டணியை உருவாக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பியா உள்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென்சாகி அளித்த பேட்டியில் “சீனா மட்டுமல்லாது இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார போரில் பங்கேற்கவில்லை. இது ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதாக கருதமுடியாது. […]