சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனமே ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் சைபர் பாதுகாப்பு நிறுவனமானது ஜெனிவாவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்திற்குரிய 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் முக்கியமான தகவல்களும் கடவுச்சொற்களும் வெளியானது. இதையடுத்து, காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜெனிவாவின் மாகாண அரசு, விமான நிலையம், பல்கலை மருத்துவமனை, தனியார் வங்கிகள், சட்ட […]
Tag: ஜெனிவா
உலக சுகாதார அமைப்பின் தலைவர் மெலிடா உஷ்னோவிக் ரஷ்ய செய்தி ஊடகம் ஸ்புட்னிக்கிடம் கூறும் போது, மண்டல அளவில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி ஐரோப்பிய பகுதியில் குரங்கு அம்மை பரவக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் புதிய பாதிப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்பில் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும். மேலும் அதன் அதிவேக பரவலை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, கனடாவில் […]
ஜெனிவாவில் முதியவர்களை குறிவைத்து நடக்கும் மோசடி தொடர்பாக அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். ஜெனிவாவில் முதியவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் பணமோசடி செய்யும் நிகழ்வு அம்பலமாகியுள்ளது. அதாவது மர்ம நபர்கள் குறிவைக்கும் நபர்களிடம் தொலைபேசியில் அழைப்பு விடுத்து தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறுவார்களாம். மேலும் நீங்களோ அல்லது உங்களது உறவினர்களோ போக்குவரத்து விதியை மீறி விட்டீர்கள் என்று கூறி அபராதம் செலுத்தும்படி நிபந்தனை செய்வார்களாம். இந்த தொலைப்பேசி மோசடியில் […]
டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சீனாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உருமாறியுள்ளது. இந்த நிலையில் உருமாறிய கொரானா வைரஸானது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இந்த பரவல் காரணமாக […]
கொரோனா நோய்க்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி வினியோகத்தில் உலக நாடுகளுக்கு இடையே கடும் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு எதிராக கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை போடும் பணியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் களமிறங்கியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் […]
முதலையை பிடிக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியிலிருந்து பொம்மை முதலையை மீட்டெடுத்தனர். சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் இருக்கும் ஏரியில் முதலை ஒன்று இருப்பதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற வீரர்கள் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஏரியிலிருந்து வீரர்களுக்கு கிடைத்தது உண்மையான முதலை இல்லை அது வெறும் பிளாஸ்டிக் முதலை பொம்மை. அதனுடன் புகைப்படம் எடுக்க அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அது பொம்மை என்று அறியாத பலர் அந்த முதலையை […]