தடுப்பூசிகள் தொடர்பாக எழுந்த முக்கிய கேள்விக்கு பூனம் கேட்டர்பால் விளக்கமளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றினால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். அதிலும் இந்த தொற்றானது தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்குகிறதாம். இந்த தொற்றிற்கு எதிராக தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் பயனளிக்குமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இது குறித்து WHOல் (உலக சுகாதார […]
Tag: ஜெனீவா
ஊழலுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எந்தவொரு நாடுகளும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் ஊழல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ‘உங்கள் உரிமை, உங்கள் பங்கு, ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்’ என்பது இந்த ஆண்டிற்க்கான முக்கிய கருத்தாக கூறப்பட்டுள்ளது. […]
கொரோனா நோயளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்பொழுது ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை […]
தென்னாப்பிரிக்காவிற்கு சில நாடுகள் பயணத்தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவுடன், அந்நாட்டுடன் பல்வேறு நாடுகளும் பயணத்தடை அறிவித்தது. இந்நிலையில், நேற்று ஜெனிவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் ஆதனோம் ஜிப்ரியசஸ் கூறியதாவது, தடுப்பூசி செலுத்தப்படுவதால் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது. எனவே, கொரோனா உருமாற்றமடைய வாய்ப்பிருக்கிறது என்று பலமுறை தெரிவித்தோம். அதனை யாரும் கட்டுப்படுத்தவோ, யூகிக்கவோ முடியாது. அது தான் ஒமிக்ரான் […]
ஸ்விட்சர்லாந்து நாட்டில் வாழ்க்கைத்தரத்தை அடிப்படையாக கொண்டு சிறந்த மற்றும் மோசமான நகரம் எது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து வாழ்க்கைத்தரம் தொடர்பிலான சர்வதேச ஆய்வுகளில் பொதுவாகவே சிறந்த இடங்களில் இருக்கும். ஆனால் தற்போதைய ஆய்வில் அந்நாட்டின் பேசல் நகரம் மட்டும் தான் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கிறது. இந்த வருடத்திற்கான, பிற நாட்டவர்கள் வாழ சிறந்த நகரங்கள் என்ற பட்டியல் InterNations என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது. இதில் 57 நகரங்கள் கலந்து கொண்ட நிலையில், பேசல் நகரம் 9-ஆம் […]
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இரவு சமயங்களில் இனிமேல் மின் விளக்குகள் எரியக் கூடாது என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றமானது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமானது, வீடுகள் இல்லாத கட்டிடங்களுக்கு வெளியில் தெரியக்கூடிய ஒளிரும் வெளிப்புற அடையாளங்களையும், இரவில் விளக்குகளின் பயன்பாட்டையும் குறைக்கிறது. இச்சட்டம், ஜெனிவா நகரில் நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரைக்கும் வெளிச்சத்தை […]
உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான டெட்ராஸ் அதானம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உலக நாடுகள் அனைத்திலும் 40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதே போன்று வருகிற 2022ஆம் ஆண்டும் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு 1500 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். மேலும் உலகம் முழுவதும் […]
நீர் பற்றாக்குறையினால் 500 கோடி மக்கள் அவதிப்படுவார்கள் என்று ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பானது ‘தண்ணீருக்கான 2021ம் ஆண்டு காலநிலை சேவைகள்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு மண்ணில் ஈரப்பதம் குறைந்துள்ளதாகவும், உறைபனி உருகுதல், நிலப்பரப்பின் நீர் பற்றாக்குறை, தண்ணீர் சேமிக்கும் அளவு குறைதல் போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளன. அதிலும் காலநிலை வேறுபாட்டால் நீர் தொடர்பாக […]
கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் ஒரு வாரகாலமாக பரவிய கொரோனா தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை காணும்பொழுது கடந்த வாரத்தை விட தற்பொழுது பாதிப்பானது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை உலக அளவில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 31,00,000 ஆகும். இதனை அடுத்து 50,000 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது முந்தை வாரத்தை விட […]
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் நாளையிலிருந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக Janssen என்ற தடுப்பூசியை தயாரித்திருக்கிறது. ஜெனீவா மாகாணத்திற்கு இந்நிறுவனத்தின் தடுப்பூசிகள் 7,000 டோஸ்கள் வழங்கப்படவிருக்கிறது. இத்தடுப்பூசி குறைவாக இருப்பதால் சுவிட்சர்லாந்து மக்களுக்கு மட்டும் அளிக்கப்படவிருக்கிறது. மேலும் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே இத்தடுப்பூசியை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு அதிகமான நபர்கள் தான் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், […]
ஜெனீவா மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பெட்டிகளால், மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் பல இடங்களில் ஆரஞ்சு நிறத்திலான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்துள்ளது. அது எதற்காக என்று தெரியாத மக்கள், அதை எடுத்து பார்த்து விட்டு வேறொரு இடத்தில் கொண்டு வைத்து விடுகிறார்கள். எனவே, அதிகாரிகள் தயவுசெய்து அந்த பெட்டியை தொடாதீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதாவது, புவி வெப்ப ஆற்றலை கண்டறிவதற்காகவும், நிலத்தின் அதிர்வுகளை கணக்கிடுவதற்காகவும் மாகாணம் முழுக்க சுமார் 20 ஆயிரம் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. […]
சிரிய நாட்டின் அகதி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் கொண்ட பொம்மை, தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு வந்தடைந்துள்ளது. Little Amal என்ற பொம்மை, பெற்றோரை பிரிந்து வாடும் அகதி குழந்தைகளின் நிலையை விளக்க உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது, 9 வயதாகும், Little Amal, சிரிய துருக்கி எல்லையிலிருந்து 8000 கிலோ மீட்டர்கள் நடை பயணமாக பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. அதாவது, இந்த பொம்மையை அகதி குழந்தையாக கருதி, அதன் பெற்றோரை தேடும் பொருட்டு ஒவ்வொரு […]
ஆப்கானில் புலம்பெயர்ந்தோருக்கு தேவையான உதவிகளை ஐ.நா.சபை வழங்க முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள மக்கள் அவர்களுக்கு பயந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்து சென்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வன்முறைச் சம்பவங்களினால் மட்டும் 6.35 லட்சம் பேர் தங்களின் சொந்த வசிப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதநேய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் 12000திற்கும் மேற்பட்டோர் பஞ்ஜஷீர் பள்ளத்தாக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இதில் 1300 பேருக்கு உதவிகள் […]
ஜெனீவா மாகாணத்தின் எல்லையில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெனீவா மாகாணத்தின் எல்லைப் பகுதியில் உள்ள Veyrier என்ற இடத்தில் காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், ஆறரை கிலோ எடையுடைய போதைப் பொருள் சிக்கியுள்ளது. அவை ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பு கொண்ட கொக்கைன் போதை பொருட்கள் ஆகும். மாட்டிக்கொண்ட அந்த நபர், மாட்ரிடிலிருந்து, சூரிச்சிற்கு செல்வதாக காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார். எனினும் அவரின் வாகனத்தில் ஜெனீவாவில் இருக்கும் […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே சென்றடைவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ஒவ்வொரு நாடுகளும் தங்களின் மக்கள் தொகையில் குறைந்தது 40% அளவிற்கு தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து தீர்வு எடுக்க வேண்டும். அதுவரையில் பூஸ்டர் தடுப்பூசி செல்வது குறித்து எந்தவொரு அனுமதியும் வழங்கக்கூடாது. […]
ஆப்கானை விட்டு தப்பி வரும் அனைவருக்கும் உதவி கரம் நீட்டி அழைத்துக் கொள்ளவேண்டும் என்று ஐ.நா.சபை உயர் ஆணையர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக ஆப்கானியர்கள் மத்தியில் பயம் மற்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை காபூல் விமான நிலையத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. இந்த சம்பவங்கள் அனைத்தும் உலகில் உள்ள […]
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுவிட்சர்லாந்திலேயே ஜெனிவா மாகாணத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்கு 1,00,000 நபர்களில் 401 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சராசரியாக, தொற்று விகிதம் 265 ஆக இருக்கிறது. மேலும் நாட்டிலேயே குறைவான பாதிப்பு Uri மாகாணத்தில் பதிவாகியுள்ளது. அங்கு தொற்று விகிதம் 166 ஆக உள்ளது. கொரோனாவின் முதல் அலையை விட தற்போது பலி எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று சுகாதாரத் துறை தலைவர்களில் […]
ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை அடுத்து அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர். இதனையடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் தலை தூக்கியது. இதனை தொடர்ந்து அவர்கள் பல்வேறு முக்கிய நகரங்களை கைவசப்படுத்திய நிலையில் தற்பொழுது தலைநகரான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவியிலிருந்து விலகி ஆப்கானிலிருந்து வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் வெளி வந்தது. இவரை தொடர்ந்து […]
ஐ. நா.பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரமில்லாத உறுப்பினர்களை இணைக்க ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான முயற்சிகளை முன்வைக்கும் சமயத்தில் வீட்டோ அதிகாரம் இல்லாத நிரந்தர உறுப்பினர்களை இணைப்பதற்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதில் ” ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை பிராந்திய நாடுகளின் சுழற்சி முறையில் இந்த […]
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தற்காலிகத் தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையானது ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது. இதனை அடுத்து பிராந்திய உறுப்பு நாடுகளின் சுழற்சியின் படி இந்தியா பொறுப்பேற்க உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை […]
சுவிட்சர்லாந்தில் ஒரு அமைச்சர் கொரோனா பரிசோதனைகள் மக்களுக்கு கட்டணமில்லாமல் அளிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஜெனீவா மாகாணத்தில் சுகாதாரத் துறையின் கவுன்சிலராக உள்ள Mauro Poggia, கட்டணம் இல்லாமல் கொரோனா பரிசோதனைகளை இலவசமாக அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றார். அப்போதுதான் இளைஞர்கள் அதிகமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். அதாவது, கொரோனா பரிசோதனைகள் மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதால், நமக்கு கொரோனா தொற்று இல்லை என்று இருந்துவிடுகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார். ஜெனிவா மாகாணத்தில் தான் தற்போது கொரனொ […]
கோவக்சின் தடுப்பூசிகளை அவசர காலப் பயன்பாட்டு ஒப்புதல் குறித்து முடிவு எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனமானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கு இந்தியாவில் மட்டும் அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. […]
சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மாகாணத்தில் Chatelaine என்ற பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசித்த தம்பதியர் தான் இறந்து கிடந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையின் படி 64 வயதுடைய அந்த நபர், தன் 58 வயது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. எனினும் அந்த குடியிருப்பின், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை […]
கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த இயக்குநர் கூறியுள்ளார். தற்போது கொரோனா வைரசின் உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.இதனால் மக்கள் காற்றோட்டமான இடங்களில் செல்லும்போது கட்டாயம் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவுள்ள உச்சி மாநாடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடானது இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடக்கவுள்ளது. இதில் உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளின் அரசியல் நிலை, அணு ஆயுதங்கள் குறைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளார்கள். ரஷ்ய நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல்கள், சிறை தண்டனை, எதிர்க்கட்சி தலைவர்கள் […]
ஜெனீவாவில் இரண்டு நாடுகளுடைய தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதால் தற்போது உலக அளவில் சுவிட்சர்லாந்து செய்திகள் கவனம் ஈர்த்து வருகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பானது ஜெனீவாவில் உள்ள பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடம் ஒன்றில் நடைபெறவிருக்கிறது. மேலும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளுக்கு இடையே இதுவரை கருத்து வேறுபாடு இருந்து வந்த […]
ஜெனீவா ஏரியில் மிதந்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெனீவாவின் ரோல் துறைமுகத்திற்கு அருகே ஒரு நபரின் உடல் மிதந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற நபர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் 73 வயதுள்ள அந்த நபர், அவரின் படகை சவாரிக்காக தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி அவர் தண்ணீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் அந்த நபரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு […]
ஜெனீவாவில் நதி ஒன்றில் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனீவா நாட்டில் உள்ள Rhone என்ற நதியின் இடையில் verbois என்ற ஒரு அணை கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதிகாரிகள் இந்த அணையில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடிவு எடுத்துள்ளார்கள். வரும் மே மாதம் 18ஆம் தேதியன்று இந்த அணை திறக்கப்படவுள்ளது. அதன்பின்பு நதியில் இருக்கும் அனைத்து நீரும் வெளியேற்றப்படும். அதாவது அந்த அணைக்கு பின் பகுதியில் படிந்திருக்கும் சகதியை நீக்க சில வருடங்களுக்கு ஒரு […]
ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தினால் பல நிறுவனங்கள் அழிந்துவிடும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட பார்கள் மற்றும் உணவகங்கள் ,கடந்த 10ஆம் தேதியில் தான் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு 7 மணி வரை தான் கடைகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பயம் இருக்கிறது. மேலும் அரசிற்கும் மக்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைவு வேண்டும் என்று Romandie என்டர்பிரைசஸ்ஸின் தலைவரான […]
கொரோனா பாதித்த செவிலியர்களை பணிக்கு வர அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனிவா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் மருத்துவமனையில் பணி செய்ய அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. பொதுவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தான் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் பணியிலிருக்கும் செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அறிகுறி தெரிந்த முதல் நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் பணிக்கு திரும்ப முடியாது. ஆனால் தற்போது கொரோனா பாதித்த செவிலியர்களிடமிருந்து மற்ற நபர்களுக்கு […]