Categories
உலக செய்திகள்

ஜெய்சங்கர் அதிக நாட்டுப்பற்று கொண்டவர்… புகழ்ந்து தள்ளிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…!!!

ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்கய் லாவ்ரோவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டுப் பற்று அதிகம் கொண்டவர் என்று கூறியிருக்கிறார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த ஒரு நேர்காணலில், இந்தியா தன் சொந்தமான வெளியுறவு கொள்கைகளைத் தான்  பின்பற்றும் என்று ஜெய்சங்கர் தெரிவித்ததை வரவேற்றிருக்கிறார். ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதிகளை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியது. ஆனால் இந்தியா தன் வெளியுறவு கொள்கைகளை மட்டும் தான் கடைபிடிக்கும் என்று உறுதியாக தெரிவித்ததை குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்…. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல்….!!!!

கனடாவின் தலைநகரான டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திக் வாசுதேவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறும்…!! கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டி…!!

இலங்கை சந்தித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டியளித்துள்ளார். “மக்கள் இவ்வாறு வாழ முடியாது. எனவே மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்த முன் வந்துவிட்டனர். எரிபொருள் தட்டுப்பாடு உணவு தட்டுபாடு 12 மணிநேரம் வரை மின்சார தட்டுப்பாடு என இலங்கை இதுவரை சந்திக்காத இன்னல்களை எல்லாம் சந்தித்து வருகிறது. என்னுடைய சொந்த மக்கள் அவர்களுடைய சொந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுவது கண்டு நான் […]

Categories
உலக செய்திகள்

“குவாட் கூட்டமைப்பு”…. பிரபல நாட்டு வெளியுறவு மந்திரியுடன்…. ஆலோசனை நடத்திய ஜெய்சங்கர்….!!!

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் நாட்டு வெளியுறவு மந்திரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குவாட் அமைப்பு இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய  நாடுகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் குவாட் நாடுகளின்  வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். இதனை அடுத்து மத்திய […]

Categories
உலக செய்திகள்

‘குவாட்’ அமைப்பு இதற்காக தான் பயன்படுகிறது…. சீனாவின் கருத்திற்கு ஜெய்சங்கர் பதிலடி…!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவாட் அமைப்பால் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கு நன்மை தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்திருக்கிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட சில நாடுகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்நிலையில், சீனா, தங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தான் இந்த அமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு…. இணையமைச்சர் எல்.முருகன் கடிதம்….!!!

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 55 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இணை அமைச்சர் எல் முருகன் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 579 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும் 6 விசைப் படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து… இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது… வெளியுறவுதுறை மந்திரி ஜெய்சங்கர்…!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலவரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மக்களுடன் நட்புறவு தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்ட கால திட்டம். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் […]

Categories
உலக செய்திகள்

இரு நாட்டு அமைச்சர்கள் தீடீர் சந்திப்பு …. வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை ….!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய பயணத்திற்கு முன்பாக  நேற்று ஈரானுக்கு சென்றுள்ளார் . மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் அரசு முறைபயணமாக ரஷ்யா செல்கிறார் . ஆனால் அதற்கு முன்பாக அமைச்சர்  ஈரானுக்கு சென்றுள்ளார்.அவரை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் வரவேற்றார். அதன் பிறகு ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் அதிகாரிகளுடன் உரையாடினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை.. அமைச்சர் ஜெய்சங்கர் திறப்பு..!!

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி சிலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிரீஸ் நாட்டிற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார். நேற்று, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான நிகோஸ் டெண்டியாஸிடம் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Joined FM @NikosDendias and Mayor of Athens @KBakoyannis at the unveiling of Mahatma Gandhi’s statue. The universality and […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் – இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை …!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர், இலங்கைக்கு இன்று சுற்றுப்பயணம் செல்வதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. தினேஷ் குணவர்தனாவின் அழைப்பின்படி, இன்று முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர், அந்நாட்‌டிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு உறவு குறித்து விவாதிக்க இருப்பதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |