பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது அறிக்கையில், “இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அவரை விமர்சிப்பதா? உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இதுதான் ஜனநாயகமா? பாஜகவினர் மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை கூறினால் அதனை எதிர்ப்பீர்களா? ஆதரவாக பேசவில்லை என்பதற்காக […]
Tag: ஜே.பி.நட்டா
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாஜக தலைவர் ஜேபி.நட்டா குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறை அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துக்களால் தாக்குவதாகவும் கூறியுள்ளார். தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசை மேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள் மற்றும் பார்வைகள் இருக்கும். தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் […]
சென்னை வர இருந்த அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை வர இருக்கின்றார். 14ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அன்றைய தினம் கேரளாவில் இருந்து சென்னை வந்து அமித்ஷா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. […]
விரைவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற சமூக கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கோர்க்காக்கள், தலித்கள் உட்பட அனைத்துப் பிரிவினரிடமும் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலன்களை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் அதற்கு மிகவும் கடுமை கடமைப்பட்டுள்ளோம். கொரோனா தொற்றினால் இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கு தாமதமானது. ஆனால் தற்போது தொற்றின் தாக்கம் […]
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி தான் குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் என கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டாவிற்கு எழுதிய கடிதம் முக்கியத்துவம் […]
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை […]