தாலிபான்கள் உள்பட யாரையும் தான் நம்புவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அப்கானிஸ்தானில் தாலிபான்களின் நிலை குறித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாலிபான்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா ? என்பதை நாங்கள் பார்த்து கொண்டிருக்கத்தான் போகிறோம் என்றார். தாலிபான்களை நீங்கள் நம்புகிறீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், தாலிபான்கள் உள்பட யாரையும் நம்பவில்லை என்று அதிரடியாக பதிலளித்தார். மேலும் பேசிய அவர் நான் உங்களை […]
Tag: ஜோ பைடன்
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் துரிதப்படுத்தினார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதிக்குள் அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோசாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4ம் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து 95 சதவீத அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் எஞ்சியுள்ள படைவீரர்களும் வெளியேறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் தீவிரமாகியுள்ளது. மேலும் […]
ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கத்தில் கிளாசை பரிசாக வழங்கியுள்ளார். சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். சந்திப்பை முடித்துவிட்டு இரு நாட்டுத் தலைவர்களையும் ஸ்விட்சர்லாந்து அதிபர் மாளிகைக்கு வரவேற்றார். இதில் ரஷ்ய அதிபரும், அமெரிக்க அதிபரும் இரு நாட்டு சிக்கல்களை பேசி தீர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினுக்கு 23 கேரட் தங்கத்தினாலான […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக நியமிக்க அந்நாட்டுப் பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க நாட்டில் ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சரளா வித்யா நாகலா என்ற பெண்ணை நியமிக்க அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தப் பெண் சிவில் உரிமை வழக்கறிஞர் ஆவார். இந்தப் பரிந்துரையை செனட் சபை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து உள்ளதால் ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய மகாராணியாரின் நடத்தையும், தனித்துவமும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவருடைய மனைவி ஜில்-ம் வின்ட்சர் கோட்டையில் வைத்து பிரித்தானிய மகாராணியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பில் இருவரும் முதல் முறையாக உலக நடப்புகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகாராணியாருடனான இந்த சந்திப்பிற்கு பிறகு ஊடகங்களிடம் பேசிய […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தங்கள் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் ஜோ பைடனுடன் கலந்துரையாடியுள்ளார். பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரான, டோமினிக் ராப் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு நாடுகளுக்கு இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? என்பது தொடர்பில் இருவரும் பேசியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது ராஜ மரபினை மீறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு முறைப்பயணமாக பிரித்தானியாவிற்கு வரும் மற்ற நாட்டை சேர்ந்த தலைவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது மகாராணியார் வருவதற்கு முன்னதாகவே அந்த இடத்திற்கு வருவது வழக்கம். அதேபோல் நிகழ்ச்சி முடிந்தவுடன் மகாராணியார் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்ற பிறகே அங்கிருப்பவர்கள் புறப்பட வேண்டும். இதுதான் ராஜ மரபாக காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. […]
கொரோனா பாதிப்பின் முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா தற்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த வருடம் நாடு முழுவதும் பரவியது. இதில் அமெரிக்கா அதிக பாதிப்பை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதிப்பை கட்டுப்படுத்துவதுடன் அதிபர் ஜோ பைடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல புதிய திட்டங்களை அறிமுகபடுத்த உள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு […]
பருவநிலை மாறுபாடு தொடர்பாக விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்துக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பருவநிலை மாறுபாடு. இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க 40 நாடுகளின் தலைவர்கள் ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் […]
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக பதவியேற்று முதல்முறையாக செய்தியாளர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்காவில் 46- ஆவது புதிய அதிபராக கடந்த மாதம் ஜனவரியில் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை செய்தியாளர்களை சந்திக்க வில்லை. ஆனால் நேற்று முதல் முறையாக வெள்ளை மாளிகையில் அதிபர் […]
ஜோ பைடன் ஜனாதிபதியாக இருக்கும் வரை சீனா அமெரிக்காவை விட சக்தி வாய்ந்த நாடாக ஆக முடியாது என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா மாறுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுப்பேன் என்று கூறியுள்ளார் .மேலும் ஜோ பைடன் அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் கீழ் துணை ஜனாதிபதியாக வேலை பார்த்தபோது சீன ஜனாதிபதியான சி ஜின்பிங் உடன் பேசியதாக கூறியுள்ளார் […]
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக அதிபர் ஜோ பைடன் துணை சுகாதார செயலாளர் பதவிக்கு திருநங்கையான Dr.Rachel Levine என்பவரை நியமித்தார். இதற்கு குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த நியமனதிற்கான மசோதா புதன்கிழமை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சபையில் 52க்கு 48 என்ற கணக்கில் ஆதரவான வாக்குகள் பெற்று துணை சுகாதார துறை அமைச்சராக Rachel Levine நியமனம் […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதியின் அமைச்சரவையில் முக்கிய பதவி கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு பிரிட்டனில் பிறந்தவர்தான் விவேக் மூர்த்தி. இவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அமைச்சரவையில் முக்கிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. அது என்ன தெரியுமா? தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் பதவி. விவேக் மூர்த்தியை தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்தார். இந்நிலையில் அந்த நியமனத்திற்கான மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. […]
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் விமானத்தில் ஏறும் போது படிக்கட்டில் தடுமாறி விழுந்ததை கண்டு கொள்ளாத அமெரிக்க ஊடகங்களை முன்னாள் அதிபர டிரம்ப் திட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அட்லான்டா செல்வதற்காக விமானத்தின் படிக்கட்டில் ஏறும்போது மூன்று முறை தடுமாறி மூன்றாவது முறையில் விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இதனைப் பற்றி செய்திகள் வெளியிடும் போது அமெரிக்க ஊடகங்கள் மட்டும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனை குறித்து முன்னாள் அதிபரான டொனால்ட் […]
வாஷிங்டனில் இருக்கின்ற அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரை அங்கிருந்து நாடு திரும்ப ரஷ்ய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியிலிருந்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றியை தனதாக்கினார். இந்தத் தேர்தலில் அமெரிக்க உளவுத்துறையின் மூலம் ரஷ்ய அதிபரின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோ பைடனை தோற்கடிப்பதற்காக முன்னாள் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பிவிற்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் முயற்சி செய்ததாக உளவுத்துறை கூறியுள்ளது. மேலும் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் ஜப்பானில் உள்ள டோக்கியோவிற்கும் தென்கொரியாவில் உள்ள சியோல் என்ற பகுதிக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணம் சீனாவிற்கு எதிராக ராணுவ கூட்டணியை ஒன்று திரட்டுவதையும் , வடகொரியாவுக்கு எதிராக ஒரு பலமான அணியை திரட்டுவதையும் நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவும் தென் கொரியாவும் கடந்த வாரம் ஒன்றாக இணைந்து ராணுவ […]
அமெரிக்க மக்களிடம் அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பு குறித்து தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 1 வருடத்திற்கு மேலாகி விட்டது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன்,தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் வைரசின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா குறித்து உரையாற்றிய நிகழ்ச்சி மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, ” நாம் ஒரு ஆண்டிற்கு […]
சிரியாவில் வான் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாரான நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென தாக்குதலை ரத்து செய்தார். சிரியாவில் பிப்ரவரி 26-ஆம் தேதி அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடைபெற்றது .அதில் முதல் தாக்குதல் முடிந்த 30 நிமிடத்தில் இரண்டாவது தாக்குதலை நிகழ்த்தும் நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன்தீடிரென அந்த தாக்குதலை நிறுத்துமாறு அறிவித்தார். ஏனெனில் இரண்டாவது தாக்குதல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஒரு பெண்மணியும் சில குழந்தைகளும் உள்ளதாக அதிகாரிகளின் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு தெரியபடுத்தினார். […]
இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுக்க இருந்த முக்கிய பதவியின் நியமனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு சில முக்கிய பதவிகள் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்ற பெண்ணை வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குனராக நியமிப்பதாக உறுதி அளித்தார். ஜோ பைடனின் இந்த வாக்குறுதிக்கு […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடுப்பூசி போட தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கு வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பு ஊசி கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பள்ளிகளை விரைவில் திறப்பதற்கான நோக்கில் கல்வியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகக்குழு […]
ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இடைத்தரகு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளது . 2015 அணுசக்தி ஒப்பந்ததை திரும்ப உறுதியளிக்க அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்துள்ளது . ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற பேச்சு வார்த்தையே இல்லாமல் பொருளாதார தடைகளை எப்படி நீக்குவது என்று கேள்வி எழுப்பியுள்ளது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஈரான் மறுத்ததாக சயீத் கடிப்சாதேஹ் என்ற வெளியுறவு […]
அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் அலெக்ஸ் மூனே பேசியுள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன்படி அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், பண உதவி செய்வதற்காக 2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இக்கூட்டத்தில் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் படி சிரியாவில் பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலானது சமீபத்தில் நடந்த ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலானது ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டது.மேலும் அமெரிக்க […]
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முக்கிய முடிவு ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனா புதிதாக உருமாற்றம் அடைந்ததுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு […]
சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யி அமெரிக்காவிடம் சீனாவிற்கு மற்ற நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார் . அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக பல வர்த்தகத் தடைகளை விதித்திருந்தார். அந்த தடைகளை கைவிடுமாறு தற்போதைய அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்திற்கு சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஹாங்காங் ,தைவான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சீனாவின் பிரச்சினைகளில் […]
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஜோ பைடன் அஞ்சலி செலுத்த உள்ளார். அமெரிக்காவில் கடந்த 5 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கொரோனாவால் இதுவரை 28,765,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 511,133 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இன்று கொரோனாவால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்த […]
வெள்ளை மாளிகையில் வசிப்பது தங்க கூட்டில் இருப்பது போல உணர்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று கடந்த 20ம் தேதி 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அதன் பிறகு அவர் தனது மனைவிக்கு ஜில் பைடனுடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறினார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இதுவே அவர்களின் இல்லம். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜோ பைடன் வெள்ளை […]
அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா -ஈராக் ஆகிய இரு நாடுகளுக்கிடையே அவ நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏனைய நாடுகளும் கையொப்பமிட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்ததாவது, நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன். அது என்னவென்றால், எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நடைமுறையில் மீறப்பட்டுள்ளது.எனவே வெறும் வாக்குறுதி ஒன்றுக்கும் உதவாது. இந்த முறை, […]
அமெரிக்காவில் ஜோ பைடனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் முக்கிய பொருப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனத்தின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சோனாலி நிஜவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே அமைப்பில் வெளியுறவு விவரங்கள் பிரிவில் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதுடைய பிரஸ்டன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு குல்கர்னி தோல்வியடைந்துள்ளார். குல்கர்னி தைவான்,ரஷ்யா,ஈராக்,இஸ்ரேல் மற்றும் ஜமைக்கா நாடுகளில் சேவை புரிந்திருக்கிறார்.மேலும் பொது ராஜதந்திரம், […]
ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதிக்கு உணர்த்த ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை நோர்வேக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆர்லேண்ட் விமான தளத்திற்கு போர் விமானங்களும், 200 அமெரிக்க ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆர்க்டிக் வட்டம் மற்றும் ரஷ்யாவின் வட மேற்கு கடற்கரையின் […]
ஈரான் மீது உள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஆறு வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஈரானுக்கு தங்களது ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்டளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு வரம்புகளும் விதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி டொனால்ட் டிரம்ப் இதில் இருந்து விலகினார். ஈரான் மீது அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்தார். தொடர்ந்து […]
அமெரிக்காவின் உளவுத் துறை தொடர்பான தகவல்களை முன்னாள் அதிபர் டிரம்புக்கு தெரிவிக்ககூடாது என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் இருக்கும் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபர்களுக்கு தெரியப்படுத்தும் வழக்கம் உள்ளது. அதனடிப்படையில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதற்கு எதிராக அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எந்த மதிப்பீட்டின்படி உளவுத் தகவல்களை தெரிவிப்பது? ஏனென்றால் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய எதிர்கட்சி தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது. அதில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கொள்கைக்கு எதிரான முடிவுகள் பரிசீலிக்கப்பட்டது. அமெரிக்கா இனி டிரம்ப் போன்று ரஷ்யா ஜனாதிபதியிடம் நடந்து கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தின் போது அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் மீது சீனா முன்வைத்துள்ள சவால்களை நேரடியாக […]
அமெரிக்காவின் பிரச்சனைகளை தீர்க்கவும், மனித நேயத்துடன் சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும் அதிபர் ஜோ பைடன் 3 உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் குடியேற்றம் தொடர்பான பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவைகள் அனைத்தும் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பல கடுமையான விதிகளை ரத்து செய்யும் வகையில் உள்ளது. *நிபுணர் குழுவிடம் இருந்து ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த 180 நாட்களுக்குள் குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் இந்தியர் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவரை நியமனம் செய்துள்ளார். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் மலேரியாவை கட்டுப்படுத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜோ பைடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் பஞ்சாபி என்ற மருத்துவரை மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார். மருத்துவர் ராஜ் பஞ்சாபி லைபீரியாவில் பிறந்தவர் . உள்நாட்டுப் போரின்போது […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மியான்மரில் ராணுவ ஆட்சி ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு உலக நாடுகள், சட்டத்தை மதித்து […]
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதானது கார்ன் வாலில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன் பிரிட்டனின் ராணியார், இளவரசர் சார்லஸ் தம்பதி, மற்றும் இளவரசர் வில்லியம் தம்பதி உள்ளிட்டோர் இந்த விருதினை ஒன்றிணைந்து சிறப்பிக்க உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போது […]
அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜில் பைடன் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அவரது மனைவியான ஜில் பைடன் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிந்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றிணைக்க ஜோ பைடன் செய்யும் முயற்சிகளில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கட்சிகளை ஆலோசிக்காமலேயே அரசாணைகள் வெளியிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல புதிய அரசாணைகளை பிறப்பித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பைடன் பதவியேற்றவுடன் கொரோனா தடுப்பு, குடியேற்ற விதிகள் போன்ற 36 க்கும் மேற்பட்ட அரசாணைகளில் தொடர்ச்சியாக கையெழுத்திட்டார். இந்நிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அரசாணைகளை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கிடையே பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக முறையில் எதிர்க் கட்சியுடன் ஆலோசனை செய்து தான் […]
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் தற்போது தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 151,879 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 3916 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணியினை தீவிரப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது பதவிக்கால முதல் 100 நாட்களில் 10 […]
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இரு நாட்டு தொடர்பு குறித்து தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன்க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் இரு நாட்டு அதிபர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். இது தொடர்பாக அமெரிக்க அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எங்களுக்கும், எங்களது நட்பு நாடுகளுக்கும் தீங்கு […]
ஜோ பைடன் பதவி ஏற்பார் நாசாவின் தலைமை நிர்வாகி பதவியை விட்டு விலகினார். கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் டிராம்பின் மூலம் ஜிம் பிரிடென்ஸ்டைன் என்பவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றதால், நாசாவின் தலைமை நிர்வாகி பதவியை விட்டு ஜிம் பிரிடென்ஸ்டைன் விலகினார். அந்த பதவிக்கு முதல் முறையாக பெண் ஒருவரை நியமிக்க அதிபர் அலுவலக வட்டாரங்கள் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஜிம் […]
பதவி விலகிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா வழக்கமான சம்பிரதாயங்களை காற்றில் பறக்க விட்டு சென்றுள்ளார். வழக்கமாக புதியதாக பதவி ஏற்கும் அதிபரின் மனைவிக்கு, பதவி விலகும் அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையை சுற்றி காட்டுவது வழக்கம். டீ வைப்பது வழக்கம். இந்த நடைமுறை பல ஆண்டு காலமாக அமெரிக்காவில் இருந்து வருகிறது. அதன்படி புதிய அதிபர் ஜோ பைடன் மனைவி சில்லுக்கு டீ பார்ட்டியை மெலனியா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் பதவி விலகிய […]
அதிபர் சோபையுடன் அரசுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு, அமைதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட எதிர்பார்ப்பில் உள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 2018ல் பாகிஸ்தான் அரசுக்கான அனைத்து விதமான பாதுகாப்பு நிதியுதவிகளையும், டிரம்ப் அரசு நிறுத்தி விட்டது. அதை மீண்டும் பெறும் முயற்சியில் இம்ரான் கான், இவ்வாறு தெரிவித்துள்ளார். வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, காலநிலை பாதிப்புக்கு […]
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்றார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா […]
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் வைத்து பதவி ஏற்றார். கரோனா பரவலைத் தடுப்பதற்காக பைடனின் பதவியேற்பு விழா குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது. முதல்முறையாக, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் முகக் கவசத்துடன் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர். ட்ரம்ப் ஆதரவாளா்கள் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக, இந்த முறை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
அமெரிக்க அதிபராக இன்று கடைசி நாள் என்பதால் டிரம்ப் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார். அமெரிக்காவை பாதுகாப்பாகவும், நலமாகவும் வைத்திருப்பதில் ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஜோ பைடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு மேல் ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக பதவி […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் வன்முறை எதற்கும் பதில் அல்ல என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தேர்வு பெற்றுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிபரிடம் ட்ரம்ப் தன் ஆதரவாளர்களுடன் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார் . இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் கூறியிருப்பதாவது, பொறுமைதான் மிகவும் அவசியம். வன்முறை எதற்கும் பதில் அளிக்காது. அவற்றால் எதையும் நியாயப்படுத்தவும் […]
கூகுள் நிறுவனம் இணையத்தில் அரசியல் ரீதியான தகவல்களை வெளியிட தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு உறுதிச் சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அந்த மன்றத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 5 பேர் உயிர் இழந்து நாடாளுமன்றம் முழுவதும் சூறையாடப்பட்டது.இப்போராட்டத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என்று புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் அவரது சமூக […]