தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுபான கடைகள் உள்ளன. இவைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரையிலும் மது விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை 2 மடங்கு அதிகரிக்கும். இதேபோல் வருகிற புத்தாண்டை முன்னிட்டு 2 நாட்கள் (டிச.,31, ஜன.,1) மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி, ஞாயிறு 2 நாட்களிலும் மது விற்பனை 3300 […]
Tag: டாஸ்மாக்
கோவை வழக்கறிஞரான லோகநாதன் என்பவர் டாஸ்மாக் குறித்த விவரங்களை கேட்டபோது, அது மூன்றாம் நபர் வர்த்தகம் தொடர்புடையது என்று கூறி விவரங்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர் லோகநாதன் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமனறம், டாஸ்மாக்குகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து? எவ்வளவு விலைக்கு? மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை ஜனவரி 6ம் தேதி சீல் வைத்த […]
டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், மது பாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் டாஸ்மாக் […]
மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வோர் ஓலா, உபேர், ரேபிடோ போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்துமாறு போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் அறிவுறுத்தியுள்ளார். அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர, மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை. குடிபோதை வாகன ஓட்டிகளை பிடிப்பதில் தவறில்லை என்றும் டாஸ்மாக் வாசலிலேயே நின்று, குடித்துவிட்டு வாகனம் எடுப்பவரை போலீசார் பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மூலமாக மது விற்பனையை தமிழக அரசு முழுமையாக நடத்தி வருகிறது. மது விற்பனை மூலமாக வருடம் தோறும் ஆயதீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் விதமாக 1937 ஆம் வருடம் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் விதமாக மதுவிலக்கு திருத்த அவசர சட்டமானது நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் […]
டாஸ்மாக்கில் காலி பாட்டல்களை வாங்கும் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ் ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டல்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்று, பின்னர் அந்த காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த பத்து ரூபாய் தொகையை திரும்ப ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ் ஸ்தலங்களில் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் […]
குடிப்பழக்கம் என்பது தமிழகத்தில் மேலோங்கி இருக்கின்றது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குடி குடியை கெடுக்கும் என்று என்னதான் கூறினாலும் யாரும் திருந்தியப்பாடு இல்லை. அதில் சிலரெல்லாம் எப்படா 12 மணி ஆகும் டாஸ்மாக் திறப்பாங்க என்று காத்து கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர். அதிலும் சிலரெல்லாம் திருட்டுத்தனமாக டாஸ்மாக்குள் ஓட்டையை போட்டு குடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. வடிவேலு பாணியில் விடிய விடிய […]
டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதும் வேளையில், கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை தெரிவித்தார். சென்னை, தியாகராய நகரில் உள்ள வாணி மஹால் பகுதியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை, பண்பாட்டு துறை சார்பில் நாட்டிய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் கலந்து கொண்டார். பின்ன செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறியதாவது: “இயற்கையையும், கலையையும் மக்கள் மறந்து விட்டனர். நல்ல பண்பாடு மற்றும் ஆன்மீக […]
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பூலாம்பட்டி ரோடு கோணபைப் என்ற இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் குவிந்துவிடுவர். இவர்கள் குடித்துவிட்டு அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு ரகளைசெய்து வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை […]
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டு பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14-ந் தேதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.273 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக […]
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் வரும் 15ம் தேதி(திங்கட்கிழமை) சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள […]
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மெயின் ரோட்டில் டாஸ்மாக் அமைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் இக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று 42 வது வார்டு கவுன்சிலர் தலைமையில் […]
கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1, ஊராட்சி மன்ற தலைவர்-4, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-26, என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை […]
டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் முகம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க […]
தமிழகம் முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மறைமுகமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த சேவையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளார். ஹெல்மெட் […]
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 மதுக் கடைகளை நடத்தி வருகிறது. அதில் தினசரி 100 கோடி ரூபாய் மதிப்பிலான மதுவகைகள் விற்பனையாகிறது. இது விடுமுறை தினங்களில் 120 கோடி ரூபாயை தாண்டுகிறது. மதுக்கடைகளில் பணப் புழக்கம் அதிகமாக உள்ளதால் கள்ளநோட்டை கண்டறியும் கருவிகள் சில வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன. இப்போது அவை பழுதாகி விட்டது. அண்மை காலமாக மது விற்பனை அதிகமுள்ள மாலை 6:00 முதல் இரவு 9:30 வரை, சிலர் கள்ளநோட்டை கொடுத்து மதுவாங்க […]
தமிழக சட்டமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது சம்பந்தமாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை முழுவதும் கணிணிமயமாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 11 மது உற்பத்தி நிறுவனங்கள், 9 பீர் உற்பத்தி நிறுவனங்கள் ,1 ஒயின் உற்பத்தி நிறுவனங்கள் வாயிலாக மதுவகைகள் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யபடுகிறது. இதில் உற்பத்தி துவங்கும் இடம்முதல் விற்பனை செய்யும் இடம்வரை மொத்த […]
2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம்வ வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கவே ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் நிதி நெருக்கடி நேரத்திலும் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டு […]
பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மேல் முறையீடு செய்துள்ளது. 6 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான பார்களை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. கடந்த 2019-21 வருடத்துக்கான பார் உரிமம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயோ அல்லது வேறு தனியார் இடத்திலேயோ தான் அருந்த வேண்டும் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் வாக்கு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருப்பதால் (ஒரு நாள் […]
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் அதிவேகமாக பரவி வந்த கொரோனா 3-வது அலை குறைந்ததை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது டாஸ்மாக் கடைகளும் வழக்கமான நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளன. இதனிடையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மீண்டும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. அதாவது தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை முதல் (பிப்ரவரி 17) 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணும் நாளான 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட […]
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கோகுல் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 நபர்கள் கோகுலைக் கட்டையால் அடித்தது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த 2 நபர்கள் பாரில் பணியாற்றிய ராமநாதபுரத்தை சேர்ந்த செபாஸ்டியன் மற்றும் சிவகங்கையை சேர்ந்த கோபி […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி […]
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பிலுள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை, காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனமானது அறிவித்தது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக பார் உரிமையாளர்கள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒளிவு மறைவும் இல்லை என்று விளக்கம் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே […]
தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகைகளின் போதும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த வாரம் பொங்கல் பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிப்பு என்ற செய்தி வெளியான உடனே மது பிரியர்கள் டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லரை கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. அதில் தினமும் சராசரியாக ரூ 100 கோடிக்கும், வார விடுமுறை தினங்களில் அதைவிட அதிகமாகவும் மது விற்பனை ஆகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை விடுமுறை நாட்களில் மது விற்பனையானது களைகட்டும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 680 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகி இருக்கிறது. ஜனவரி 12, […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனவரி 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை வழிபாட்டுத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது குறித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர் மற்றும் உணவகங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாமல் […]
தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாமல் இருந்தது. […]
தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகள் நான்கு நாட்கள் மூடப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18 ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் மதுபானம் விற்பனை இல்லா தினமாக அனுசரிக்கப்பட இருக்கிறது. எனவே ஜனவரி 15,18,26 ஆகிய தினங்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் […]
தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2530 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் முடிந்துவிட்டதாகவும் 8 மாவட்டங்களில் மட்டும் சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பது மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. […]
டாஸ்மார்க் டெண்டரில் நடந்த விதி மீறல் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக்கில் உள்ள பார்கள் டெண்டர் விடப்பட்டத்தில் விதிமீறல்கள் நடந்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 5,387 கடைகள் இருக்கின்றன. அதில் 2,168 கடைகளில் மட்டுமே பார்கள் செயல்படுகின்றன . மீதமுள்ள 1551 கடைகளில் பார்கள் செயல்படவில்லை. இந்த பார்களை நடத்துவதற்கான டெண்டர் விண்ணப்பம் ஆன்லைனில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் மொத்தமாக 25,009 நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 6,761 மேற்பார்வையாளர்களும், 15,090 விற்பனையாளர்களும் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் […]
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் அமைப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ள டெண்டர்களை தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் ஆகியவற்றுக்கு புதிய டெண்டரை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் ஆப்செட் பிரைஸ் என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு டெண்டர் விதிகளின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கான டெண்டரை இந்த மாதம் கோரவேண்டும் என்றும், […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமால் இருந்து வந்தன. தொற்று குறைவாக உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கிய நிலையில் டாஸ்மாக் கடைகள் முன்பு போல பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இன்றி தன்னிச்சையாக நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளித்துள்ளனர். இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக […]
தமிழ்நாட்டில் இன்று முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்று டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. ஆனால் கொரோனா பரவல் குறைந்த பிறகு தலைவர்கள் வழங்கப்பட்டு வந்தன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுக்கும், தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் நேரம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டு காலை 10 […]
டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாற்றில் 12-ஆவது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக அளவில் உருமாறி, புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட […]
மதுபான கடைகள், டாஸ்மாக் கடைகள் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி பணியை மேலும் தீவிரப்படுத்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இதுவரை 11 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று […]
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் முஸ்லாம்புரா என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிநபர் ஒருவர் நடத்தி வரும் அந்த மதுபான கடையால், ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் மது அருந்துவது மற்றும் அந்த வழியாக செல்லும் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த மதுபான கடையை அகற்றக் கோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு டாஸ்மாக்கில் 431 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் டாஸ்மாக்கில் 437 ரூபாய் கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும், கடந்த 3ஆம் தேதி 205.61 கோடி ரூபாய்க்கும், 4ஆம் தேதி 225.42 ரூபாய் கோடிக்கும், டாஸ்மாக்கில் மது விற்பனையாகி உள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகமாக மதுரை மண்டலம் 51.68 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலம் 47.57 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலம் […]
6 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியில் 9 கடைகள் இருக்கிறது. இதில் பேரூராட்சி பகுதியில் 14 கடைகளும், கிராமப்புறங்களில் 45 கடைகளும் என மொத்தம் 68 டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கின்றது. இவற்றில் […]