தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த ஓரிரு நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான மது வகைகள், தற்போது மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000-த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் சராசரியாக வார நாட்களில் ரூ.90 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் விற்பனையாகும்.. கடந்த கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. […]
Tag: டாஸ்மாக்
4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீரியம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் பகுதிகளிலும், செங்கல்பட்டு பெருநகர சென்னை காவல் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் […]
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது. அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்தது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. […]
தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்துள்ளது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 98.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் […]
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 24 மதுக்கடைகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் 3 மதுக்கடைகள், உத்திரமேரூரில் 3 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்கள், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மதுபான கடைகளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு விதித்த இடைக்கால தடை உத்தரவு என்பது தற்போது நீக்கப் பட்டு இருக்கிறது. அதற்கு ஒரு இடைக்கால தடை என்பது உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாளையிலிருந்து தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறந்து கொள்ளலாம் என்பதுதான் தற்போது உறுதியாகி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தால் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை […]
டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது . தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான […]
மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட் செய்துள்ளார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். இன்று நடைபெற்ற விசாரணையில் […]
சென்னை உயர்நீதிமன்ற டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகின்றது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று மனுதாரர் தரப்பில் அனைத்து முக்கிய வாதங்களும் வைக்கப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பார்த்த நீதிபதிகள் இதில் […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு தாக்கல் செய்துள்ளது டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதியின் முழு அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மதுக்கடையை திறக்கக் கூடாது எனறு நீதிமன்றம் 8ஆம் தேதி உத்தரவிடப்பட்டதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் அளவிற்கு 16% கடைகள் […]
ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன செய்வாரோ அதைத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை தமீமுன் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” நாட்டு மக்கள் விரும்புவதைத் தான் முதலமைச்சர் விரும்புவதாக கூறினார். டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், டாஸ்மாக் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய […]
டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி […]
தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 43 நாட்களுக்கு பின்னர் நேற்று மதுக்கடைகள் திறப்பட்ட நிலையில் அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடி என ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]
மதுக்கடைகள் முன்பு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது பலரின் கண்டத்தையும் பெற்றது. இந்த நிலையில் நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் […]
கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் என தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அழித்துள்ளது குறித்து கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக […]
தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். மேலும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்ட பொழுது, மத்திய அரசு மதுபான […]
ஆந்திராவின் சித்தூரில், மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். மேலும் சமூக இடைவெளி என்பது சுத்தமாக கடைபிடிக்கவில்லை. நாடு முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும் […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ 2,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது… அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் சிரமப்படுவதோடு மட்டுமில்லாமல் அரசுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் மொத்தம் அரசின் 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. […]
ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளும் மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருக்கும் தனியார் மதுபான கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்த பொழுது 20,000 ரூபாய் […]
கடலூர் ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 3ம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மது […]
கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரி , வணிக வளாகம் , பெரிய பெரிய மால்கள் , பார்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கொரோனா வைரஸ் பரவுவதை […]
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக், கிளப் ஆகியவற்றை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக தற்போது பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரோனா தொடர்பான ஆலோசனை […]
கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கடந்த வாரம் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததில் , கொரோனா வைரஸ் தடுப்பதற்கு அதிகமாக கைகழுவ வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார்கள். இதன் அடிப்படையில் கைகளை கழுவுவதற்கு தேவையான நீரை வாங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி சூரியப் பிரகாசம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் […]