சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சி தருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை காணப்பட வேண்டும். இல்லை எனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணன் பிரசாத் அமர்வு எச்சரித்து இருக்கிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை பார்க்கும் போது நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என நீதிபதிகள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.
Tag: டாஸ்மார்க்
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளின் இணைப்பாக செயல்படும் பார்களையும் ஆறுமாதங்களுக்கு மூட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளித்து பேசியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1719 பார்களை உடனடியாக மூட வேண்டும் எனவும் மீதமுள்ள பார்களை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட கூடிய ஒரு தீர்ப்பாகும். 2019 ஆம் ஆண்டிலிருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா இரண்டாம் அலை இருந்த போது, நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள்…. கர்நாடகாவில் ஒருநாள்கூட கடைகள் மதுக்கடை மூடப்படவில்லை, பாண்டிச்சேரியில் அதே மாதிரி மூடப்படவில்லை. தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூடுகின்ற போது கர்நாடகா பாண்டிச்சேரி போன்ற பகுதியில் இருந்து சட்டவிரோதமாக சில தவறுகள் நடைபெறுகின்றன. அதற்காக நான் நியாயப்படுத்தவில்லை. மருத்துவ வல்லுநர்களிடம் அரசின் சார்பில் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அவர்களுக்கு ஆலோசனை கூட்டங்களை நடத்தி அதன் அடிப்படையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது, டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனியும் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு, ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல், ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை. புதிய […]
அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரன், தமிழகத்தில் கொரோனா காரணமாக பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக்கை அடைக்காததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தை குறைக்க பல புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், நாளையிலிருந்து நாடு முழுக்க இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இணையதள வகுப்புகள், மருத்துவம் தவிர கல்லூரிகள் அனைத்திற்கும் இம்மாதம் 20ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் நாளை முதல் 4 மணிநேரம் மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்குவரும் நிலையில் டாஸ்மாக் கடைகளின் […]
தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் […]
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை இன்று முதல் திறக்கலாம் என்றும், 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மார்க் மேலாண் இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் பார்களை இன்று ( செவ்வாய்க்கிழமை ) முதல் திறக்க அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பார் ஊழியர்களுக்கும், பார்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் டாஸ்மார்க் விதித்துள்ளது. அதன்படி காய்ச்சல் கண்டறியும் கருவியின் மூலம் […]
கொரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதையும் கணக்கில் கொண்டு வருகின்ற நாட்களில் இந்தத் தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தின் போதே டாஸ்மார்க் கடைகளும், மது பார்களும் மூடப்பட்டன. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பார்க்க அனுமதி […]
தமிழ்நாடு டாஸ்மார்க் பார் உரிமையாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன் மதுபாட்டில்களை 50 சதவீதம் தொகையை குறைக்க வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக் கடையில் பணியாளர்கள் மது பாட்டில் ஒன்றுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும் மாதங்களுக்கான மாதாந்திர உரிமை தொகையை 50 சதவீதம் குறைத்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் நல சங்க மாநில தலைவர் திரு அன்பரசன் வலியுறுத்தி உள்ளார்.
மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம் என்று உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் மனு தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தில் 7,8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளில் நீதிமன்றம் விதித்த உத்தரவுகள் பின்பற்றப்பட வில்லை என்பதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என்ற தகவலையும் […]
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய பல வியூகங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழக அரசு மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறது. குறிப்பாக மதுக்கடைகள் தமிழகத்திற்கு பெரும் அளவு வருமானத்தை […]
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று நீதிபதிகள் […]