விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 1.24 கோடி வீடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் நீக்கியது. இதில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் 1,24,90,309 வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக டிக் டாக் நிறுவனம் நிர்ணயத்துள்ள விதிமுறைகளை மீறி வீடியோக்கள் பதிவு […]
Tag: டிக் டாக் நிறுவனம்
டிக் டாக் செயலியை அரசாங்கம் தடை செய்த பிறகு அந்நிறுவனம் இந்தியாவில் இருக்கும் அதன் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. டிக் டாக் என்பது சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்தின் பொழுதுபோக்கு செயலி. இதன் மூலம் லட்சக்கணக்கான பேர் பாட்டு, நடனம் என பொழுது போக்கி வந்தனர். இந்த நிலையில் அந்த செயலில் சேகரிக்கப்படும் பயனர் விவரங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி மத்திய அரசு அதனை தடை செய்தது. சீனா-இந்தியா இடையிலான உறவு, எல்லை […]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவினால் டிக் டாக் நிறுவனம் ஸ்தம்பித்துள்ளது. அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம்சாட்டி தடை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 45 நாட்களுக்குள் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பதிப்பை வேறு நிறுவனத்திற்கு விற்க்க வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவின் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிக் டாக் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடைவிதிக்கும் உத்தரவிலும் […]
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. சீனாவிற்கு சொந்தமாக இருக்கின்ற பிரபல டிக் டாக் நிறுவனத்தினை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். உலக அளவில் மிகவும் பிரபலமடைந்துள்ள குறு வீடியோ செயலியான டிக் டாக், ஏற்கனவே இந்தியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் தடைவிதிக்க போகும் அபாயத்தை தொடர்ந்து, மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான […]