தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் குரூப்-2 தேர்வின் கீழ் 5,831 காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-4 தேர்வின் கீழ் காலியாக உள்ள 5,255 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மற்ற துறைகளை தொடர்ந்து காவல்துறையிலும் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தீயணைப்பு வீரர்கள், […]
Tag: டிஜிபி சைலேந்திரபாபு
தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதாவது, சென்னை உயர்நீதிமன்றம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த […]
தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதில், ஊரடங்கு அமலில் […]
உலகம் முழுவதிலும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக பெரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோயில் வழிபாடு, வீடுகளில் சிறியதான கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு […]
தேவைப்பட்டால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.. கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) பூலாங்குடி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஆடுகளை திருடி கொண்டு வந்துள்ளனர்.. அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி பூமிநாதன் விசாரித்த போது வேகமாக பைக்கில் தப்பி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து பூமிநாதன் 15 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை,தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படைகள் உள்ளன […]
தமிழகத்தில் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிதாக காவலர் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் காவலன் நலனுக்காக காவலர் அங்காடிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி டிஜிபி சைலேந்திரபாபு,காவலர் அங்காடி தொடங்குவதற்கு பொருத்தமான கட்டிடங்களை தேர்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். […]
தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து அனைத்து காதலர்களுக்கும் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் செலவில்லா மருத்துவ வசதியை பெற கூடிய வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016 கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு மருத்துவ காப்பீட்டு திட்டம் […]
தமிழகத்தில் போக்சோ பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்களை வழக்கமான முறையில் செய்வது போல வீடியோ பதிவு செய்யக் கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாலியல் குற்றம் தொடர்பான போக்சோ சட்ட வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை நகலை, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு வழங்க வேண்டும். அது மரணமாக இருந்தாலும், பிற குற்றங்களாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு சென்றடைந்தவுடன் உடனடியாக வழங்க வேண்டும். […]
தமிழகத்தில் மனித உரிமைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி வசூல் செய்வோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மனித உரிமைகள் மீறப்படும் போது,அது குறித்து உரிய விசாரணை நடத்தி அரசுக்கு தக்க பரிந்துரை செய்ய டெல்லியில் தேசிய மனித உரிமை கமிஷன் உள்ளது. அதனைப் போலவே தமிழகத்திலும் உள்ளது. இருந்தாலும் சில தனியார் அமைப்பினர் தங்களை தேசிய மற்றும் மாநில மனித உரிமை கமிஷன் உடன் தொடர்பு […]
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் ஏற்பட்ட விபத்துகள் குறித்த விவரங்களை அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் அரசு பேருந்து விபத்தில் சிக்கி பல பேர் உயிரிழப்பது மற்றும் படு காயம் அடைவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு போக்குவரத்து பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துக்கள் மொத்தம் எத்தனை? விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?என்ற விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட எஸ்பிகள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு […]
தமிழகத்தில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்டறிய அனைத்து காவல் நிலையத்திற்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் கொலை குற்றங்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை 3 நாட்கள் தொடர்ந்து ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ நடத்தினார்கள்.. இந்த அதிரடி ஆபரேஷனை தமிழக காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தியது.. சென்னையிலும் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குறிப்பாக 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கொலை சம்பந்தப்பட்ட 1,110 கத்திகள், 7 கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தமிழக […]
ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்கவும், கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கடந்த இரண்டு நாட்களாக அதிரடி கைது நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.. இந்தசோதனையில் 36 […]
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வந்து, தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுக்க ஆலோசனை செய்கிறார்.. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவும், இந்த கொடூர சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்தால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.. இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வருகின்றார். நெல்லை மாநகர காவல்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட […]
தமிழகம் முழுவதும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் அதிரடியாக 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கைதான ரவுடிகளிடம் இருந்து 256 அரிவாள், கத்திகள் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.. அவர்களிடமிருந்து கஞ்சா, மாவா பொட்டலங்கள் சிக்கின. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க போலீசார் இந்த அதிரடி ரெய்டு நடத்தினர்.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும். காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே நீக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.. அதில், சில காவல் நிலையங்களில் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அது பொதுமக்களிடையே ஒரு தவறான புரிதலை காட்டும். எனவே தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும்.. காவல் நிலைய பெயர் […]