திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அண்ணா நகரில் உள்ள 2-வது அவென்யூ டவர் பூங்கா மற்றும் ஐயப்பன் கோவில் அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் திடீரென நேற்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு உயர் மின்னழுத்தம் […]
Tag: டிரான்ஸ்பார்மர்
டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீ கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பின்புறம் புதுபள்ளி அருகில் அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீப்பிடித்து விடுமோ என்ற பயத்தில் அலறி அடித்துக்கொண்டு வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் மின் இணைப்பை சீர்செய்யும் பணியில் […]
டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள அல்லிபுரம் கிராமத்தில் வேல்முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் மின் தடை ஏற்படும் போது பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சரி செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேல்முருகனிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் அங்குள்ள […]
டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேலபருத்தியூர் கிராமத்தில் ராஜேஷ் என்பவர் எலக்ட்ரிஷன் வேலைப்பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மேலபருத்தியூர் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் கோளாறு ஏற்பட்டதால் மின் துண்டிப்பு ஏற்பட்டது. எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதனால் கோளாறை சரி செய்வதற்கு மின்வாரிய ஊழியர்கள் வரமாட்டார்கள் என நினைத்து மின் துண்டிப்பை சரி செய்ய ராஜேஷ் டிரான்ஸ்பார்மரில் ஏறியுள்ளார். அப்போது ராஜேஷ் மீது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் […]