பிரதமர் மோடியின் தாயார் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக குஜராத் அரசு தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று ஆமதாபாத்தில் உள்ள யூ.என் மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த பிரதமர் மோடி நேற்று மதியம் விமான […]
Tag: டிஸ்சார்ஜ்
தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக காரணமாக கடந்த 2ஆம் தேதி டிடிவி தினகரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிடிவி தினகரன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த ஜூலை 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை முடிந்த முதல் பஸ் ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஒரு வார காலத்திற்கு […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு நுரையீரலில் 10 சதவிகிதம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி தொடர் நான்கு நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சூழலில் முதல்வர் டிஸ்சார்ஜ் குறித்து காவிரி […]
காவிரி மருத்துவமனையில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக கடந்த 14ஆம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறி, பரிசோதனை மற்றும் […]
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்த அவர் நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடப்பதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் வேகமாக குணமடைந்து வருகிறார். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இருப்பினும் இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுக்க […]
மருத்துவமனையிலிருந்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் தொடர்ந்து தீவிரமாக பரவி வந்து தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்ததாவது: […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பழம்பெரும் ஹிந்தி நடிகரான திலீப்குமார் (வயது98) அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. ஆகையால் அவர் மாதா மாதம் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சினை காரணமாக அவர் திடீரென மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமாகி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவர் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்தது. இதனையடுத்து அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி மூன்று நாட்கள் நன்றாக ஓய்வெடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குடலிறக்கம் […]
முத்தையா முரளிதரன் நெஞ்சு வலியின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். இலங்கை கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. தற்போது ஐபிஎலில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி, ஹைதராபாத்அணிகள் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சுந்தர் சி பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனரும், நடிகரும், பிரபல நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். […]
விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு ஜனவரி 20 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு கொரோனா பூர்த்தி செய்யப்பட்டது. இதையடுத்து அதே அறையில் தங்கியிருந்த இளவரசிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கும் […]
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா இன்று காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தமது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருக்கு கொரோணா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு […]
சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27- ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றில் இருந்து மீண்டதால் நாளை (31/01/2021) காலை 10.00 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். […]
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டு கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் […]
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவரின் மனைவி பிரேமலதாவும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.சில நாட்களுக்கு பின்னர் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து கடந்த 2ஆம் தேதி வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி […]
கோவை அரசு மருத்துவமனையில் முழுமையாக குணமடையாத நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத் திணறலால் அவதிப்பட எந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிகாமல் அலைக்கழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கோவை கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நோய் தொற்று குணமாகாத நிலையில் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […]
கோழிக்கோடு விமான விபத்தில் மேலும் 74 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என ஏர் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் 6 விமானிகள் மற்றும் 190 பேருடன் சென்ற 7-ஆம் தேதி இரவு தரையிறங்கும் நேரத்தில் விபத்துக்குள்ளாகி துண்டு துண்டாகியது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை […]
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் அவரது மகன் ஆராத்ய மருத்துவமைகளிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11 தேதி அன்று கொரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய்,பேத்தி ஆராத்ய ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமிதா பச்சன் அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா […]
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 50,074 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.53% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 86,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் மட்டும் 2,393 பேர் […]
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 47,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.37% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 86,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 62 பேர் […]
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 5ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.96% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. […]
தமிழகத்தில் இன்று 1,362 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,409 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.84% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா […]
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 3ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.17% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. […]
தூத்துக்குடி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் தலா 15 பேர் என மொத்தம் 30 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பிய 15 பேரையும் கடம்பூர் ராஜு மற்றும் மருத்துவர்கள் பழங்கள் கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று வரை 306 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168 பேர் இதுவரை குணமடைந்து […]
தமிழகத்தில் இன்று 610 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 14,316 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.33% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,244 பெருக்கு இன்று கொரோனா உறுதி […]
தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.88% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் […]
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே நீலகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதமும் உயர்ந்து வருவது கவனிக்க […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 15,512 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் குணமடைந்து வீடு திரும்புவார்களின் எண்ணிக்கையும் உயர்வது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]
திருவாரூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜி செய்யப்பட்டுள்ளதால் திருவாரூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. திருவாரூரில் இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மீதம் இருந்த இரண்டு நபர்களுக்கும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் வழி அனுப்பி […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் 2 பேர் மட்டுமே உள்ளனர். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத பச்சை மாவட்டமாக இருந்தது. இந்த நிலையில் மே4ம் தேதி 2 மூதாட்டிகளுக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அதுபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. […]
இன்று கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரும், மதுரையில் 19 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட 416 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த […]
கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா இல்லாத மாநகராட்சியாக சேலம் மாறியது. சேலம் மாவட்டம் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது. சேலத்தில் முதல்முதலாக மார்ச் 11ம் தேதி 5 நபர்களுக்கு கொரோனா வைரசு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 24 ஆண்கள், 11 பெண்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
கடலூர் மாவட்டத்தில் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 384 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை 80 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 28 பேரும் சிதம்பரம் […]
கொரோனா தொற்றால் பாதிப்படைந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 2 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த […]
அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரியலூரில் 275 […]
சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். சென்னையில் இதுவரை 25கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட 25 கர்ப்பிணி பெண்கள் சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பிரசவம் ஆன 3 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் தற்போது, 4 கர்ப்பிணி பெண்கள் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் புதிதாக 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு – […]
டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள் மூலம் நன்றாக பலன் கிடைத்துள்ளன என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஐசியூ-வில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு […]
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2,084 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 1,823 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்ட நிலையில், 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 மாவட்டங்களையும் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து […]
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 72 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, இன்று 2 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 52 […]
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக அளவில் குணமடைந்து மக்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 30 பேர் கொரோனா பாதிப்புக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மார்ச் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் நேர அடிப்படையில் 105 மருத்துவர்கள் 110 செவிலியர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேரத்திற்கு சரியான உணவு, மருந்து ஆகியவற்றை […]
விழுப்புரத்தில் கொரோனா இரண்டாவது பரிசோதனை முடிவு வரும் முன்பே அலட்சியத்தால் 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 4 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இருந்து கடநத 7 ஆம் தேதி தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த நிலையில் 2வது பரிசோதனை முடிவு வரும் முன்பே 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று வந்த இரண்டாவது ஆய்வு முடிவில் நால்வருக்கும் கொரோனா இருப்பது […]