மத்திய அரசின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதை விட போன் மூலம் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் வாங்குகின்றனர். இந்த நிறுவனங்களில் பொருட்களின் விலை குறைவு என மக்கள் நன்புகின்றனர் . ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்று இருக்கிறது. இதில் மற்ற நிறுவனங்களை விட தரமான பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். […]
Tag: டெக்னலாஜி
பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆண்டுதோறும் பல கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்துவது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே இருக்கிறது. இந்நிலையில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரெனோ, கியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்த போவதாக கூறியுள்ளது. அதேபோல் ஹோண்டா நிறுவனமும் விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து […]
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் வீடியோ கால், குரூப் சாட் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளதால் அனைவருடைய முக்கிய அங்கமாக இது மாறிவிட்டது. இந்த நிலையில் வாட்ஸ்அப் குரூப் சாட்டில் பிறர் அனுப்பும் குறுஞ்செய்தியை டெலிட் செய்ய அந்த குரூப் அட்மினுக்கு அதிகாரம் வழங்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் விரைவில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப் வாயிலாக பொய் செய்திகளை பரவுவதை தடுக்கும் […]
வெறும் ஒரு ரூபாய்க்கு மட்டும் ரீசார்ஜ் செய்யும் புதிய பிளானை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் பிளானில் 100 எம்பி மொபைல் டேட்டா கிடைக்கும். ஜியோ வாடிக்கையாளர்கள் அந்த 100 எம்பி டேட்டாவை பயன்படுத்திய பிறகு அவர்களின் இணைய இணைப்பின் வேகம் மணிக்கு 65 கிலோ பிட்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் மை ஜியோ ஆப் அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். பத்து ரூபாய்க்கு […]
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு உலகம் நவீனமயமாகி விட்டது. செல்போன் மூலம் உலக நடப்புகளை மட்டும் அல்லாமல் சமையல் உட்பட நமக்கு என்னென்ன தேவையோ அதை யூடியூபில் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு பலரும் யூடியூப் வலைதளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வீடியோக்களாக தொகுத்து யூடியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் தொடங்கினால் […]
சென்னையில் வரும் மூன்று நாட்களுக்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் இதன்படி மே 1ஆம் தேதி வரை பிஎஸ்என்எல் சேவை காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தன்னுடைய பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.367 பிரீபெய்டு திட்டத்தில் ரூ.30 வரை விலை உயர்த்தி தற்போது ரூ.397 விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ரூ.397 க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற கால், தினமும் 2 ஜிபி டேட்டா போன்ற நன்மைகள் 60 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் ரிங்டோன் (பிஆர்பிடி) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும்.
ஏர்டெல் மற்றும் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியா சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல், ஜியோக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 47க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அனைத்து நெட்வொர்க்கிற்கும் இலவச அழைப்பு மேற்கொள்ளலாம். இதுதவிர தினமும் ரூ.100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சிறுவர்கள் இணைய விளையாட்டிற்கு அடிமையாகி வருவது பெற்றோர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. நகரங்களில் மட்டுமல்லாது தற்போது கிராமங்களில் இருக்கும் சிறுவர்களின் மத்தியில் மொபைல் விளையாட்டுகள் பிரபலமாகி உள்ளது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர்களை இந்த இணைய விளையாட்டுகள் தற்போது தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் சிறுவர்களும் இதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுவர்கள் இதிலேயே மூழ்கிப் போகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு […]
கொரோனாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதுகாப்பதற்கு ரோபோ ஒன்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனோவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இருந்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் கடந்துள்ளது. இது மேலும் தொடர்ந்து பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாக உயர தொடங்கிவிடும். இதனை […]