அமெரிக்க நாட்டில் 21 மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் சுமார் 51 வருடங்கள் கழித்து குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1971 ஆம் வருடத்தில் மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தங்களின் 21 மாத குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு பராமரிப்பாளரை நியமித்திருக்கிறார்கள். ஒரு நாள் பராமரிப்பாளரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிய அவரின் தாய் வெளியில் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்து பார்த்த […]
Tag: #டெக்ஸாஸ்
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் நிலவிய தீவிர பனிப்பொழிவை டைம் லேப்ஸ் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ நன்கு வெளிக்காட்டி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பனிப்பொழிவு நிலவியதை டைம் லேப்ஸ் முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிமழை மற்றும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மற்றும் கொலராடோவில் இருந்து மத்திய மேற்கு பகுதிகள் வழியாக வடக்கு நியூயார்க்கை இந்த பனிப்புயல் இன்று காலை சென்றடைந்துள்ளது […]
அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கென்று அமைக்கப்பட்ட நீர் பூங்காவில் ரசாயனக் கசிவு உருவாகி 60 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஸ்பிரிங் என்ற பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்காகவே நீர்பூங்கா இருக்கிறது. தற்போது, இப்பூங்காவில் திடீரென்று ரசாயன கசிவு உருவானது. இதில் 60 நபர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சுவாசக்கோளாறுகளும் தோல் எரிச்சல் பாதிப்பும் உண்டானது. இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பூங்காவிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டர்கள். அதில் 26 நபர்கள் மருத்துவமனைகளில் […]
அமெரிக்காவில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு இருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் இருக்கும் நபர் அவரின் மனைவியை சுட போவதாக மிரட்டியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இதனையடுத்து அந்த வீட்டின் அருகே செல்ல முயன்றபோது அந்த வீட்டிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் காவல்துறையினரை சுட்டுள்ளார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/02/19/2220721885139782635/636x382_MP4_2220721885139782635.mp4 இதில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். […]
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் டல்லாஸ் நகரின் 11 மாடிகளை கொண்ட உயரமான கட்டடம் திடீரென சாய்ந்தவாறு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து அந்த கட்டடம் கடந்த 17 ஆம் தேதி (திங்கள் கிழமை) வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் சரிந்து விழுந்து மண் குவியலாக காட்சியளிக்கிறது. முன்னதாக சரிந்து நின்ற அந்த கட்டடத்தை […]