உத்திரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் ஆகிய பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவர் அதிகாரி நானக் ஷரண் கூறியது, ‘மாவட்டத்தில் டெங்கு ஆய்வு செய்வதற்காக பல பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது’ […]
Tag: டெங்கு காச்சல்
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. இந்த கொசுக்கள் கடித்தால் டெங்குக் காய்ச்சல் பரவ கூடும். இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துவருகிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதன்படி நவம்பர் மாதம் 68 பேர் […]
கோவையில் குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து, அதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் […]
சென்னை தியாகராயநகரில் அரங்கில் வைத்து கட்டுமான ஊழியர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிகர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், கருணாநிதி, பிரபாகர் ராஜா மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் என்ற புத்தகத்தை வெளியிட்டு www.tndph.com என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். அதன்பிறகு […]