டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]
Tag: டெண்டர் முறைகேடு
டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக […]
தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் பிரகாஷ் டீக்காராமன் அமர்வு இனி வேலுமணி மனு குறித்து விசாரணை நடத்தும்..
தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர்,சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது.அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தருவதாக கூறி மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் படி இ பி எஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். […]
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் இன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கெதிராக திமுகவின் அமைச்சர் பாரதி ஆர்.எஸ். பாரதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் […]
எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேலுமணி வழக்கை தனி நீதிபதிக்கு பதில் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்திருந்தது தமிழக அரசு.
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் 74,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக புகார் கூறியது. மேலும் இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஈபிஎஸ்இன் […]
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ் பி வேலுமணி சுமார் 50 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பிறகு எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த நிரந்தர வைப்பீடு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை அடக்கம் செய்தது. இதுதொடர்பாக சென்னையில் […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான முழு விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய பருவத் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அந்த விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கள் விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரள மாநில தேர்வு மையங்களில் இருந்து வந்த விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் […]
தஞ்சை மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு என ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கை, ஆர்.எஸ் பாரதி வாபஸ் பெற்றுள்ளார். வழக்கின் விவரம்: நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்க முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 462 கி.மீ சாலைகள் […]
பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று ஆர்.எஸ்.பாரதி சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது லஞ்சஒழிப்பு துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய […]
பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த டெண்டரை இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]
தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனு விவரம்: மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் […]