டென்மார்க் நாட்டின் ராணி இரண்டாம் மார்கரெத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் அரண்மனை வெளியிட்ட தகவலின் படி, ராணிக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ராணி ஃப்ரெடென்ஷ்பார்க் அரண்மனையில் இருக்கிறார். ராணி, இந்த வாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் ராணி மார்கரெத்திற்கு, 82 வயதாகிறது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கிறது. இந்த வருடத்தில் ராணி மார்கரெத்திற்கு இரண்டாம் தடவையாக […]
Tag: டென்மார்க்
டென்மார்க் நாட்டை சேர்ந்த கிறிஸ்த்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க் என்பவர் 1706 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தரங்கம்பாடி பகுதிக்கு வந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்ததும் அங்கு ஒரு அச்சகம் நிறுவினார். இதையடுத்து 1715 ஆம் ஆண்டு பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு என்ற பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். இதுவே தமிழில் முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகமாகும். இந்த பைபிளை தான் சார் வேர்ட்ஸ் என்று மற்றொரு கிறிஸ்துவ தூதர் தஞ்சாவூர் பகுதியை ஆட்சி செய்து வந்தபோது சர்போஜி […]
உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களை உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார். டென்மார்க் நாட்டில் மத்திய கோபன்ஹேகன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளனர். இதனையடுத்து உக்ரைன் மக்களுடன் டென்மார்க் மக்கள் துணை இருப்பதை வெளிப்படுத்தியவாறு “இருளில் ஒரு வெளிச்சம்” என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களை வரவேற்ற ஜெலன்ஸ்கி “ஐரோப்பாவிற்குள் போர் மூண்டுள்ளது மிருகத்தனமானது” என்று கூறியவாறு டென்மார்க் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது டென்மார்க் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அரச முறைப் பயணமாக ஐரோப்பா சென்றிருக்கிறார். தற்போது பயணத்தின் இரண்டாம் கட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றிருக்கும் அவர் அந்நாட்டின் ராணியான இரண்டாம் மார்கிரேத்தை நேரில் சந்தித்துள்ளார். மேலும், இந்திய-நார்டிக் உச்சிமாநாடு நடந்து கொண்டிருப்பதால் அங்கு சென்று 4 நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் மோடி இந்தியா சார்பாக நினைவு […]
ஐரோப்பிய சுற்றுப் பயணத்திற்கு அடுத்தகட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தனி விமானம் மூலம் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் முதற்கட்ட பயணமாக ஜெர்மனியின் அதிபர் ஒலாப் ஷொல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து இவர் ஜெர்மனியிலிருந்து […]
ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடுகள் பற்றி டென்மார்க்கில் உள்ள ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அது ஆல்பா,பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றங்கள் அடைந்து வருகிறது. அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஒமைக்ரான் உலகமெங்கும் பரவி உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரானின் […]
ஐரோப்பிய பிராந்தியம் கொரோனா நோய் தொற்றிலிருந்து விரைவில் விடுதலை பெறும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஹான்ஸ் கிளக் கூறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஹான்ஸ் கிளக் கூறியதாவது, ஐரோப்பிய நாடுகள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த நாடுகள் இந்நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சூழலையும் பெற்றுள்ளன. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியை அதிக மக்கள் […]
பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாறைத்துகள்கள் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றது. இந்த நிலையில் டென்மார்க்கில் உள்ள கோபென்ஹேகன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதற்காக கிரீன்லாந்து தீவு பகுதியில் உள்ள நூக்கில் இருந்து பாறைத்துகள்களை எடுத்துள்ளனர். மேலும் அவற்றை உரம் போல் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். இதனால் 30%த்திற்கு மேலாக மகசூல் கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் விளைநிலத்தில் உள்ள மண்ணின் தரமும் அதிகரிக்கும் என்றும் பல்கலைக்கழக […]
டென்மார்க்கில் கனரக வாகனம் ஒன்று கப்பலில் இருந்து சரிந்து தண்ணீருக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் கனரக வாகனம் ஒன்று துறைமுகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த கனரக வாகனம் எதிர்பாராதவிதமாக உருண்டு தண்ணீருக்குள் பாய்ந்துள்ளது. அதற்கு காரணம் அந்த வாகனத்தை இயக்க ஓட்டுநர் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க சென்ற நிலையில் கை பிரேக்-ஐ தவற விட்டதால் எதிர்பாராதவிதமாக வாகனம் தண்ணீருக்குள் விழுந்து விட்டது என்று கூறப்படுகிறது.
டால்பின்களை கரைக்கு கொண்டு வந்து கொல்லும் பாரம்பரிய திருவிழாவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மக்கள் பல்வேறு பாரம்பரிய திருவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் டென்மார்க் நாட்டில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழாவானது கொண்டாடப் பட்டுள்ளது. அதாவது கடலில் உள்ள டால்பின்களை பிடித்து அதனை கரைக்கு கொண்டு வந்து கொல்வது இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் ஆகும். தற்பொழுது நடந்த திருவிழாவில் 1428 டால்பின்களை அத்தீவில் உள்ள மக்கள் கரைக்கு […]
டென்மார்க் நாட்டில் கட்டப்பட்ட மணல் கோட்டையானது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. டென்மார்க்கில் ப்ளொகஸ் கடல் நகரில் உலகிலேயே மிக உயரமான முக்கோண வடிவமைப்புக் கொண்ட மணல் கோட்டை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மணல் கோட்டையை உலகின் மிகச்சிறந்த மணல் சிற்பிகளில் ஒருவரான டச்சு படைப்பாளர் வில்பிரட் ஸ்டிஜர் வடிவமைத்துள்ளார். இந்த மணல் கோட்டையானது சுமார் 21.16 மீட்டர் உயரத்தையும் , 4,860 டன் மணலாலும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெர்மனியில் […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க், இத்தாலி அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற 2 வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் – வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் சக வீரர் டாம்ஸ் கார்டு 27 வது நிமிடத்தில் தட்டிக்கொடுத்த பந்தை டென்மார்க் அணி வீரர் கேஸ்பர் டோல்பெர்க் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஆட்டத்தின் பிற்பாதியில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் 48வது நிமிடத்தில் மீண்டும் […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அரசிடம் இழப்பீடு கோரியுள்ளனர். டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுமார் 37 நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் இழப்பீட்டு தொகை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதில் அதிகமான வழக்குகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியினால் ஏற்பட்ட விளைவுகள் தான். இது தொடர்பாக சுமார் 29 பேர் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர். மேலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 8 நபர்கள் இழப்பீடு கேட்டுள்ளனர். அதாவது டென்மார்க்கில் தடுப்பூசி செலுத்தி […]
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி இரத்த உறைவு பிரச்சினை ஏற்படுத்துவதால் டென்மார்க் அதனை தடைசெய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டென்மார்க்கிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்படுவதாக கூறி டென்மார்க் அதனை தடை செய்துள்ளது. இதனிடையே ஐரோப்பிய மருந்து […]
டென்மார்க் நாட்டில் அகதிகளாக இருக்கும் சிரியா மக்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப டென்மார்க் முடிவு செய்துள்ளது. சிரியா தலைநகரமான டமாஸ்கஸ் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கூறி டென்மார்க்கில் உள்ள 94 சிரிய அகதிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்ப முடிவு செய்துள்ளது. மேலும் டென்மார்க் அவர்களின் வாழிட உரிமத்தையும் ரத்து செய்துள்ளது .டென்மார்க் சிரிய அகதிகளை அவர்களின் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்க்கு அனுமதித்ததே தவிர கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பவில்லை. அவ்வாறு […]
வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மன் மற்றும் டென்மார்க் அதிகாரிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 14 பேரை கைது செய்துள்ளனர். அவர்களைக் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடாது இருந்த நிலையில் தற்போது மூன்று பேர் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள். 33,36 மற்றும் 40 வயதுடைய இந்த மூவரும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் […]
வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்காக புதிதாக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் போராடி வருகின்ற நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவர்களுக்கு பிரத்தியேகமாக பாஸ்போர்ட் ஒன்று தற்போது அறிமுகமாகியுள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டும், குறைந்து கொண்டும் இருப்பதால் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து இயக்கப்படுவதும், பின்னர் ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனை தொடர்ந்து டென்மார்க் நாட்டின் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு […]
ஒரு நாட்டில் வீட்டுக்கடனுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுகின்றதாம் அதை பற்றி இங்கே பார்க்கலாம். நாம் வீடு வாங்கவோ, கட்டவோ வீட்டுக்கடன் வாங்க இந்தியாவை பொறுத்தவரை, குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுவது என்பது புத்திசாலித்தனம். வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான சில சலுகைகளை வழங்குகின்றன. வட்டி தள்ளுபடி, பிராசஸிங் கட்டணம் சலுகை, பண்டிகைக் கால சலுகைகள் என வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சலுகைகளை வழங்கி வருகின்றது. ஆனால் நாம் கடன் வாங்கும் முன் குறைந்த வட்டிக்கு எங்கு […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதைக்கப்பட்ட உயிரினங்களை தோண்டி எடுப்பதற்கான பணி நடைபெறவுள்ளது. டென்மார்க் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. இதன் விளைவாக 15 மில்லியன் மிங்க் விலங்குகளைக் கொன்று மேற்கு டென்மார்க்கில் உள்ள Holesterbo மற்றும் karup என்ற பகுதிக்கு அருகில் இராணுவ வசதிகளுடன் பிரம்மாண்ட குழிகள் தோண்டி அதற்குரிய நிர்வாகம் புதைத்துள்ளது. தற்போது மீண்டும் புதிய கொரோனா வைரஸ் அபாயத்தால் புதைக்கப்பட்டுள்ள விலங்குகளை தோண்டி எடுத்து அடுத்த வருடம் எரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் […]
இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனோ வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் புதியதாக மற்றுமொறு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்று பிரிட்டனின் சுகாதார செயலர் போட் மண்ட் ஹான்காக் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமின்றி வேல்ஸ்,ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் பிரிட்டனுக்கு வெளியே உள்ள ஆஸ்திரேலியா டென்மார்க் பகுதிகளிலும் அதே வகையான புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]
மண்ணில் புதைக்கப்பட்ட மரநாய் விலங்குகள் மீண்டும் வெளியே தெரிய தொடங்கியதால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக பல மில்லியன் mink என்னும் மரநாய் வகைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனை கொல்லும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தொகையும், அவை 10 நாட்களுக்குள் புதைக்கப்பட்டால் போனஸ் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி சலுகையாக கொடுக்கப்பட்ட தொகையால் தான் இப்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விவசாயிகள் mink விலங்குகளை கொன்று லேசான மண்ணைத் […]
மண்ணில் புதைக்கப்பட்ட மரநாய் விலங்குகள் மீண்டும் வெளியே தெரிய தொடங்கியதால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக பல மில்லியன் mink என்னும் மரநாய் வகைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனை கொல்லும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தொகையும், அவை 10 நாட்களுக்குள் புதைக்கப்பட்டால் போனஸ் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி சலுகையாக கொடுக்கப்பட்ட தொகையால் தான் இப்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விவசாயிகள் mink விலங்குகளை கொன்று லேசான மண்ணைத் […]
மின்க் எனப்படும் ஒரு விலங்கினம் வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருக்கும் என்று அச்சம் ஆறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம். மின்க் என்ற விலங்கு நீர் நாயைப் போன்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஒரு உயிரி இயற்கையாக காடுகளில் நீர்நிலைகளின் அருகே கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய விலங்காக இது உள்ளது. மிக மெல்லிய ரோமங்களைக் கொண்ட இந்த விலங்கின் தோல் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுவதால் தோலுக்காவே இந்த விலங்கை […]
மனிதர்களுக்கு தொற்று பரவ காரணமாக இருந்த கீரிகளை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சீனாவில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளிவந்தது. தற்போது உலகம் முழுவதிலும் இந்த தொற்று பரவி ஏராளமான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் சிங்கம், புலி, பூனை, நாய் என விலங்குகளும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் மின்கு கீரிகளை வளர்க்கும் பண்ணையில் பணிபுரியும் 214 தொழிலாளர்களுக்கு […]
மிங்க் வகை கீரிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவதால் அவற்றை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று வவ்லால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியானது. தற்போது, இந்த கொரோனா தொற்று உலக நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மனிதர்களை போலவே ஏற்கனவே விலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் உணவுக்காக மிங்க் வகை கீரி பிள்ளைகள் […]