டெலிகிராம் நிறுவனர், தங்களின் தனி உரிமையை மதிக்கும் மக்கள் whatsapp-ஐ விட்டு விலகி விடுங்கள் என்று எச்சரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தேவை, கல்வி மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் உபயோகிக்கிறார்கள். இந்நிலையில் டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ், வாட்ஸ் அப் பயன்படுத்தும் மக்களின் தொலைபேசிகளில் இருக்கும் தகவல்களை முற்றிலுமாக ஹேக்கர்களால் அணுகிவிட முடியும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். […]
Tag: டெலிகிராம்
தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் அப் செயலியை போலவே டெலிகிராம் செயலியும் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது டெலிகிராம் அப்டேட் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். பிரீமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போது டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருபவர்களுக்கு […]
பெரிய அளவிலான கோப்புகளை அனுப்ப பயன்படுத்தப்படும் டெலிகிராம் ஆப் பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோட்டிபிகேஷன் டோன், கான்வர்சேஷன் ம்யூட் செய்ய கஷ்டம் டைமிங், ஆட்டோ டெலிட் மெசேஜ், சிறப்பான பார்வாடிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை வழங்கியுள்ளது. உங்களின் மியூசிக் கலெக்சனில் இருந்து அல்லது வேறு ஏதேனும் சவுண்ட்களை அலர்ட் டோன் ஆக செட் செய்து கொள்ள முடியும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நோட்டிபிகேஷன்களை வராமல் தடுக்க அவற்றை பாஸ் செய்ய முடியும். […]
பிரேசில் அரசு டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலி தடை செய்யப்படுவதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது, டெலிகிராம் நிறுவனமானது, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், தவறாக பரப்பப்படும் தகவல்களை கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலுக்கு அதிரடியாக தடை அறிவித்திருக்கிறது அதன்படி, பிரேசில் நாட்டில் மக்கள் இனிமேல் டெலிகிராம் செயலியை பயன்படுத்த முடியாது என்று […]
நாட்டில் கடந்த சில நாட்களாக அரசு பகிரும் முக்கியமான தகவல்களை திருடும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற வேலைகளில் ஹேக்கர்ஸ் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் ரகசியமான மற்றும் முக்கியமான ஆவணங்களை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என்று மத்திய அரசு அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. செயலிகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால் தவறாக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசின் முக்கிய தகவல்களை ஹேக்கர்ஸ் […]
ஃபேஸ்புக் நிறுவனம் திடீரென முடங்கிய காரணத்தால் டெலிகிராம் புதிதாக 7 கோடி பயனர்களை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக முடக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான பயனர்கள் உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதன் காரணமாக டெலிகிராம் செயலியை சுமார் 7 கோடி புதிய பயனர்கள் ஒரே நாளில் பதிவிறக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ […]
சுல்தான் திரைப்படம் என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது என்று நபர் ஒருவர் தயாரிப்பாளரை கோபப்படுத்தி உள்ளார். ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் சமூகவலைத்தள பக்கத்தில் நபர் ஒருவர் சுல்தான் படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் […]
வாட்ஸ் அப்பில் உள்ள உங்கள் உரையாடலை எப்படி டெலிகிராம்-க்கு மாற்றுவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி […]
டெலிகிராம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸ்அப்பின் புதிய அறிவிப்பை கேலி செய்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பயனாளிகள் அனுமதி மறுத்தால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வாட்ஸ்அப் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் […]
வாட்ஸ் அப்பின் புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் நிபந்தனைகள் அமைந்திருப்பதாக கூறப்படுவது பயனாளிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதையடுத்து, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் […]
வாட்ஸ் அப்பில் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பயனாளர்கள் அனைவரும் டெலிகிராம் ஆப்பிற்கு மாறி வருகிறார்கள். நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். […]