பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆர்டர் செய்த ஒரு நபருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த காலங்களில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆர்டர் செய்த சிலருக்கு அதற்கு பதிலாக சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் flipkart நிறுவனத்தில் ஐபோன் 13 போன் ஆர்டர் செய்த […]
Tag: டெலிவரி
உலகில் ஏற்பட்டிருக்கிற அசுர தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உணவு தேடி மக்கள் சென்ற காலம் போய் வீட்டில் இருந்து ஒரு ஆப்பில் ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கு வந்து பெல் அடித்து உணவை கொடுத்து செல்கின்றார்கள். இதற்காக பல்வேறு உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து இருக்கிறது இதனால் யார் முந்தி கொடுப்பது என்ற போட்டி எழுந்திருக்கிறது. இந்த சூழலில் சவுதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு ஆப்பில்ல் […]
தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பொது துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு 2.38 கோடி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வேண்டி பதிவு செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலிண்டர் டெலிவரி […]
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் இல்லாததற்கு முன்பாக தபால் துறை தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போதைய சூழலில் மக்கள் தங்களுடைய தகவல்களை மற்றவர்களுக்கு கடிதம் மூலமாக எழுதி அனுப்பி வந்தனர். இதில் தபால் துறை முக்கிய பங்காற்றியது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் அது எல்லாம் மாறிவிட்டது. இந்த மாற்றத்தினை ஈடு கட்டுவதற்காக தபால் துறையும் தற்போது நவீன உலகத்திற்கு ஏற்றார் போல தன்னுடைய சேவைகளை பல்வேறு தளங்களில் […]
டிரோன்கள் மூலம் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் திட்டத்தை அமேசான் நிறுவனம் தொடங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் உலக அளவில் 31 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். செல்போன் செயலின் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொடுக்க பல்வேறு புதுமைகளை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிரோன்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை அனுப்பும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் […]
ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பத்து நிமிடத்தில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளதால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர். வெறும் பத்து நிமிடங்களில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று ஸ்டார்ட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிமகன்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சாதாரணமாக உணவு டெலிவரி செய்வதற்கே 30 நிமிடத்திற்கு மேல் ஆகும் நிலையில் வெறும் பத்து நிமிடத்தில் டெலிவரி என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொல்கத்தாவில் இன்னோவெண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் பூஸி (Boozie) பிராண்டு […]
சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் உங்களிடம் அதிக பணம் கேட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் வீட்டில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் பதிவு செய்து வாங்கி வருகிறோம். சிலிண்டர் புக்கிங் ஆன பிறகு அடுத்த நாளே சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த சமையல் சிலிண்டர் தொடர்பான விதிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை .அது தெரியாமல் பலரும் […]
அமேசான் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் மற்றும் டெலிவரி போன்ற பயன்பாட்டிற்கு எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. உலகில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த பேட்டரி ஸ்வாப் டெக்னாலஜி நிறுவனமான சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து வசதிக்காக வாகனங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் மற்றும் வாகனங்களுக்கு பேட்டரி ஸ்வாப் செய்யும் டெக்னாலஜியை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் வழங்குகின்றது. […]
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களோ அல்லது உணவுகளையோ பல்வேறு ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்து வருகின்றனர். இவ்வாறு ஆர்டர் செய்த பொருள்கள் இரண்டு நாட்களிலேயோ அல்லது ஒரு சில மணி நேரங்களிலேயே வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக அதிவேகமான டெலிவரியை ஜோமட்டோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி இனி 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும். […]
இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் டாபர் நிறுவனம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு எளிதாக வீட்டிலிருந்து புக்கிங் செய்தாலே சிலிண்டர் டெலிவரி செய்யப்படுகிறது. அதுபோன்று தற்போது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சிலிண்டர் மட்டுமல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள் சிலிண்டர் உடன் சேர்த்து டெலிவரி செய்யப்படும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் டாபர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி டாபர் நிறுவனத்தின் வேகமான விற்பனையாகும் நுகர்பொருட்கள் இன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் டெலிவரி செய்யப்படும். மேலும் […]
இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் வைத்திருப்பவர்கள் இனி சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக, 2.5 லட்சம் காஸ் சிலிண்டர்களை, டெலிவரி செய்கிறது. ஒரு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், திடீரென சிலிண்டர் தீர்ந்து விட்டால், அவர்கள் பதிவு செய்தாலும், மறுநாள் தான் […]
டெல்லியில் மொபைல் பயன்பாடு மற்றும் ஆன்லைன் வெப் போர்டல் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருவதால் ஊரடங்கை அந்தந்த மாநிலத்தின் முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். சில மாநிலங்களில் தளர்வுகள் சிலவற்றை அறிவித்து வருகின்றன. அதன்படி டெல்லியில் மொபைல் […]
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேஸ் ஏஜென்சிகள் வசூலிப்பதாக சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றது. இந்த தொகையை சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல் […]
இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் வைத்திருப்பவர்கள் இனி சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவெரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக, 2.5 லட்சம் காஸ் சிலிண்டர்களை, […]
சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி […]