டெல்லி அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் உள்ள எஸ்சி, எஸ்டி,ஓபிசி மாணவர்களுக்கு ஆறு உதவித்தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் அவர்களின் கல்வி கற்ற ஆகும் செலவை அரசு செலுத்தும். மேலும் இந்த திட்டங்களுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பணிகளையும் தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாணவர்களை ஊக்குவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி […]
Tag: டெல்லி அரசு
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு வாகனங்களில் இருந்து அதிகமாக வெளியேறும் புகையே முக்கிய காரணம். இதனை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மாநில அரசு உள்ளது. எனவே சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்த படியாக வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளது. இது தொடர்பாக பேசிய அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், ஆக.25க்கு பிறகு வாகனங்களுக்கு மாசு சான்றிதழ் இல்லையென்றால் […]
டெல்லி அரசால் டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்பட்ட 1000 தாழ்ந்த தரைதள பேருந்துகள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணையை துவங்கியுள்ளது. புது பேருந்துகள் வாங்குவதற்காக ஜூலை 2019 கொள்முதல் ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும், தொடர்ந்து மார்ச் 2020ல் நடந்த ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார் பெறப்பட்டது. பேருந்துகள் வாங்கிய இக்குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்துதுறை மந்திரியை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாக இந்த வருடம் ஜூன் மாதம் டெல்லி துணைநிலை கவர்னருக்கு […]
தலைநகர் டெல்லியில் இருப்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற இனி புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலை நேரம் முடிந்த பிறகு இரவு நேரங்களில் ஓட்டுநர் தேர்வை டெல்லி அரசு நடத்த முடிவு செய்துள்ளது. மயூர் விஹார், ஷகுர்பஸ்தி மற்றும் விஸ்வாஸ் நகர் ஆகிய இடங்களில் மூன்று சோதனை தயார் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தானியங்கி பாதையில் சோதனை நடைபெறும். ஒவ்வொரு பாதையிலும் ஒரு நாளைக்கு 45 பேர் வரை […]
டெல்லியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசுமொஹலா கிளினிக் என்ற சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “டெல்லி அரசு பள்ளிகளை ஒரு முன்மாதிரியாக கொண்டு தமிழகத்திலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தும் வகையில் தமிழ்நாட்டிலும் டெல்லியை போன்று விரைவில் மாதிரி பள்ளிகளை உருவாக்க போகிறோம். அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் தில்லியில் அமைந்துள்ள அரசு மொஹலா கிளினிக்களை பார்வையிட்டு அதன் […]
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]
டெல்லி அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இலவச ஆன்மீக சுற்றுலாவில் தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச ஆன்மீக சுற்றுலா என்னும் திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா செல்ல டெல்லி அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கும். இதன்படி பயனாளிகள் பூரி, ராமேஸ்வரம், ஹரித்வார், சீரடி,திருப்பதி உள்ளிட்ட 13 ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக சென்று வரலாம். கடந்த […]
முக்கிய விழாக்களை கொண்டாடுவதற்கு டெல்லி காவல் துறையினருக்கு விடுமுறை வழங்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். டெல்லி காவல் துறை பணியாளர்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் முக்கியமான விழாக்களை கொண்டாட விடுமுறை வழங்கப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் தானாவின் ஒப்புதலுடன் கூடிய அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கியமான நிகழ்வுகளில் காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இயலாமல் பணி செய்து வருவது இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ஒரு எதார்த்தமான நிகழ்வாக உள்ளது. ஆனால் […]
மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுத்து முடக்க போவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலம் மலிவு விலையில் மளிகை பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் சிறப்பு மளிகை தொகுப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகையும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. டெல்லியில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 15 லட்சம் ரேஷன் கார்டுகள் உபயோகத்தில் உள்ளன. […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பமேளா சென்று […]
டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அதிகமான கட்டணம் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா நீடித்து வரும் நிலையிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி அரசு ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக தொகை வசூலிக்காமல் சிறப்பான பாடங்களை வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதாவது, டெல்லியில் உள்ள சில […]
கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு அம்மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு அம்மாநில […]
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை பிறப்பித்தது. ஆனால் இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை […]