டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் டெல்லிக்கு சென்றுள்ளனர். மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டதின் போது 300 விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். ஆனாலும் மத்திய அரசு அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு சென்று […]
Tag: டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம் தொடர்பாக டூல்கிட்டை பகிர்ந்த வழக்கில் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமூக செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் . பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் கிரேட்டா தன்பெர்க் திரிஷா ரவிக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை அடிப்படையான மனித உரிமைகள் எனவும் இவை ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே […]
புதுச்சேரியின் அமைச்சர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவரைப் பற்றி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்ல இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மக்களவை உறுப்பினரான வைத்தியலிங்கம் போன்றோர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். விவசாயிகளுக்கான […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் 14-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஹரியானா-ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூர் பகுதியில், கடந்த 14-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் 14-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Jaipur-Delhi தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டங்களை […]
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் விவசாயிகளால் நடத்தப்படும் இந்த போராட்டம், அரசியல் சார்பற்றது என்றும் விவசாய சங்கங்களின் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 31 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் […]
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதையடுத்து புதிய வேளாண் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் நலனைக் காப்பதற்காக மூன்று மசோதாக்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தும் மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென […]
விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தலைநகரின் எல்லை பகுதியான சிங்குவில் சீக்கிய துறவி ஒருவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேசிய தலைநகரின் எல்லை பகுதியான சிங்குவில் சீக்கிய துறவி ஒருவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலையால் உயிரிழந்தார். ஹரியானா […]
விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு த்திய வேளாண் துறை அமைச்சகமானது கடிதம் எழுதி இருந்தது. அதில், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதே போல திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். மேலும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டு தருவதற்கும் தயாராக இருக்கிறோம். எனவே பேச்சுவார்த்தைக்கு […]
டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்திய விவசாயிகள் நாளை பல இடத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க பல விவசாயிகள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் ராஜஸ்தானை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையை மறியல் செய்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அவ்வகையில் நாளை நாடு முழுவதிலும் உள்ள பாஜக […]
கடந்த பிப்., 23ம் தேதி டெல்லி போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது குறித்த சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில், இந்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை […]
டெல்லியில் காவலரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாருக் வாக்குமூலம் அளித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வேறு யாரையும் தாக்கினாரா ? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன நிலையில் அவர் […]
டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும், மக்களவை மதியம் வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் நேற்று அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
டெல்லி வன்முறையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஷாருக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரையே துப்பாக்கியை காட்டி மிரட்டும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை […]
டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வரும் ஷாஷீன் பாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஷாஷீன் பாக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஷாஷீன் பாக்கில் போராடும் பெண்களை விரட்டி அடிக்க இந்து சேனா அழைப்பு விடுத்திருந்தது கலவரத்தை தூண்டும் வகையில் இந்து சேனா அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து ஷாஷீன் பாக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Delhi: Heavy police deployment in Shaheen Bagh as […]
டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தத்த்து. இதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவினரின் பேச்சே கரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடியரசுத்தலைவரை சந்தித்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா , பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது , தற்போதைய சூழலில் FIR பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப […]
டெல்லி வன்முறை தொடர்பாக செய்தி வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகளை வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்த நிலையில் […]
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிந்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது […]
வடகிழக்கு டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சமாதானமும், மத நல்லிணக்கமும் நமது பண்பாட்டின் மையக் கருவாக இருப்பதால் டெல்லி சகோதரிகளும், சகோதரர்களும், எல்லா நேரத்திலும் அமைதி, சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். Peace and harmony are central to our ethos. I appeal to my sisters and brothers of Delhi […]
டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். மேலும் வன்முறையில் தலைமை காவலர் பலி, உயர் அதிகாரி […]
டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். இதையடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரித்தால் அது தொடரட்டும் என […]
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் […]
டெல்லி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் உயிரிழந்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லி […]