Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 2-வது அலை… ஒரே நாளில் 6,715 பேர் பாதிப்பு..!!!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 6,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,16,653 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,769 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மோசமடையும் காற்று மாசு… சுவாசப் பிரச்சனையால் மக்கள் அவதி…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக கவர்னர்… தமிழக அரசியல் பற்றி விளக்கம்…!!!

டெல்லி புறப்பட்டுச் சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் சென்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் புறப்பட்டு சென்றார். அவர் அங்கு வெள்ளிக்கிழமை வரையில் தங்கியிருந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல்… தொலைபேசியில் பேசிய மர்ம நபர்… விமான நிலையத்தில் பரபரப்பு…!!!

டெல்லியிலிருந்து நாளை லண்டன் செல்ல உள்ள 2 ஏர் இந்தியா விமானங்களுக்கு மர்ம நபர் அலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து நாளை லண்டனுக்கு செல்ல தயாராக உள்ள 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலமாக அந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அப்போது தொலைபேசியில் பேசிய அந்த மர்ம நபர், டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3- வது அலை… மக்கள் பயப்பட வேண்டாம்… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி…!!!

டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் டெல்லியில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது கொரோனா பாதிப்பு. அதிலும் குறிப்பாக நேற்று மட்டும் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,700 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ” […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளியை பார்க்க சென்ற பெண்…. மருத்துவமனை வளாகத்தில்… செக்யூரிட்டிகளின் கொடூர செயல்…!!

மருத்துவமனை வளாகத்தில் வைத்து இளம்பெண்ணை மூன்று நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் ரோஹினி பகுதியில் உள்ள பாபா சாஹிப் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனை உள்ளது. சம்பவத்தன்று இரவு அங்கு சிகிச்சை பெற்று வருபவரை பார்த்துக்  கொள்ளவதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவரை விசாரித்த மருத்துவமனை ஊழியர்களிடம் , தான் நோயாளியை கவனித்து கொள்வதற்காக வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து அப்பெண்ணை விசிட்டர்கள் தங்குமிடத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தங்க வைத்துள்ளனர். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

வறுமையில் வாடிய உணவக உரிமையாளர்… இணையத்தில் திரண்ட பணம்… மோசடி செய்த யூடியூப் உரிமையாளர்…!!!

டெல்லியில் உணவக உரிமையாளர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி யூடியூப் உரிமையாளர் சமூக வலைத்தளம் மூலமாக பணம் திரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மால்வியா நகரில் காந்தா பிரசாந்த் என்பவர் பாபா கா தாபா என்ற பெயரில் உணவகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். ஆனால் கொரோனா பொது முடக்கத்தால், தனது தொழில் முடங்கியதாகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் உணவகத்தை நடத்துவதற்கு மிகவும் அவதிப்படுவதாகவும் கூறி வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய போட்டியில் டெல்லி, மும்பை அணிகள் மோதல்…!!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மும்பை அணியை எதிர்கொள்ளும் டெல்லி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை இறுதி செய்யுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துபாயில் மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ள இந்தப் போட்டியில் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்ய களமிறங்குகிறது மும்பை அணி. ஆனால் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமென்று நெருக்கடியுடன் வலுவான மும்பை அணியை எதிர் கொள்வதால் டெல்லி அணிக்கு […]

Categories
உலக செய்திகள்

உகான் நகருக்கு இன்று முதல் வந்தே பாரத் விமானம் இயக்கம்…!!

கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட தடைகள் சீனாவின் ஊகான் நகரில் நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்நகருக்கு இந்தியா இன்று முதல் வந்தே பாரத் விமானத்தை இயக்குகிறது. சீனாவின் ஊகான் நகரில் கடந்த டிசம்பர் முதல் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது. தற்போது அங்கு தொற்று முழுவதுமாக அகற்றப்பட்டு தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து உகான் நகருக்கு இந்தியா வந்தே பாரத் விமானத்தை இன்று முதல் இயக்குகிறது. டெல்லி உகான் விமான பாதையில் வந்தே பாரத் விமானம் இயக்கப்படும் என்றும்  சீனாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு…!!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருகி வரும் வாகனங்கள் வெளியிடுகிற புகை மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கும்போது  வெளியாகும் புகை டெல்லிக்கு காற்றில் மாசு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. காற்றில் மாசு அதிகரிப்பதால் அதன் தரம் குறைந்துகொண்டே போகிறது. டெல்லியின்  காற்றின் தரம் மோசமாகி வருவது […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஆபத்து – மக்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி

டெல்லியில் மீண்டும் உயர்ந்து வரும் காற்று மாசின் காரணத்தினால் உயிர்வாழ தகுதியே இல்லாத தரமற்ற காற்றின் சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னையிலும் காற்று மாசு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் நாட்டு மக்களை பீதி அடைய வைத்திருந்த நிலையில் தற்போது அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு குறைந்து வருகிறது. […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து மருத்துவர்கள் போராட்டம்…!!

டெல்லியில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணன்  உருவபொம்மையை  தீ வைத்து எரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்துரா மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கடந்த நான்கு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தசரா பண்டிகை வெகு […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளம் வேண்டும்” ராவணன் பொம்மை எரித்து… மருத்துவர்கள் போராட்டம்…!!!

கொரோனா  களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் சம்பளம் வழங்காததற்கு தங்களது எதிர்ப்பு  தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகின்றது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் முன் களப்பணியாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு  அரசு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதால், போராட்டம் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

2 ஆண்டுகளுக்குள் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும் …!!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பழமை வாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதைய கட்டடத்தின் அருகில் மத்திய விஸ்டா மறு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணிக்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது அடுத்து சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… கொரோனாவால் பார்வை போன சிறுமி…. உறுதி செய்த மருத்துவமனை …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுடனும் அதன்பிறகு அறிகுறி இல்லாமலும் தொற்று பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாசனை தெரியாமல் தொற்று பரவ தொடங்கியது. அதோடு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் டெல்லியில் இந்நிலையில் கொரோனா தொற்றினால் சிறுமி ஒருவரின் நரம்பு பாதிக்கப்பட்டு கண்பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய – அமெரிக்க வெளியுறவு, ராணுவ அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை…!!

இந்தியா அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே கடந்த  2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாப்ரியோ, ராணுவ அமைச்சர் மார்க்ஏஸ்பர் ஆகியோர் 26 ஆம் தேதி இந்தியா வருகின்றனர். அவர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆர்டர் கேன்சல் ஆகிட்டு” போனை விற்ற டெலிவரி பாய்…. உண்மையை உடைத்த அமேசான்…!!

டெலிவரி செய்ய வேண்டிய போனை விற்ற டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளார் டெல்லியில் அமேசான் நிறுவனத்தின் டெலிவரி பாயாக 22 வயது இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவர் கஸ்டமர் ஆர்டர் செய்து அமேசானில் இருந்து அனுப்பப்பட்ட செல்போனை வேறு ஒருவரிடம் விற்று காசை பெற்றுக் கொண்டார். அதன் பின் போனுக்காக காத்து இருந்த கஸ்டமரிடம் உங்கள் ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது என கூறியுள்ளார். அதோடு நீங்கள் செலுத்திய பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு விரைவில் வந்துவிடும் […]

Categories
தேசிய செய்திகள்

91 வயதிலும் முதியவரின் நல்லுள்ளம்…. வெளியான காணொளி… குவியும் பாராட்டு…!!

91 வயதிலும் முதுகு வலியைப் பொருட்படுத்தாமல் சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முதியவரின் செயல் பாராட்டுதலைப் பெற்று வருகிறது சமூக வலைத்தளத்தில் ஏராளமான பாராட்டத்தக்க சம்பவங்கள் பகிர படுவதுண்டு. அது சில நேரம் நெகிழ்ச்சியூட்டும் விதமாகவும் அமையும். அவ்வகையில் டெல்லியில் உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நித்தின் சங்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு உங்களுக்கு 91 வயது, முதுகுவலியும் உங்களுக்கு இருக்கிறது, ஆனாலும் ஒவ்வொரு நாளும் குர்கானில் செடிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி… ஏற்பட்ட பக்கவிளைவு… இனி எல்லாரும் உஷாரா இருக்கனும்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்திருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது. டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் தங்களின் கொரோனா பாதிப்பு நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் பார்வை மங்கலாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. சிறுமியின் உடல்நிலை பற்றி குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் தயாரித்து வரும் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு…!!

டெல்லியில் இன்றும்  காற்றின் மாசு அதிகரித்து காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா  ஊரடங்கு அமல் ஆனதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், வாகனங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்ததால் காற்று மாசு வெகுவாக குறைந்தது. டெல்லியில் இருந்து பார்த்தால் இமயமலை தெரியும் அளவிற்கு வானம் தெளிவாக இருந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சகஜ நிலைக்கு திரும்பியதால் டெல்லி மீண்டும் மிகக்கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியுள்ளது. எங்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜமியா பல்கலைக்கழகம்… இன்று நடந்த நுழைவுத்தேர்வு… ஆள்மாறாட்டம் செய்த மாணவர்…!!!

டெல்லியில் இன்று நடந்த தேர்வு ஒன்றில் தேர்வு எழுத வேண்டிய மாணவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்த மாணவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். டெல்லியில் மிகவும் புகழ்பெற்ற ஜாமியா பல்கலைகழகத்தில் நுழைவுத்தேர்வு ஒன்று இன்று நடந்துள்ளது. அதில் இளைஞர் ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த அவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த மாணவர் ஆள் மாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மாணவரும், தேர்வு எழுத வேண்டிய மாணவரும் ஒரு பயிற்சி மையத்தில் ஒன்றாக சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

அத்துமீறிய கார் டிரைவர்… தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்… டிரைவர் செய்த கொடூர செயல்…!!!

டெல்லியில் விதி மீறலில் ஈடுபட்ட காரின் டிரைவரை, தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை காரின் டிரைவர் காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளியுள்ளார். டெல்லியில் தில்லா குவாணி பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த காவலர், விதி மீறலில் ஈடுபட்ட ஒரு காரின் டிரைவரை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது காரின் டிரைவர் காரை எடுத்துள்ளார்,வாகனத்தை தடுத்து நிறுத்த காரின் முன்பகுதியில் காவலர் சென்றுள்ளார். இருந்தாலும் அந்த வாகனத்தை டிரைவர் தொடர்ந்து இயக்கியதால், காவலர் பேனட்டில் பிடித்துக் கொண்டுள்ளார். அவரே […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பங்கேற்காததால் பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு…!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினர். டெல்லியில் கிருஷிபவன் இல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 29 விவசாய சங்கம் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் துறை செயலாளர் பங்கேற்றார். ஆனால் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்காததால் விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சருக்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை – விவசாயிகள் எதிர்ப்பு…!!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் மத்திய வேளாண் துறை செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை  கண்டித்து கடந்த 20 நாட்களாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 29 விவசாய சங்கங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

அறுவடையில் எஞ்சிய தாள்களை எரிப்பதால் காற்று மாசு உயர்வு…!!

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடையில் எஞ்சிய தாள்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. வாகன நெரிசல் காரணமாக டெல்லியில்  வழக்கமாக காற்று மாசு அதிகமாகவே காணப்படும். குளிர் காலங்களில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக காற்று மாசு வெகுவாக குறைந்தது. பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டு வாகனங்கள் இயக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக காற்று மாசு உயரத் தொடங்கியது. பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட டெல்லியைை சுற்றியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு…!!

டெல்லியில் கொரோனா ஊரடங்கின் போது சீரடைந்து மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இன்றும் அதிகாலை முதல் பல இடங்களில் மாசு அடர்ந்து  காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் வாகனப் பெருக்கம் மற்றும் அதிக அளவிலான சிறு  தொழிற்சாலைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக  காற்றில் மாசு அளவு அதிகமாகி இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. கடந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சந்திக்க மறுத்த காங்கிரஸ்…. ஸ்கெட்ச் போட்ட பாஜக…. சாதித்து காட்டிய எல்.முருகன் …!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தன்னைப் புறக்கணித்து வந்ததாக வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். உத்தரபிரதேசம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் கொலை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ்  சார்பாக கலந்து கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

“தங்கையுடன் சுற்றாதே” நாங்க நட்புடன் தான் பழகுறோம்…. கொன்று வீசிய அண்ணன்கள்…!!

தங்கையுடன் நட்பாக பழகி வந்த இளைஞரை சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் இருக்கும் பல்கலைகழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ராகுல். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்தார். ஆனால் பெண்ணின் சகோதரர்கள் ராகுலும் அவர்கள் தங்கையும் காதலிப்பதாக நினைத்தனர். இதனால் பலமுறை ராகுலிடம் தனது தங்கையுடன் சுற்ற வேண்டாம், அவளை மறந்து விடு, இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 3 லட்சத்தை எட்டிய… கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?…!!!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்த தகவலை டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,866 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,06,559 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கொரோனாவால் தற்போது வரை மொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்-பெண் இடையே நட்பு… கண்டித்த குடும்பத்தினர்… மறுப்பு கூறிய 18 வயது ஆண்… குடும்பத்தினர் செய்த கொடூரம்…!!!

டெல்லியில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்த 18 வயது ஆண் நண்பரை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அதர்ஷ் என்ற நகரில் வசித்துவரும் 18 வயதுடைய ராகுல் ராஜ்புத் என்பவர், அப்பகுதியில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் தனது வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியில் வசித்து கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் நட்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா நோயாளிகளின் வீடுகளில் போஸ்டர் ஒட்டப்படாது …!!

டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகள் இருக்கும் வீடுகளில் இனி சுவரொட்டி ஓட்டபடாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் தற்போது வரை 12,290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். லேசான அறிகுறி உடைய அறிகுறியே இல்லாத அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவுறித்திருத்தது. அதன்பேரில் பாதித்தவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மாசு தடுப்பு: டெல்லி என்சிஆரில் அக்.15 முதல் அமல்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ள காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் புரேலாதில்லி  பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருரம்போட் போன்ற பகுதிகளில் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை தவிர டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை – டெல்லி எய்ம்ஸ் தகவல்…!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தடயவியல் ஆய்வு நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 3 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு…. நடுநடுங்கும் மக்கள்…!!!

டெல்லியில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடக்கும் நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த ஒரு மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,037 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லி துணை முதல் மந்திரி…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி துணை முதல்-மந்திரி இன்று குணமடைந்து வீடு திரும்பினார். டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி முதல் தன்னை தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால் கடந்த 25ஆம் தேதி அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச சிரமம் ஏற்பட்டதால் லோக் நாயக் ஜெயபிரகாஷ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் டிராக்டர் எரிப்பு… கொடூர போராட்டத்தில் இறங்கிய பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ்…!!!

டெல்லியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது டிராக்டர் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மத்திய அரசு நிறைவேற்றி இருக்கின்ற வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் மற்றும் எதிர் கட்சியினர் அனைவரும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் விவசாய அமைப்புகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்..!!

உச்சநீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து விசாரிக்க மூத்த வழக்கறிஞர் திரு பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டதாக மூத்த வழக்கறிஞர் திரு  பிரசாந்த்பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தவறுக்கு மன்னிப்புக் கூறும் படி பலமுறை அறிவுறுத்தியும் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது – எதிர்க்கட்சிகள்..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே புதிய வேளான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன […]

Categories
தேசிய செய்திகள்

சட்டமன்ற குழுவின் விசாரணைக்கு வரவில்லை என்றால்… வலுக்கட்டாயமாக இழுத்து வரப்படுவார்கள்… பேஸ்புக்கிற்கு அரசு எச்சரிக்கை…!!

டெல்லி சட்டமன்ற குழுவிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் வரவில்லை என்றால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவார்கள் என அரசு எச்சரித்துள்ளது. பாஜக மற்றும் பல தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இருந்த பேச்சுக்களை அனுமதித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில், டெல்லி சட்டமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்து விட்டது. அதாவது, டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் சமாதான குழுவினர் இது இதுகுறித்து பேஸ்புக்கிற்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகம், […]

Categories
தேசிய செய்திகள்

துணை முதல்வருக்கு கொரோனா… சீக்கிரம் குணமடைவேன் என நம்பிக்கை…!!

டெல்லியின் துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண மக்களை மட்டுமல்லாமல் பெரிய தலைவர்கள், நடிகர்கள் என பாகுபாடு பாராமல் அனைவரையும் தாக்கி வரும் இந்த கொரோனாவால் சில கட்சியின் எம்எல்ஏக்கள் உயிரிழந்துமுள்ளனர். அந்த வகையில் தற்போது, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்திக் குறிப்பில், […]

Categories
தேசிய செய்திகள்

ஐசியூ படுக்கைகள் 80 சதவிகிதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்… அரசு உத்தரவு…!!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 80 சதவீத ஐசியு படுக்கைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இட வசதிகள் பற்றாத காரணத்தால் தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா நோயாளிகளுக்காக தயார்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களை அனுமதிக்க தேவையான ஐசியூ படுக்கை வசதிகள் போதிய எண்ணிக்கையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2020 ஐபிஎல் தொடர் : பந்துவீச்சில் அசுர பலத்துடன் காணப்படும் 3 அணிகள் இவைதான்..!!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில்  பவுலிங்கில் பலம் வாய்ந்த 3 அணிகளை பற்றி பார்ப்போம்.. ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.. இந்த முறை ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பதால் பந்துவீச்சில் எந்த அணி பலமாக இருக்கிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. ஆகவே பந்துவீச்சில் பலமாக உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் முடங்கிக்கிடந்த மெட்ரோ ரயில்கள்… மீண்டும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கம்…!!

டெல்லியில் மெட்ரோ ரயில்கள் தற்போது அனைத்து இடங்களிலும் இயங்க ஆரம்பித்துவிட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்பொழுது வரை பொது முடக்கம் என்பது அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நான்காம் கட்ட  ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப் போக்குவரத்து, மற்றும் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பரவலால் மார்ச் 22 முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை…!!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது. இதில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சரான திமுகவை சேர்ந்த திரு ஆ. ராசா, திருமதி கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

 டெல்லியில் புதிதாக 2,007 பேருக்கு கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

டெல்லியில் இன்று மட்டும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் டெல்லியில் முதலில் அதிகரித்துக் கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” டெல்லியில் இன்று மட்டும் 2077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,93,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 32 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர இரு நாடுகளும் முயற்சி…!!

இலங்கை அருகே தீ விபத்தில் சிக்கிய கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கடலோர பாதுகாப்பு படை இயக்குனர், குவைத்திலிருந்து இந்தியா வந்துக்கொண்டிருந்த சரக்கு கப்பல் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது குறித்து விளக்கமளித்தார். மூன்று நாட்களாக இரு நாட்டு கப்பல் மற்றும் விமானம் மூலம் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இலங்கையிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை… உச்சம் தொட்ட பாதிப்பு…!!!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,973 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,88,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,538 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் இன்று ஒரே நாளில் 1,920 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

அபாயத்தில் “யமுனை” ஆறு… நீர்மட்டம் எவ்வளவு தெரியுமா?…!!

டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விட வாய்ப்புள்ளது. டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. அதாவது அரியானாவின் ஹதினிகுண்ட் அணையில் இருந்து நொடிக்கு நாலாயிரத்து 353 கன அடி நீர் யமுனையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 204 மீட்டராக உயர்ந்துள்ளது. இந்த நீர் மட்ட அளவு இன்னும் அரைமீட்டர் உயரத்துக்கு உயர்ந்தால் கூட வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்படும். சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை… இந்திய வானிலை ஆய்வு மையம்..!!!

டெல்லியில் அடுத்து வருகின்ற மூன்று நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை சில நாட்களாக தீவிரமடைந்துள்ளதால், குஜராத், அசாம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் அடுத்த மூன்று நாட்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தலைநகர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் குணமடைந்தோர் விகிதம் எவ்வளவு தெரியுமா?… முதல்-மந்திரி மகிழ்ச்சி தகவல்…!!!

டெல்லியில் கொரோனா பாதிப்பிலிருந்து 90% பேர் குணமடைந்துள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். டெல்லியில் சில நாட்களாக அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14,07,743 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு 11,998 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் தற்போதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,330 ஆக இருக்கின்றது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா […]

Categories

Tech |