Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்…கூடுதல் ஊழியர் கேட்கும் மருத்துவமனை….!!

கொரோனா வார்டுகளில் பணியாற்ற கூடுதல் மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை வழங்குமாறு டெல்லி அரசிடம் தனியார் மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 47,102 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 837 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப் பட்டதால் தொற்றின் பரவல் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் மதிப்பீடு படி […]

Categories
தேசிய செய்திகள்

கடும் காய்ச்சல், மூச்சு திணறல்…. மருத்துவமனையில் அனுமதி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா?

டெல்லி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தடுப்பதற்காக மத்திய அரசு சார்பிலும், சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு எப்படி அதிகரித்து வருகிறதோ? அதே போல் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் இல்லை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. இதனால் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் முழு ஊரடங்கு என்ற செய்தி தவறானது… டெல்லி அரசு விளக்கம்..!!

டெல்லியில் வரும் 18ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவலுக்கு அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலுக்கு டெல்லி அரசு தற்போது மறுத்து தெரிவித்து உள்ளது. கடும் ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பல […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு… அனைத்து கட்சி கூட்டத்திற்கு அமித்ஷா அழைப்பு…!!

டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்பு டெல்லியில் தான் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1200 பேர் இறந்துள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், அதை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3 லட்சம்….. மகாராஷ்டிராவில் 1 லட்சம்…… நெருங்கும் கொரோனா பாதிப்பு…..!!

இந்தியாவில் குறைவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகின்றது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000 என்ற அளவில் இருந்து வருகிறது. இன்றும் 10,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,202 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் 5,259 குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 1,46,238ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனையில் 1,42,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று […]

Categories
தேசிய செய்திகள்

‘ஆம்’ என்ற டெல்லி… ‘இல்லை’ என்ற மத்திய அரசு… சமூகப் பரவல் குறித்து குழப்பம் …!!

மாநில அரசு டெல்லியில் சமூக பரவல் இருப்பதாக கூறியதை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது இந்தியாவில் கொரோனா  தொற்றின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. புதிதாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. அதிலும் டெல்லியில் 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  இனி வரும் 10 நாட்களில் கொரோனா  தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்றும் இந்த மாதத்தின் இறுதிக்குள் ஐந்தரை லட்சத்தை தாண்டும் என்றும் டெல்லி அரசு கணித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
சற்றுமுன்

984னு அரசு சொல்லுது… 2098னு மாநகராட்சி சொல்லுது…. டெல்லியில் கொரோனா இறப்பு எவ்வளவு ?

டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எணிக்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 984 என்று டெல்லி மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில், டெல்லி மாநகராட்சி கொடுத்த தகவலால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கின்றார்கள். டெல்லி மாநகராட்சியின் அதிகாரம் என்பது துணை நிலை ஆளுநருக்கு கீழ் வரக்கூடியது. மாநகராட்சி சார்பில் தனியாகவும், அரசு சார்பில் தனியாகவும் வேலை செய்வார்கள். எனவே இந்த இரண்டு தரப்பினரும் கொரோனா இறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு சொல்லிடுச்சு…. அதையே செஞ்சுடுங்க… U டர்ன் எடுத்த கெஜ்ரிவால் …!!

ஆளுநரின் உத்தரவே பின்பற்றப்படும் என மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் டெல்லி அரசுக்கு கீழ் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, நர்சிங் ஹோம்களின் உரிய ஆவணங்களை கொண்ட டெல்லி வாழ் மக்களுக்கு மட்டும்தான் சிகிச்சை கொடுக்கவேண்டும் என அதிரடியாக டெல்லி அரசு உத்தரவை பிறப்பித்தது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த உத்தரவை ரத்து செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். இதனால் வெவ்வேறு உத்தரவுகளில் எதனை பின்பற்றுவது என்பதில் குழப்பம் உருவானது. இந்நிலையில் ஆளுநரின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமலாக்கத்துறை பிரிவில் அதிகாரி உட்பட 5 பேருக்கு கொரோனா – அலுவலகம் மூடல்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரி உட்பட 5 பேருக்கு இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல குஜராத்தில் உள்ள போர்பந்தரில் கடற்படையில் பயிற்சி பெறும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. போர்பந்தரில் ராணுவ மருத்துவமனை இல்லாததால் ஜாம்நகர் மருத்துவமனையில் 16 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 6,642 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியின் புறநகர் பகுதிகளில் 2 மாதங்களில் 14 நில அதிர்வுகள் – நடுங்கும் தலைநகர்!

டெல்லியின் புறநகர் பகுதிகளில் 2 மாதங்களில் 14 நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த 14 அதிர்வுகளில் 2 மட்டும் தான் ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளுக்கும் மேல் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பள்ளத்தாக்கு மற்றும் பிளவுகளில் ஏற்படுகின்றன என நில அதிர்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு டெல்லி இமயமலை தொடரில் வரும் நிலையில் இந்திய தட்டு, யுரேஷிய தட்டுகளுக்கு கீழ் வருவதால் நில அதிர்வு இந்த பகுதியில் அதிகம் என புவியியல் வல்லுநர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த சிறு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

டெல்லியை விட சென்னையில் அதிகம்….. எகிறிய கேஸ் சிலிண்டர் விலை …!!

டெல்லியை காட்டிலும் சென்னையில் தான் சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு மானிய விலையில் 12 கேஸ் சிலிண்டர்களை நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. 12 சிலிண்டருக்கு மேல் ஒருவர் கூடுதலாக சிலிண்டரை வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருக்கின்றதோ அதற்கு ஏற்றார்போல பெட்ரோல் விலையும், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : டெல்லியில் ஒரு வாரம் எல்லைகள் மூடப்படும் – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்‌ஷாக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னதாக ஓட்டுனருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் டெல்லியில் சந்தைகள், சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுளது. அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 412 பேர், கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் புதிதாக 412 பேர், கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையானது 964ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 359லிருந்து 415ஆக அதிகரித்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா… இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட பல வழக்குகளை விசாரித்தவர்!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா டிங்ரே செஹால் ராஜினாமா செய்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கை விசாரித்தவர் இவர். அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் நீதிபதி இன்று ராஜினாமா செய்துள்ளார். டெல்லி மாநில நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்த நீதிபதி சேகல், […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று…. டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லம் தற்காலிகமாக மூடல்!

டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இரண்டு தமிழ்நாடு ஊழியர் இல்லம் உள்ளது. இதில் உள்ள ஒரு இல்லத்தில் அக்கவுண்ட் துறையில் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அந்த நபர் டெல்லியில் இருந்து திருநெல்வேலி சென்ற சிறப்பு ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயிலில் இருப்பவர்களுக்கு திருச்சியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த தகவல் டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பேருந்து சேவை, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் நிபந்தனைகளுக்கு பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 106 பேரை காவு வாங்கிய கொரோனா… பாதிப்புகள் 8 ஆயிரத்தை நெருங்கியது!!

டெல்லியில் மேலும் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,998 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெல்லியில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,218 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு…. ஏர்- இந்தியா அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைப்பு!!

கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏர்-இந்தியா தலைமை அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த உள்ளதாகவும், அதற்காக 2 நாட்கள் அலுவலகம் மூடப்படும் வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்…!

வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம். முதல்ல வாட்ஸ்ஆப் அட்மினை தான் போலீஸ் கைது செய்யும். நான் வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் தான், எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வாட்ஸ்ஆப் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள். உறுப்பினர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 7,233 ஆக உயர்வு!!

டெல்லியில் மேலும் 310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,233 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை டெல்லியில் கொரோனாவுக்கு 73 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் மருத்துவ அறிக்கையை அளிக்க அனைத்து மருத்துவமனைகளுக்கும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பாதித்த 6,923 பேரில், 2069 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. இந்தநிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BIG BREAKING: மன்மோகன்சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொடர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to All India Institute of Medical Sciences (AIIMS) after complaining about chest pain (File pic) pic.twitter.com/a38ajJDNQP — ANI (@ANI) May 10, 2020

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒண்ணுமே கிடையாது…! ”புட்டு புட்டு வைத்த கெஜ்ரிவால்” ஆட்டம் காணும் பாஜக ..!!

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  கொரோனா வைரஸின் தாக்கம் டெல்லியிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்தது. 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,069பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தேவையான ஆம்புலன்ஸ் இல்லை…! நாட்டின் தலைநகருக்கு ஏற்பட்ட அவலம் …!!

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  கொரோனா வைரஸின் தாக்கம் டெல்லியிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்தது. 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,069பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கொரோனா – கெஜ்ரிவால்

தலைநகர் பகுதியில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாதவர்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாகக் காய்ச்சல், தும்மல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இருப்பினும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலர் எவ்வித அறிகுறிகளுமின்றி இருக்கின்றனர். இதுபோல கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை asymptomatic cases என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சமீப காலமாக அதிகரித்துவருகிறது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா வைரசால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர் – முதல்வர் கெஜ்ரிவால் தகவல்!

டெல்லியில் கொரோனா வைரசால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர் என முதல்வர் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளனர். டெல்லியில் கொரோனா வைரஸால் 7,000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,500 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மீதமுள்ளவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் நோயின் அறிகுறியே இல்லாதவர்கள். சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. 1500 பேரில் 27 பேர் மட்டுமே வெண்டிலெட்டரில் உள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா நோயிலிருந்து 2,069 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சி.ஆர்.பி.எப். உயரதிகாரிக்கு கொரோனா உறுதி…. தலைமை அலுவலகத்திற்கு சீல்!

டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் இதுவரை 39, 980 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 633 பேர் கொரோனோவால் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 682 பேர் குணமடைந்துள்ளனர். முதல்முறையாக ஒரே நாளில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரததைக் கடந்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டெல்லியின் முன்னாள் நீதிபதி கொரோனாவால் உயிரிழப்பு ….!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் 39,311 பேர்  கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,319 பேர் உயிரிழந்துள்ளனர். அதே […]

Categories
தேசிய செய்திகள்

முகாமில் தங்கியிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் 68 பேருக்கு கொரோனா உறுதி…!

கிழக்கு டெல்லியில் சி.ஆர்.பி.எப் முகாமில் இருந்த 68 வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பா?… டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“பிளாஸ்மா சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது”: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள் மூலம் நன்றாக பலன் கிடைத்துள்ளன என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஐசியூ-வில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை… இஸ்லாமியர்கள் பிளாஸ்மா தானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்துவருகின்றனர். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகின்றது. இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.. அதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. டெல்லியில் இதுவரை 3,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது. அதில் 877 […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் வீட்டில் இருக்கும் போது… “மாமனார், மாமியாரை கொலை செய்த மனைவி”… அதிர வைத்த சம்பவம்!

டெல்லியில் கணவன் வீட்டில் இருக்கும்போதே மாமனார் மற்றும் மாமியாரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், குடும்ப வன்முறைகள் குடும்பத்தில் பிரச்சனைகள், கொலைகள்  மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தொடர்ந்து குற்றங்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இதுபோலவே ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. ஆம், மேற்கு டெல்லியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும்: டெல்லி முதல்வர் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் கடந்த 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவர் மாளிகையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: அதிகாரிகள் விளக்கம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என ராஷ்டிரபதி பவன் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பணியாளருக்கு தொற்று என தகவல் வெளியான நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைப் பணியாளரின் குடும்பத்தில் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு இருந்தது, தற்போது அவர் தனிமைப்படுத்துதலில் உள்ளார் என தெரிவித்துள்ளது. இன்று காலை டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: டெல்லி-காசியாபாத் எல்லைக்கு சீல்… வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி மற்றும் காஜியாபாத் இடையிலான எல்லைகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன. காசியாபாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1397 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் சுமார் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஒருவருக்கு கொரோனா.. சுய தனிமையில் 125 குடும்பங்கள்..!

டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள மற்றவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். […]

Categories
Uncategorized சற்றுமுன் தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல் – டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,81,026ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் துயரம்…! 1½ மாத குழந்தை கொரோனாவுக்கு பலி …!!

டெல்லியில் கொரோனா தொற்றினால் ஒன்றரை வயது குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு தீவிர சுவாச பிரச்சினையின் காரணமாக அவதிப்பட்டு வந்த ஒன்றரை மாத குழந்தை சிகிச்சைக்காக டெல்லியில் இருக்கும் ஹார்டின் மருத்துவமனையுடன் சேர்ந்த கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் குழந்தைக்கு செய்த பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியான பின்னர் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் ரூ.1 கோடி நிதி: டெல்லி அரசு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ/சிறுநீர் கழித்தாலோ ரூ.1000 அபராதம்: டெல்லி மாநகராட்சி!

பொது இடங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது. அவ்வாறு மீறினால் குறிப்பிட்ட நபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா: 72 குடும்பங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுகோள்!

தெற்கு டெல்லி பகுதியில் பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இதுவரை பீட்சா டெலிவரி செய்த 72 வீடுகளில் உள்ள மக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் டெலிவரி செய்தவருடன் பணிபுரிந்த 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், 2ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இரண்டாவது நாளாக லேசான நில அதிர்வு – ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவு!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் […]

Categories
தேசிய செய்திகள்

தப்லிகி ஜமாஅத்தின் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள் உட்பட 87 பேர் கைது: ம.பி. காவல்துறை

டெல்லி தப்லிகி ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் என மத்திய பிரதேசத்தில் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள், அமைப்புடன் தொடர்புடைய 10 இந்தியர்கள் மற்றும் போபாலில் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த 13 பேர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மீது ஐபிசி 188, 269, 270 உள்ளட்ட பிரிவுகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 13, மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

“அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்”… டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!

 மக்கள் ஒவ்வொருவரும் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஓன்று. டெல்லியில் இன்று ஒரேநாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 5கி கோதுமை, 1கி அரிசி: டெல்லி அரசு அதிரடி

டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேஷன் விநியோகிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்று 10 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும், தேவைப்பட்டால் மையத்திலிருந்து அதிக உணவு தானியங்களை எடுத்துக்கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தினசரி தொழிலாளர்கள் மற்றும் […]

Categories

Tech |