காமன் வெல்த் டேபிள் டென்னிஸ்குழு பிரிவில் இந்திய அணியானது தங்கம் வென்றது. இதையடுத்து கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல் மற்றும் ஸ்ரீஜா அகுலா ஜோடி தங்கம் வென்று அசத்தியது. அதன்பின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல் மற்றும் சத்யன் இணை வெள்ளி வென்றது. அதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீரர் சரத்கமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்த நிலையில் நடந்த இறுதிப்போட்டியில் சரத்கமல் இங்கிலாந்து வீரர் பிட்ச்ஃபோர்டை எதிர்கொண்டார். இப்போட்டியில் முதல் […]
Tag: டேபிள் டென்னிஸ்
கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளன் உடல் சென்னைக்கு வந்தடைந்தது. தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு சார்பில் இளம் வீரர் தீனதயாளன் உள்ளிட்ட 4 வீரர்கள் நேற்று அசாமில் இருந்து மேகலாவுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி மீது அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீனதயாளன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதையடுத்து பவினா பென் படேல்க்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு […]
சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சத்யன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியானது செக்குடியரசில் உள்ள ஒலாமாக் நகரில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சத்யன்,சுவீடன் நாட்டை சேர்ந்த துருல்ஸ் மோர்கார்த்தை தோற்கடித்தார் . இதையடுத்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த யெவின் பிரைஸ்செபாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 11-0, […]
டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பாத்ரா தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் 3-வது சுற்றுக்கான போட்டியில் மணிகா பத்ரா, ஆஸ்திரியா வீராங்கனை சோபியா பொல்கானோவாவுடன் மோதினார். இதற்கு முன் நடந்த முதல் 2 சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிக்கா இந்த சுற்றில் தவறவிட்டார். இதில் 8-11, 2-11, 5-11, 7-11 என […]
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிசில் 2-வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரரான தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார் . இதில் 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற கணக்கில் இந்திய வீரர் சரத் […]
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கிரேட் பிரிட்டன் வீராங்கனை டின்-டின் ஹோவை எதிர்த்து மோதினார் . இதற்கு முன் நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியை சந்தித்த மணிகா பத்ரா மகளிர் ஒற்றையர் பிரிவில் அசத்தினார். இதில் முதல் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கி,தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி,ஸ்வீடனைச் சேர்ந்த லிண்டா பெர்க்ஸ்ட்ராமை எதிர்கொண்டார். இதனையடுத்து,பெர்க்ஸ்ட்ரோம் 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இதனால்,முதல் ரவுண்டில் 11-5 என்ற கணக்கில் சுதிர்தா ஆட்டத்தை இழந்தார்.அதன்பின்னர்,ஆட்டத்தை கைப்பற்ற முயற்சித்தார். இந்நிலையில்,சுதிர்தா 5-11, 11-9, 10-12, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற […]
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதல் முறையாக தமிழக வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அரியானா மாநிலம் 82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.