ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது பெற்றோர்களை முதல் முறையாக விமானத்தில் அழைத்து சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் சாதனை படைத்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர் நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்தன . A small dream of mine came true […]
Tag: டோக்கியோ ஒலிம்பிக்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தால் நிறைவு விழா நடைபெற்றது. […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஈட்டி எறிதல், மல்யுத்தம் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிட்டண் ,குத்துச்சண்டை ,துப்பாக்கி சுடுதல் ,வில்வித்தை போன்ற பல்வேறு போட்டிகளில் இந்திய அணி வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதுவரை இந்திய அணி 2 வெள்ளிப் பதக்கங்களும், 3 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 5 பதக்கங்களை பெற்றுள்ளது. […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ஜார் உகுயேவ் உடன் மோதிய அவர் கடுமையாக போராடிய நிலையில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக்கில் இருந்து இந்தியாவுக்குக் கிடைக்கும் ஐந்தாவது பதக்கமும் இரண்டாவது வெள்ளிப்பதக்கமும் ஆகும். அரியானா மாநில அரசு இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக […]
ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. கடைசி […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டண் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பி.வி.சிந்து இன்று நாடு திரும்பியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டண் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் டோக்கியோவில் இருந்து இன்று நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனை “என்னை என் நாட்டுக்கு அனுப்பாதீர்கள்” என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனையான Kryststina Tsimanouskaya ( 24 ) 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக காத்திருந்த வேளையில் அவரது பயிற்சியாளர் அவரை திடீரென 4×400 ரிலே ஓட தயாராகுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் Kryststina-வின் பயிற்சியாளர் 200 மீட்டர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதோடு, […]
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவூர் பதக்கம் வெல்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவூர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதற்குமுன் நடைபெற்ற தகுதிச்சுற்றில் 64 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்ததால் ,அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இன்றைய போட்டியில் 32-வது இடத்தில் இருக்கும் கமல்பிரீத் கவூர் வெற்றி பெற்று இந்தியாவுக்கு 4-வது பதக்கம் […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 11 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் HIV-க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிம்பிக்கில் பாரம்பரியமாக ஆணுறை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்தை பயன்படுத்திய நைஜீரியாவை சேர்ந்த வீராங்கனை பிளஸ் சிங் ஒகாபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிருக்கான 100 மீட்டர் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கு நைஜீரியாவின் தடகள வீராங்கனை ஒகாபர் தகுதி பெற்றிருந்தார். இதற்கு முன்பாக நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் 11.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஒகாபர் முன்னேறி இருந்தார். இந்நிலையில் இவர் உடல் […]
ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் தருண்தீப் ராய், உக்ரைன் நாட்டை சேர்ந்த லெக்சீ ஹன்பின்-ஐ முதல் சுற்றில் எதிர்கொண்டார். இதில் 6-4 செட் பாயிண்டில் வெற்றி பெற்ற தருண்தீப் ராய் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் , இஸ்ரேல் நாட்டு வீரரான இட்டே […]
ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன வீரரிடம், இந்தியாவின் சரத் கமல் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் நடத்த 3-வது சுற்றில் இந்திய வீரரான சரத் கமல், சீனாவை சேர்ந்த லாங் மா-வை எதிர்கொண்டார். இதில் பலம் வாய்ந்த சீன வீரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சரத் கமல் […]
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 69 கிலோ எடைபிரிவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், ஜெர்மனி வீராங்கனை நடின் அபேட்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகளைப் பெற்று 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற லோவ்லினா காலிறுதிக்கு […]
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் நடந்த 3-வது லீக் சுற்றில் ஏ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. அப்போது ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை அடித்தார்.இதற்கு அடுத்த […]
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள் ,பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில் இருந்து இன்று டெல்லி திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக […]
டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பாத்ரா தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் 3-வது சுற்றுக்கான போட்டியில் மணிகா பத்ரா, ஆஸ்திரியா வீராங்கனை சோபியா பொல்கானோவாவுடன் மோதினார். இதற்கு முன் நடந்த முதல் 2 சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிக்கா இந்த சுற்றில் தவறவிட்டார். இதில் 8-11, 2-11, 5-11, 7-11 என […]
ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி 2-வது சுற்றில் தோல்வியடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 -வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றுப் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான தனிநபர் சப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி , துனிசியா வீராங்கனை நடியாவை எதிர்கொண்டார் . இதில் 15-3 என்ற கணக்கில் நடியாவை வீழ்த்திய பவானி தேவி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து 2-வது […]
டோக்கியோவில் நடைபெற்று வரும் 32ஆவது ஒலிம்பிக் தொடரில், ஸ்கோட்போட்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த 13 வயது இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று, மிக இளம் வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்ற மகளிர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம் இவர் 13 வயதில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றபோதே, பெரும் உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில், அதே 13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று, உலக […]
ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியின் கால்இறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ் மற்றும் தரூன்தீப் ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியை எதிர் கொண்டனர். இப்போட்டியில் 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த கால்இறுதி சுற்றில் இந்திய அணி, தென் கொரிய அணியுடன் மோதியது. இதில் […]
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிசில் 2-வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரரான தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார் . இதில் 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற கணக்கில் இந்திய வீரர் சரத் […]
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆண்களுக்கான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ் மற்றும் தருண் தீப்ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டனர். இதில் முதல் 2 செட்டை இந்திய அணி கைப்பற்ற , 3- வது செட்டை கஜகஸ்தான் அணி வென்றது. இறுதியாக 4-வது […]
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 2-ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா உக்ரேன் வீராங்கனை பெசோட்ஸ்காவை எதிர்கொண்டார். இதில் 4-3 என்ற செட் கணக்கில் பெசோட்ஸ்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்கில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவுக்கான 2-வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் இந்திய அணி 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதில் இந்தியா சார்பில் சிங் தில்பிரீத் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். […]
டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்தியாவின் சானியா மிர்சா -அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியடைந்தது . டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் சானியா மிர்சா – அங்கிதா ரெய்னா ஜோடி , உக்ரைன் நாட்டை சேர்ந்த சகோதரிகளான நாடியா- லுட்மைலா ஜோடியுடன் மோதினர் . இதில் முதல் செட்டை சாய்னா – அங்கிதா ஜோடி 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக […]
ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி, ஸ்பெயின் வீராங்கனை சாரா சொர்ரிபெஸ் டோர்மோவுடன் மோதினார் . இந்த போட்டியில் ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட […]
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று பிற்பகலில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பிளைவெயிட் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை […]
ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட்- அரவிந்த் சிங் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர் . 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் துடுப்பு படகு போட்டியில் ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெற்றது .இதில் இந்தியா சார்பில் அர்ஜூன் லால் ஜாட் – அரவிந்த் சிங் ஜோடி கலந்துகொண்டனர். […]
மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர் . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் கலந்துகொண்டனர் . 6 சுற்றுகள் கொண்ட போட்டியில் யஷாஸ்வினி முறையே 94,98,94,97,96 என மொத்தமாக 574 புள்ளிகளை பெற்று 13-வது இடத்தை பிடித்தார். இப்போட்டியில் முதல் […]
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறினார்கள். நேற்று டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடங்கியிருக்கிறது, அதில் அபுர்வி, இளவேனில், மகளிர் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்று தோல்வியுற்றனர். எனினும், வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய நாட்டை சேர்ந்த தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் காலியிறுதி சுற்றுக்கு முன்னேறினர். இவர்கள் காலியிறுதி போட்டியில் தென்கொரிய அணியுடன் மோதுகிறார்கள். இந்தியாவை சேர்ந்த முன்னனி ஒலிம்பிக் நட்சத்திரங்கள், பதக்கங்களை […]
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். 2021- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். துப்பாக்கிச்சுடுதல் […]
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்திய சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகளுடன் […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]