டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ,வீராங்கனைகள் தடகள போட்டிகள் ,பேட்மிட்டண் , துப்பாக்கிச் சூடு, மல்யுத்தம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும் , பேட்மிட்டணில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கமும் ,மகளிர் குத்துச் சண்டையில் […]
Tag: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டியின் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம் 5-1 என்ற கணக்கிலும் , ஜெர்மனியிடம் 2-0 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி , இங்கிலாந்துடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. இதில் ஆட்டத்தின் […]
ஜப்பான் தலைநகரில் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்ற சீன நாட்டின் வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளுதூக்கும் போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹு ஜிஹூய் என்பவர் மொத்தமாக 219 கிலோவை தூக்கி தங்கப்பதக்கத்தை […]
பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெற்றி பெற்றுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் பல்வேறு வகையான விளையாட்டுகளில் வீரர்-வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பேட்மிட்டண் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவாவை எதிர்கொண்டார். […]
நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3-2 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து தனது முதல் கோலை பதிவு செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை அடிக்க , 1-1 என்ற கோல் இரு […]
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீராங்கனை […]
பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 117 கிலோ எடையைத் தூக்கி 2 -வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹுய் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் டோக்கியோ […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளான இன்று வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நடைபெற்றது . இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 6 அம்புகள் என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். இந்தச் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 13 […]
கொரோனாவை முற்றிலும் அழிப்பதென்பது முடியாத காரியம் என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார். மேலும் இவர் கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கயிருக்கும் விளையாட்டு வீரர்களில் யாரெல்லாம் கொரோனாவால் […]
பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டோக்கியோவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னணி டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளான பெடரர், நடால், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் உட்பட பலர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,உலகின் […]
காயம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். […]
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் 15 தினங்களே இருக்கும் நிலையில், டோக்கியோவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 15 தினங்களே உள்ளது. இதற்கிடையே டோக்கியோவில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் பாதிப்பு தினந்தோறும் 920 ஆக அதிகரித்துள்ளது. இதனால் டோக்கியோவில் அவசரகால நிலையை பிறப்பிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி அங்கு தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தல் […]
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற சிறப்பை மானா படேல் பெற்றுள்ளார். கொரோனா தொற்றால் பாதிப்பால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23 -ம் தேதி முதல் நடைபெற உள்ளது .இதில் இந்தியா சார்பில் 3-வது நீச்சல் வீரராக மானா படேல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த 60 வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 100 […]
தற்போதுள்ள சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது , திட்டமிட்டபடி நடைபெறுவது சந்தேகம்தான் , என்று டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா கூறியுள்ளார். உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது, கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது.இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. […]
பயிற்சிகள் மற்றும் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய துப்பாக்கி சுடுதல்அணியின் வீரர்-வீராங்கனைகள்,பயிற்சியாளர்கள் ஆகியோர் ,தனி விமானதில் குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற, 15 இந்திய வீரர்-வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, இளவேனில்,அஞ்சும் மோட்ஜில், அபிஷேக் வர்மா , மானு பாகெர், ராஹி சர்னோபாத் உட்பட 13 பேர், 7 பயிற்சியாளர்களும் மற்றும் 6 உதவி ஊழியர்களும் ,நேற்று தனி விமானம் மூலமாக டெல்லியிலிருந்து, குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ளனர். தலைநகர் சாகிரெப்பில் நடைபெற உள்ள […]
ஒலிம்பிக் போட்டியானது இந்த ஆண்டு திட்டமிட்டபடி, கட்டாயம் நடைபெறும் என்று ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவுகின்றது. இதனால் இந்த ஆண்டு […]
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்றால் ,ஒரு வருடத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திருவிழா ,4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் . இதற்கு முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்பட்டதால் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன் பிறகு […]