மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தலால் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் இத்தடை உத்தரவு இன்று மும்பை போலீசாரால் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நவம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 12 வரை நடைமுறையில் இருக்கும். இது தொடர்பாக மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில் “விஐபிகளை குறிவைத்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவும் பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோத சக்திகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடும். இதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் […]
Tag: ட்ரோன்கள்
முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் அவர்கள் வழங்க இருக்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் சட்ட விதிகளின்படி காவல் துறையால் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு கேம்கேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 2வது முனையத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க டிரோன்களைப் பயன்படுத்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த காரணங்களுக்காக டிரோன்களைப் பயன்படுத்த விமானநிலைய அதிகாரிகள் மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், இன்று அதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி கிடைத்து இருப்பதோடு, விமானநிலைய நிர்வாகம் கூடுதலாக மத்திய உள் விவகாரத்துறை அமைச்சகத்திடமும், மத்திய ஆயுதப்படையிடமும் அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த […]
ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ட்ரோன்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 8 மாதங்களாக ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ஈரான் தயாரித்த நூற்றுக்கும் அதிகமான ஷாஹெட்-136 காமிகேஸ் என்ற ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக […]
சென்னையில் நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோவில் திருவிழா, சினிமா குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல்துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகு ட்ரோன்கள் பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதி உள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு சில தடை […]
கேரளா மாநிலம் கொச்சியில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கென காவல்துறை ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். இம்மாநாட்டில் சுமார் 1200 உள் நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லூநர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அனுமதி இன்றி பறக்கும் ஆளில்லா விமானங்களைப் பிடிக்க கேரள காவல்துறை ஈகிள் ஐ எனும் பெயரில் ட்ரோன் டிடெக்டர் வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலேயே மாநில காவல் துறை ஆளில்லா விமானத்தை கைப்பற்றும் […]
பிரெஞ்சு நிறுவனம் ஒன்று தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த பின் அவர்களின் அஸ்தியை ட்ரோன் மூலமாக நவீன முறையில் தாங்கள் விரும்பும் இடங்களில் தூவும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பலர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த பின் அவர்களின் அஸ்தியை புனிதத்தலங்கள் அல்லது தாங்கள் விரும்பும் இடங்களில் தூவ நினைப்பார்கள். மேலும், சிலர் தாங்கள் உயிரிழந்த பிறகு தங்களின் அஸ்தியை தாங்கள் விரும்பும் இடங்களில் தூவ வேண்டும் என்று விரும்புவார்கள். அதன்படி, பிரெஞ்சு நிறுவனமான Terra Ciela. புதிதாக நவீன முயற்சியை […]
ஐக்கிய அரபு அமீரகம் வெயிலை சமாளிப்பதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மழை வரவழைத்து சாதனை படைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் கொளுத்தும் வெயிலை சமாளிக்க தங்கள் நாட்டிற்காக மழையையே உருவாக்கிவிட்டது. நாட்டில் சுமார் 120 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் அழகாக மழை கொட்டி தீர்க்கக்கூடிய வீடியோ வெளியாகி ஆச்சர்யமடைய செய்துள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/21/6209537806104048739/640x360_MP4_6209537806104048739.mp4 அதாவது ட்ரோன்களை மேகத்திற்குள் பறக்க வைத்து மின்சார ஷாக் கொடுத்து அவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து மழை பொழியச் செய்திருக்கிறார்கள். இது […]
மலேசியாவில் தெரெங்கானு என்ற மாநிலத்தில் ட்ரோன்கள் மூலமாக பொது வெளிகளில் மக்களின் அதிகமான உடல் வெப்பநிலை கண்டறியப்படுகிறது. மலேசியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தொலைவிலிருந்தே மக்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரோன்கள் தரையில் சுமார் 20 மீட்டர் தொலைவிலிருந்து, அதிக வெப்பநிலை உடைய மனிதர்களை கண்டறிந்து விடும். அப்போது உடனடியாக சிவப்பு நிற எச்சரிக்கை ஒளியானது, காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்படும். அதன் பின்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள். அதாவது கொரோனாவின் இந்த அலையானது எளிதில் […]
நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், முக்கிய சுற்றுலா […]