Categories
உலக செய்திகள்

ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்… மொத்தமாக எரிந்த ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை…!!!

ரஷ்ய நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த ஆலை முற்றிலுமாக எரிந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் தென்மேற்கு பகுதியில் இயங்கிவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அந்த ஆலை முற்றிலுமாக எரிந்து போனது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் முப்பது நிமிடங்களாக போராடி நெருப்பை அணைத்திருக்கிறார்கள். இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என்று தீயணைப்பு படை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்… சவுதி தலைநகரில் பரபரப்பு..!!!

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஆற்றல் துறை அமைச்சகமானது, தலைநகர் ரியாத்தில் இருக்கும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனினும், நல்லவேளையாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் சவுதி அரேபியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் ஆற்றல் விநியோக பாதுகாப்பு மற்றும் அதன் ஸ்திரத்தன்மையை கெடுக்கும் நோக்கத்தோடு இவ்வாறான தாக்குதல்கள்  மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன்!”…. விமான நிலையத்தில் நடந்த தாக்குதல்… சவுதி அரேபியாவில் பயங்கரம்…!!!

சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையினருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக இயங்கி வருகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால், கடந்த மாதத்தில் ட்ரோன் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்…. கடும் கண்டனம் தெரிவித்த ஐ.நா சபை….!!!

அபுதாபியில் ட்ரோன் மூலமாக வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கிருக்கும் எண்ணெய் நிறுவனத்திற்கு அருகில் இருந்த எரிபொருள் டேங்குகள் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலில், இந்தியாவை சேர்ந்த 2 நபர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும்  பரிதாபமாக பலியாகினர். மேலும் 6 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

ட்ரோன் தாக்குதலில் எண்ணெய் டேங்கர்கள் வெடிப்பு…. இந்தியர்கள் உட்பட மூவர் பலி….!!!

அபுதாபியில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 எண்ணெய் டேங்கர்கள் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கிருந்த எண்ணெய் நிறுவனத்திற்குரிய கிடங்கில் 3 எரிபொருள் டேங்குகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த இருவர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு, ஈரான் ஆதரவுடன் இயங்கும் […]

Categories
உலக செய்திகள்

‘கோழைத்தனமான செயல்’…. பிரதமர் வீட்டில் தாக்குதல்…. கண்டனம் தெரிவித்துள்ள பிரபல நாடுகள்….!!

பிரதமர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈராக்கின் முன்னாள் பிரதமராக இருந்த ஆதில் அப்துல் மற்றும் அவரது அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனால் ஈராக் புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த முஸ்தபா அல் கதிமியை அந்நாட்டின் புதிய பிரதமராக அதிபர் பர்காம் சாலே  நியமனம் செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி  ஈராக்கில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் […]

Categories
உலக செய்திகள்

பிரதமரை கொல்ல முயற்சி…. ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஈராக் பிரதமர் இல்லத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அந்நாட்டின் பிரதமராக உள்ள முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone) பிரதமர் இல்ல கட்டிடத்தை தாக்கியதில் 6 பாதுகாவலர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குலில், எந்தவித பாதிப்புமின்றி தப்பிய ஈராக் பிரதமர், மக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும் அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்…. படுகாயமடைந்த பொதுமக்கள்…. தகவல் வெளியிட்ட சவுதி ஊடகம்….!!

விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள Asir மாகாணத்தின் தலைநகரான Abha நகரில் சர்வதேச விமான நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பயணிகள் விமானம் சேதமடைந்துள்ளதாகவும் சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதிலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை குறிவைத்து 2 ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகரில் தாக்குதல் நடத்திய முக்கிய தீவிரவாதி கொலை.. அமெரிக்க இராணுவம் அதிரடி..!!

காபூல் விமான நிலையத்தில், 170 பேர் உயிரிழந்த கொடூரத் தாக்குதலுக்கு காரணமானவர்களை அமெரிக்க படை, ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். எனவே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு, தொடர்ந்து குண்டுவெடிப்பு தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க […]

Categories

Tech |