ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ஒரு கேள்வியை கேட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவை கடைபிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற தான் விரும்பவில்லை என கூறியுள்ளார். அந்த வேலைக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமானதாக […]
Tag: ட்விட்டர்
கடந்த 2016 -ஆம் வருடம் ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, மற்றும் தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்னும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிவில் மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு துன்புறுத்தல், வெறுப்பு மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான வழிகாட்டுதலையும், நிபுணத்துவத்தையும் வழங்கி வந்தது. இந்நிலையில் ட்விட்டரை எலான் […]
எலான் மஸ்க் 150 கோடி ட்விட்டர் கணக்குகளை விரைவில் நீக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகின் இரண்டாம் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக வாங்கிய பின், மேல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது, நிர்வாக குழுவை மொத்தமாக கலைத்தது, அதிகாரப்பூர்வ புளூ டிக் கணக்கிற்கு கட்டணம் அறிவித்தது என்று தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவாக சுமார் 150 கோடி twitter கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். அதாவது பல […]
ஜான் ஜான்சன் (62) என்பவர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபர்த்துள்ளர். இவர் பிளாக் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தொழில் பயணம் குறித்த மனக்குமுறலை கூறியுள்ளார். அதாவது கடந்த 2018 -ஆம் வருடம் 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆப்டிகல்ஸ் எனப்படும் ஒளியில் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக என்னை பணியில் அமர்த்தியது. விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு இந்த […]
எலான் மஸ்க் twitter நிறுவனத்தை வாங்கிய பின் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் twitter கணக்கு வைத்திருப்பவர்களை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என தற்போது பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது ட்விட்டரில் போலி கணக்குகள் நீக்கப்படுவதால் பாலோவர்ஸ்களின் எண்ணிக்கை குறையலாம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பயனர்கள் சரியாக 280 எழுத்துக்களை அல்லது உள்ளீடுகளை மட்டுமே டைப் செய்து அனுப்பக்கூடிய வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் அதிகமான கருத்துக்களை […]
அமெரிக்க நாட்டின் பிரபல ராப் இசை பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரபலமான ராப் இசை பாடகரான கன்யே வெஸ்ட் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக எலான் மாஸ்க் தகவல் வெளியிட்டுள்ளார். கன்யே வெஸ்ட் பல தடவை கிராமிய விருதுகளை பெற்றிருக்கிறார். ELON FIX KANYE PLEASE — Alex 🃏🏝 (@TheeAleexJ) December 2, 2022 இவருக்கு […]
ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் CEO-வை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்க போகிறோம் என்று தெரிவித்தது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ட்விட்டரை அதன் பயனர்கள் அணுகுவதில் சிக்கல் உண்டாகும். இது பற்றி எலான் மாஸ்க் தெரிவித்ததாவது, ஆப்பிள் அல்லது google என்று எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கினால் […]
மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் பாதிரியாத்திரை சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் ராகுல் காந்தியிடம் “எல்லோரையும் அரவணைத்து செல்வதால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்” எனக் கூறி பெற்றோர் தினமும் வழங்கும் பணத்தில் தான் சேமித்து வைத்த உண்டியலை அவரிடம் வழங்கியுள்ளான். நடைபயண செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளான். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
எலான் மஸ்க்கின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொண்ட தீவிர ரசிகரின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய பிறகு, அந்நிறுவனத்தின் மேல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நீக்க அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், அந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் நாம் எப்போது வெளியேறுவோமோ என்ற பயத்துடனே இருக்கிறார்கள். இந்நிலையில் எலான் மஸ்க் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு ரசிகர் தன் நெற்றியில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எலான் மஸ்க் என்று […]
கூகுள் நிறுவனமானது தங்கள் பணியாளர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தீர்மானித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பல நிறுவனங்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு செலவுகளை குறைக்க தங்கள் பணியாளர்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான சமூக வலைதள நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்தன. அதனையடுத்து முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனமும் 13,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது. இவ்வாறு இந்த வருடத்தில் முக்கியமான […]
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் எலன் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பலவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ twitter கணக்கு என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்விட்ட்களை எடிட் செய்யும் […]
ட்விட்டரில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து கவனிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்து ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகிக் […]
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பக்கம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை வாக்கெடுப்பின் அடிப்படையில் எலான் மஸ்க் மீண்டும் நிறுவினார். ஆனால், இந்த அறிவிப்பை அடுத்து மீண்டும் டுவிட்டர் பக்கம் வர போவதில்லை என்று டொனால்டு தெரிவித்துள்ளார். தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் ஸ்பெஷல் என்ற சமூக வலைதளத்தில் மட்டுமே செயல்படுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் அவரது டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் தடை நீக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 2 வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டதாக டிரம்பின் கணக்கை முடக்கினர். சமீபத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில் டிரம்பின் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்று கேள்விகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடையை நீக்கலாமா? என்று […]
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் சர்வதேச அளவில் டுவிட்டர் நிறுவனத்தில் 7,500 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில் பாதி பேரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் லாப நோக்கத்தில் செயல்பட வைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டு ஒரு வாரத்தில் […]
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் எந்த நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், டெஸ்லா என்னும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இந்நிலையில், அந்நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடத்தில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த எலான் […]
ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கை குறிக்கும் நீல நிற குறியீட்டிற்கு கட்டணம் செலுத்தும் முறையானது வரும் 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டார். அதனை தொடர்ந்து அதிரடியாக அதில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஒருவரின் கணக்கு அதிகாரப்பூர்வமானது தான் என்பதை குறிக்கும் நீல நிற குறியீட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 1600 ரூபாய் வரை செலுத்த […]
ட்விட்டரில் ஒருவரின் கணக்கு உண்மையானது என்பதை குறிக்கும் நீல குறியீடு கட்டணம் செலுத்தும் வசதியுடன் இந்தியாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார். அதன்படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஒருவரின் கணக்கு உண்மையானது தான் என்பதை குறிக்கக்கூடிய நீலநிற குறியீட்டை பெற வேண்டும் எனில் அதற்கு மாதந்தோறும் 719 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் […]
ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் குறைந்த செலவுடன் வருமானத்தை அதிகரிக்கவில்லை எனில் நிறுவனம் திவால் ஆகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். 4400 கோடி டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய இவர், அதில் அதிரடியாக பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் தடவையாக நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகு, செலவை குறைப்பதற்காக […]
உலக பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய சொந்த நிறுவனமான டெஸ்லாவின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டு அதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்த பணத்தை திரட்டியதாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவர், மின்சார வாகன நிறுவனத்தில் ஏறக்குறைய $4 பில்லியன் மதிப்பு கொண்ட பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. […]
நவம்பர் 15ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2016 முதல் 2020 ஆம் வருடம் வரை நான்கு வருடங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்த டெனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வடகொரியா உடன் நட்பு, இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் 2020 ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் […]
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் 90% சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பணக்காரராக ஜொலிக்கும் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கி வாங்கி இருந்தார். இது குறித்த அறிவிப்பு வெளியானது முதல் எலான் மஸ்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த விவாதங்கள் உலக அளவில் பேச்சு பொருளானது. அவர் ட்விட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே அங்கிருக்கும் நிர்வாக அதிகாரங்களையும் ஊழியர்களையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து […]
ட்விட்டர் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய பணியாளர்களில் சில பேரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின், கைகளுக்கு சென்ற பிறகு அதில் அதிரடியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் உலகம் முழுக்க உள்ள 7500 பணியாளர்களில் பாதி பேரை கடந்த நான்காம் தேதி அன்று பணி நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் சில பேரை மட்டும் மீண்டும் பணிக்கு […]
ட்விட்டரில் போலியான கணக்குகளை எச்சரிக்கை இல்லாமல் நிரந்தரமாக நீக்கிவிடுவோம் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராகவும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவராகவும் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பெயரில் போலியாக சிலர் கணக்குகள் தொடங்குகிறார்கள். இவ்வாறான போலி கணக்குகளால் ட்விட்டர் மீது இருக்கும் […]
ட்விட்டர் நிறுவனம் நேற்று மட்டும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் அதிகமான பணியாளர்களை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனமானது, உலகில் அதிக பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகம் முழுக்க பணி புரியும் ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் அதிகம் பேரை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 7500 பேரில் […]
ட்விட்டரில் எழுத்தாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எலான் மாஸ்க் கொடுத்த பதில் அதிகம் பேரை ஈர்த்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் எழுத்தாளரின் கேள்விக்கு அளித்த பதில் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எழுத்தாளரான டிம் அர்மன், “உங்களுக்கு தெரிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்” என்று கேட்டிருந்தார். இதற்கு பல பேர் பதில் கூறினார்கள். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் கூறியதாவது, “நான் வேற்று கிரகவாசி, […]
ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் ‘கூகுள் பே’ நம்பரை […]
ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தியவுடன் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் என்னும் பிரபல சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி விட்டார். அதனையடுத்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் இயக்குனர் குழுவை நீக்கிவிட்டார். அந்த குழுவில் இருக்கும் ஒன்பது நபர்களையும் ஒரே நேரத்தில் அதிரடியாக நீக்கினார். மேலும், […]
ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கணக்குகள் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவது பற்றி சூசகமான முறையில் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிக்கும் விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் இறங்கினர். அதன் பிறகு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் […]
ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கின்றார். முன்னதாக விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி […]
ட்விட்டரின் உள்ளடக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு புதிய குழு ஒன்றை எலான் மஸ்க் ஏற்பாடு செய்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். ட்விட்டரின் உரிமையாளர் பற்றி எலான் மஸ்க் பேசும்போது இந்த நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை மனித குலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமாக ட்விட்டரை வாங்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி […]
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளை அடுத்தடுத்து அதிரடி பணி நீக்கம் செய்துள்ளார். உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். அதன்பின் ட்விட்டரை தான் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை இல்லை நானே வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கை கழுவும் தொட்டியை தூக்கிக் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அதை மேடையிலேயே ஜோபைடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் 79 வயதான ஜோ பைடன் ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்துள்ளார். அதாவது ரிஷி என்பதை ரிஷித் எனவும் சுனக் என்பதை சினூக் ஹெலிகாப்டரை நினைவுபடுத்தும் விதமாக சனூக் எனவும் மாற்றி […]
36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 26 தங்கப் பதக்கங்கள் உட்பட 74 பதக்கங்களுடன் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது திறன்களை வெளிப்படுத்தி கடும் உழைப்பினால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரர்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன். மேலும் அடுத்து வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவது மட்டுமல்லாமல் எனது […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒருவர் செலுத்தி இருக்கும் தொகைக்கு வட்டி வரம்பு வைக்கப்படாமல் இருந்தால் அதற்கு காரணம் என்ன என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது ஒருவரது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி எப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படவில்லை என்றால் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என அர்த்தம் ஆகுமே தவிர யாருக்கும் வட்டி வரவு வைக்கப்படாமல் இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எந்த பயனாளருக்கும் […]
ட்வீட்டர் பங்குகளை எலான் மஸ்க் வாங்க முன் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை 3.34 லட்சம் கோடிக்கு வாங்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை இந்த நிலையில் ட்விட்டரில் போலி கணக்குகள் இருக்கிறது என்று ஆதாரத்தை நிரூபிக்காத காரணத்தால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமெரிக்க […]
இந்தியாவில் 57 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து அவற்றை ஊக்குவிக்கும் நபர்களுடைய ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவல் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி அன்று சம்மன் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நாடு முழுவதும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஆபாச படங்களை ஊக்குவித்த 57 ஆயிரத்து 643 பேர் கணக்குகளை […]
பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை முடக்கியிருக்கிறது. அந்நாட்டு அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கை படி ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை நிறுத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ட்விட்டர் நிறுவனமானது ஒரு நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதிகாரிகளின் கோரிக்கை படி குறிப்பிட்ட கணக்குகளை நிறுத்தும் […]
பிரதமர் மோடி சாலை விதிகளை கடைபிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்வதாக இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றார்கள். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். இந்த நிலையில் அகமதாபாத்தில் நேற்று முப்பத்தி ஆறாவது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6000 கோடி மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேலும் இரண்டாவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் […]
தனுஷ் ட்விட்டரில் 11 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் திரை உலகிற்கு வந்த போது பலராலும் கேலி செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது விடாமுயற்சியால் வெற்றி பெற்று தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். தற்போது ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 11 மில்லியனை […]
மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களை நிறைவு செய்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய நட்சத்திரம் விராட் கோலி பெற்றுள்ளார். 211 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்திய நட்சத்திர பேட்டர் விராட் கோலி, ட்விட்டரில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 33 வயதான அவர், உலகில் அதிகம் பின்தொடரும் கிரிக்கெட் வீரர் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (450M) மற்றும் லியோனல் மெஸ்ஸி (333M) […]
மக்கள் பலரும் வாயில்லா ஜீவன்களுக்கு பறவைகளுக்கு உணவளிக்க விரும்புவார்கள். அந்த பறவைகள் உணவை கொத்தி சாப்பிடும் அழகு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். ஆனால் பதிலுக்கு சில பறவைகள் செய்யும் செயல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அது போன்ற ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதனை twitter பயனாளர் ஒருவர் பகிர்ந்து உள்ளார். ட்விட்டர் பயனர் கொலின் லிண்ட்சே என்பவர் தனது ட்விட்டரில், தான் ஒரு கேக்கைப் பகிர்ந்துகொண்டபோது அதற்குப் பதில் காகம்தான் பரிசளித்தது. ‘நான் அதற்கு ஒரு சிறிய […]
ட்விட்டரில் Liz trussel என்ற பெண் ஒருவரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் என்று மக்கள் தவறாகிய கருதியதை அடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து செய்திகளை அனுப்பி இருக்கின்றார்கள். ஸ்வீடனின் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் ஒரு வீட்டில் அவர் தவறாக டேக் செய்யப்பட்டதால் குழப்பம் தொடங்கியுள்ளது. அதாவது ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் திங்கள்கிழமை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கிரேட் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்கும் லிஸ்டர்ஸ்க்கு வாழ்த்துக்கள் ஸ்வீடன் மற்றும் […]
ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒற்றை சொல் ட்விட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி, சசிகலா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இணைந்துள்ளனர். அமெரிக்காவின் ‘அம்ட்ராக்’ என்ற ரயில் சேவை நிறுவனம் ‘trains’ என ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்ய அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஒற்றை சொல்லில் கிளிக் செய்து வருகின்றனர். அமெரிக்கா அதிபர் ஜோபேடன் டெமோகிராசி எனவும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல நாசா யுனிவர்ஸ் என்று […]
உலகமெங்கும் ட்விட்டரில் ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டிங்கில் உள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பெயர்களை ஒற்றை வார்த்தையில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்துள்ளனர். . அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் திராவிடம் என்று டுவிட் போட அடுத்த 20 நிமிடத்தில் தமிழ் தேசியம் என்று சீமான் பதிலடி கொடுக்க இதற்கிடையில் அண்ணாமலை தமிழன் என்று பதிவிட்டு மோதிக்கொண்டனர். இந்நிலையில், சசிகலா தனது ட்விட்டர் […]
சவுதி அரேபியாவில் அரசாங்கத்தை எதிர்த்து ட்விட்டரில் கருத்து வெளியிட்ட பெண் ஒருவருக்கு 34 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சல்மா அல் செஹாப் என்ற பெண் அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறார். எனவே, ட்விட்டர் தளத்தின் மூலமாக சமூகத்தில் பதற்றம் உண்டாக்க முயல்கிறார் என்று அவர் மீது அரசாங்கம் வழக்கு பதிவு செய்தது. எனவே, நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு பின் அந்த பெண்ணிற்கு 34 வருடங்கள் […]
#ஸ்ரீமதிக்குநீதிவேண்டும் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப்படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், மாணவி மர்ம மரணத்தில் உரிய விசாரணை நடத்த கோரிக்கை வலுத்து வருகிறது.
பாகிஸ்தான் அரசின் யோகா பற்றிய பதிவிற்கு அந்நாட்டின் மதவாதிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச யோகா தினத்திற்காக பல உலக நாடுகள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டன. அதேபோல் பாகிஸ்தானும் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “யோகா மூலம் மன நிறைவு, நிலையான மாற்றம் உண்டாகிறது. இரு விஷயங்கள் உடற்பயிற்சி உலகத்தில் மிகவும் முக்கியமானது. அதன்படி யோகா மூலமாக மனது, உடல் புத்துணர்வு பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த கருத்திற்கு அந்நாட்டின் மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். […]
பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எடிட் செய்யும் வசதியை பரிசீலனை செய்து டுவிட்டர் நிர்வாகம் தற்போது அந்த வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக் போல அனைத்து பதிவுகளுக்கும் இந்த வசதியை அளிக்காமல் சில பதிவுகளுக்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது. இதன் மூலம் பிறரை துன்புறுத்தும் சில பதிவுகளுக்காக ட்விட்டர் மூன்று வகையான விருப்பங்களை காட்டும் அந்த விருப்பங்களில் பதிவை நீக்குதல் எடிட் செய்தல் ட்விட்டை பதிவு செய்தல் ஆகிய […]
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி, இயக்குனர் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய ஜாக் டோர்சி, தன் பதவியை கடந்த நவம்பர் மாதத்தில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு நான் மீண்டும் வரமாட்டேன் என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.