பிரதமரின் சாப்பாடு செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு குறித்த விவரத்தை RTI கேட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிகாரி சிங் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் வசிக்கும் இல்லம் மத்திய பொதுப்பணித்துறையால் கவனிக்கப்படுகிறது. பிரதமர் பயன்படுத்தும் வாகனங்கள் எஸ்பிஜி பொறுப்பில் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு கேண்டின் செயல்பட்டு வருகிறது. அதில் தற்போதைய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு […]
Tag: தகவல் அறியும் உரிமை சட்டம்
தமிழகத்தில் கடந்த 15 வருடங்களில் அரசு பள்ளிகள் மூடப்படுவது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின் படி தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவாரூர்-2, நாட்றம்பள்ளி-1, தேவக்கோட்டை -4, தட்டால கொளத்தூர்-1, திருவள்ளூர்-1, பர்கூர்-1, தாராபுரம்-1, புள்ளம்பாடி-1, மயிலாடுதுறை-1, ஆரணி-1, கெலமங்கலம்-1, திண்டுக்கல்-4, லால்குடி -2, தர்மபுரி-1, திருவண்ணாமலை-1, திருப்பூர் -5, வேலூர்-2, நீலகிரி-5, தேனி -5 என அரசு […]
விழுப்புரம் மாவட்டத்தில் வாய்க்கால் அமைக்காமல் ஒரு கோடியே 36 லட்சம் போலி பில்கள் மூலம் எடுக்கப்பட்டது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் ஒன்றியத்திற்குட்பட்ட இளங்காடு ஊராட்சியில் 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இளங்காடு ஊராட்சியில் உள்ள குடுமியான்குப்பம் மற்றும் பெத்துரெட்டிக்குப்பம் ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஏரி கால்வாய் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்போது வரை […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சசிகாந்த் ஜாதவ் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாரிஹி கிராம பஞ்சாயத்தின் விவரங்களை கோரியுள்ளார். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதியன்று பஞ்சாயத்து தலைவரின் கணவர், செயலர் ஆகியோர் சசிகாந்த் ஜாதவை அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். அதன் பிறகு ஜாதவை அறையில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். மேலும் தங்களுடைய காலனியில் சிறுநீரை ஊற்றி அதனை ஜாதவிற்கு குடிக்க கொடுத்துள்ளனர். […]
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பங்கேற்று புதுக்கோட்டை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த புகார்தாரர்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் […]