பிரபல நிறுவனங்கள் நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரித்து வருகின்றன. ஆனால் சரவணா ஸ்டோர் தொடர்பான விளம்பரங்களில் லெஜன்ட் சரவணா தானே நடித்து பிரபலமானவர். இவர் தற்போது முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகம் ஆகும் திரைப்படம்”தி லெஜெண்ட்” . இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்த திரைப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் […]
Tag: தகவல்
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து […]
கர்நாடக மாநில மைசூருவை சேர்ந்த பவித்ரா லோகேஷ் என்பவர் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிபடங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதனை போல தெலுங்கு திரைப்படம் நடிகர் நரேஷ் 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3 வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பவித்ர லோகேஷ் முதல் கணவரை விட்டு […]
பிரபல நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. இதுவரை 1,46,965 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கப்புக்கும் தற்போது தொற்று உறுதியாகயுள்ளது. இவர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் இளைஞர்கள் மற்றும் சமூக நல மந்திரி டாங்க் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் […]
பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் மக்கள் இயக்கம் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது […]
காச நோயானது விலங்குகளுக்கும் பரவும் என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காசநோய் குறித்து ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர். இதுபற்றி ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.ஆர்டியின் டாக்டர் ஸ்ரீராம் கூறியுள்ளார். அவர் கால்நடைகளில் காச நோய்க்கான மைக்ரோபாக்ட்ரீயம் இருப்பதாக கூறியுள்ளார். இந்த காச நோயானது காற்றில் பரவும் நோய் என்பதால் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் துளிகள் மூலமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்த எச்சில் துளிகள் மூலமாக மனிதர்களிடமிருந்து […]
பிரபல நாட்டில் புதிதாக 2 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 7 நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு தற்போது 2 பேருக்கு புதிதாக ஓமைக்கரான் பிஏ 2.75 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் புதிய வகை தொற்றினால் கடுமையான […]
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்னையில் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தை மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுத்துவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் தயானந்த கிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார். இது பற்றிய தகவல்கள் தற்போது ஆர் டி ஐ மூலமாக […]
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்து கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமாரிடம் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் அந்த பகுதியில் சிறிய அளவில் மேற்கூரை அமைத்து சிவலிங்கத்தை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு […]
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கனிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளவுர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது . அதாவது இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு தொற்று கன்டறியபட்டுள்ளது.இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,066 பேருக்கு தொற்று உறுதி […]
பிரபல நடிகர் சூர்யாவுடன் இணைந்து மலையாள நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த ஜெய் பீம், சூரரை போற்று திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப் போற்று திரைப்படமானது ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தமிழ் சினிமாவுக்கே பெருமையை சேர்த்துள்ளது. இதனையடுத்து நடிகர் சூர்யா உலக […]
மியான்மரில் இன்று காலை 7.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியது, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதவாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிலநடுக்கம் யாங்கூனில் இன்று 260 கி.மீ. சுற்றளவில் உணரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும்இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தளபதி விஜய் படத்தில் இணைய போகும் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். […]
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ் இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றன. தனது பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது அசத்தலான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் வீடியோ காலில் அன்லிமிடெட் அவதார்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் சொந்த முகத்திற்கு பதிலாக அனிமேஷன் மூலம் முகத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாம். இதற்கான அப்டேட் விரைவில் வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இந்த […]
இந்திய குடியரசு தலைவராக இருந்து வரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 15 வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகின்ற ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு தே.ஜ.கூ கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னை வந்தடைந்தார். அவரை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வருகை தந்துள்ளனர். அவர்களை தனித்தனி […]
முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என்று கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே நாமக்கல் முட்டை 5.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த சில நாட்களில் மட்டும் முட்டையின் விலை 45 காசுகள் வரை உயர்ந்தது. கோழி தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு, […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஒவ்வொரு நாடும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதில் மத்திய கிழக்கு, […]
அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற எந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தனர். ஆனால் அதை மீறி மூத்த நிர்வாகிகள் மேடையில் கூச்சலிட்டனர். அப்போது ஒற்றை தலைமை விவகாரம் பற்றி பேசப்பட்டதை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். அப்போது […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு வட்டி வீதத்தை நிர்ணயம் செய்கின்றது. அதன்படி தற்போது ஜூலை முதல் செப்டம்பர் காலத்திற்கான வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]
நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகுதான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்த் திரைப்படம் […]
நாடு முழுவதும் பல மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்க்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது […]
பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இரண்டு வருடங்களில் புடின் இறந்து விடுவார் என உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத் துறை தலைவரான மேஜர் ஜெனரல் kyrylo o.Budanov, ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்ய செல்வந்தர் ஒருவர் புடினுக்கு ரத்த புற்றுநோய் […]
சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க மற்றும் புறப்பட 2 ஓடுபாதைகள் இருக்கிறது. இதில் முதல் ஓடுபாதை 3.66 கி.மீ தூரமும், 2வது ஓடுபாதை 2.89 கி.மீ தூரமும் கொண்டது. முதல் ஓடுபாதையில் பெரியரக விமானங்கள் வந்து தரையிறங்கி, பிறகு புறப்பட்டு செல்கிறது. 2வது ஓடுபாதையில் சிறு ரக விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனிடையில் விமான நிலையத்தின் முதல் ஓடுபாதையானது பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின் 2வது ஓடு பாதையை முழுமையாக பயன்படுத்த இயலவில்லை. இப்போது அவ்வப்போது […]
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல சற்று கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் […]
அரசு ஊழியர்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்தில் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை செட்டில்மெண்ட் என இரண்டு ஜாக்பாட் அறிவிப்புகளுக்கான மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி -ஜூன், ஜூலை-டிசம்பர் என ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டில் பணவீக்கம் பயங்கர வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. அதனால் அரசு ஊழியர்கள் பெரும் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,கோவை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவ்வகையில் காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம்,இறப்பு வீடுகளில் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடு உள்ளிட்ட […]
ஒற்றைக்காலில் 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால் 10 வருடங்களில் உயிர் இழக்க கூடிய அபாயம் உள்ளது என புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை போன்றவற்றிற்கு இடையே தொடர்பு பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதன்படி கடந்த 2008ஆம் வருடம் ஆய்வு தொடங்கியது. ரியோ டி ஜெனிரோ சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ […]
தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் அபரிதமான வருமானத்தை தர உள்ளது. அதாவது ஜூலை 1 முதல் மத்திய அரசு தனது PPF மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு காலாண்டு தொடங்குவதற்கு முன்பும் சேமிப்புத் திட்டங்களில் வட்டி வீதங்களை மதிப்பாய்வு செய்து மத்திய நிதியமைச்சகம் […]
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மூலம் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் கடந்த 8.10.2021 அன்று கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது .அன்றைய தினம் முதல் இன்று வரை ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் […]
நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களுக்காக பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்தத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ கொண்டைக்கடலை மாதம்தோறும் வழங்கப்பட்டது. அந்தத் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்நிலையில் இந்த […]
உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வாகியுள்ளார். இது குறித்து 18 நாடுகளில் நடத்தப்பட்ட பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வின்படி, பலநாடுகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வெளிப்படுத்தவில்லை. இதில் சராசரியாக 90% மக்கள் உலக விவகாரங்களின் புதின் நடவடிக்கை மேற்கொள்ளகிறார் என்று தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 85% பேர் ரஷ்யாவைப் பற்றி எதிர்மறையான கருத்தை […]
பெங்களூரு ஜே.பி. நகரில் சுவாதி என்ற நடிகை வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன் சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். பிறகு சுவாதி முகம் […]
தமிழக முன்னாள் முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. அதாவது ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொறுப்பேற்றனர். அதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்து அதிமுக ஒன்றிய தலைமை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொளுத்தி போட என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பன்னீர்செல்வம் […]
தமிழகத்தில் கடந்த மாதம் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள், பள்ளிகள் மற்றும் மாவட்ட வாரியாக தயார் செய்யப்பட்டுள்ளன. எனவே ஜூலை 7ஆம் […]
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் சூர்யா -ஜோதிகா ஜோடி தங்களுடைய படங்களில் அசத்தி வந்தால், அவர்களுடைய மகள் தியா நடிப்பில் அசத்தியுள்ளார். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தியா மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தமிழ்-95, ஆங்கிலம்-99, கணிதம்- 100, அறிவியல்-98, சமூக அறிவியல்- 95 மதிப்பெண்கள் எடுத்து ள்ளதாக […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கொரோணா பிரச்சனை காரணமாக அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு அகவிலைப்படியை அரசு உயர்த்தியது. அதன்படி இறுதியாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் அரசு தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் […]
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீநிதி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது தோழியான நடிகை நட்சத்திராவின் திருமணம் தொடர்பாக ஸ்ரீநிதி சில விஷயங்களைப் பேசி வீடியோ வெளியிட்டார் . மேலும் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் குறித்தும், சிம்பு தொடர்பாகவும் சில சர்ச்சையான கருத்துக்களைப் பேசியும் வீடியோ வெளியிட்டார். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு […]
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பழைய பென்ஷன் திட்டம் அமலாகும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மிக முக்கியமான ஒன்று பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள cps எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் இதில் இழப்புகள் […]
பிரபல நடிகை அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் த்ரிஷாவின் சக நடிகையான நயன்தாராவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதன் காரணமாக 40 வயதை நெருங்கும் நடிகை திரிஷாவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் […]
நடிகை திரிஷா விரைவில் அரசியலில் இணைய உள்ளதாகவும்,இதற்காக தேசிய கட்சி ஒன்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்புள் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவிரைவில் ஒரு பெரிய தேசிய கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது பாஜகவா அல்லது காங்கிரஸா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை […]
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தினந்தோறும் விமர்சனம் செய்து வருகிறார். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகின்றார். மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்து […]
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பீஸ்ட். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டு இருக்கின்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]
பிரபல நடிகரின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்தின் 169-வது திரைப்படத்தின் தலைப்பு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரஜினியின் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதன்பின் பிரியங்கா அருள் மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நெல்சன் திலிப்குமர் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்புத் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். தல அஜித் தற்போது வினோத்தின் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை வலிமை திரைப்படத்தை தொடர்ந்து இயக்கி AK61 படத்தில் மூன்றாவது முறையாக அஜித் மற்றும் வினோத்தின் கூட்டணி இணைந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று வினோத்தும் நடிகர் அஜித்தும் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த படத்திற்காக அஜீத் […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பெண்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு தலீபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதே நேரத்தில் தலீபான் ஆட்சியில் பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பொதுமக்கள் இலக்காகி வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் […]
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது. […]
இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அடுத்த ஒன்றரை வருடங்களில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பக்கூடிய நடவடிக்கையில் மத்திய கல்வி அமைச்சகமும் திறன் மேம்பாட்டு துறையும் விரைவில் ஈடுபடும். அதன்படி உயர்கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா […]
2023-2027 ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ரூ.43,255 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவி ஒளிபரப்பு உரிமை ரூ.23,675 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.19,680 கோடிக்கும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. போராட்டத்துக்கான டிவி உரிமை ரூ.57.5 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.48 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.