சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்கள் ,அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
Tag: தகவல்
பிப்ரவரி மாதத்தில் மட்டும் வருங்கால வைப்பு நிதியில் 14 லட்சம் பேர் சேர்ந்திருப்பதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த பிப்ரவரி மாதத்தில் 14,12,000 நிகர சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கின்றனர். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்திருப்பதையும், வேலைவாய்ப்பு பெருகி இருப்பதையும் இது காட்டுவதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 9 லட்சத்து 52 […]
2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பகோரிக்கை வலுத்துள்ள நிலையில், கவர்னரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் மீண்டுமாக வழக்கம்போல் இயங்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடம் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 59 % அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் […]
சென்னை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 4 நாட்களுக்கு காட்பாடியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் (MGR Central Railway station) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, ஹைதரபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதேபோல், சென்னையில் இருந்து தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் இருந்து இன்டர்சிட்டி, சதாப்தி, […]
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்னதான் எதிர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்தாலும் வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது. படம் வெளியான இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் தற்போது இயக்கத்தின் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசை அமைக்கிறார். இதனை தொடர்ந்து […]
இறந்த பிறகும் இன்னும் பல ஆயிரக்கணக்கானோருக்கு பென்சன் செலுத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார் . கடந்த மார்ச் 30ஆம் தேதி மாநிலம் வங்கியாளர்கள் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார். தற்போது அந்த வீடியோவை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அரசுத் திட்டங்கள், மாநிலங்களில் தகுதியுள்ள பயனாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் பென்ஷன் வாங்குவோருக்கு அகவிலை நிவாரண உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17 […]
பீஸ்ட் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்னே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட் இல்லாததால், ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை முதல் பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. […]
போடா போடி படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கிய படம் நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ்க்கு இடையில் காதல் மலர்ந்தது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே நயன்தாரா மற்றும் விக்கி காதலிப்பதாக செய்திகள் வந்தது. இருப்பினும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சமூக தளங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் மூலம் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]
கோவை பாஜக எம்எல்ஏ வாக இருக்கும் வானதி சீனிவாசன் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக உள்ளார். அவருக்கு மேலும் ஒரு முக்கிய பதவி கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் அதி முக்கிய முடிவுகளை எடுப்பது கட்சியின் உயர்மட்டக் குழுவான மத்திய பார்லிமென்டரி குழு. பிரதமர் மோடி, துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் மொத்தம் 12 […]
உக்ரைனின் மிக முக்கிய துறைமுகமான மரியுபோலை கைப்பற்றுவதற்காக பலவாரங்களாக கடுமையான தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் சனிக்கிழமையான (நேற்று) அதன் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைன் ராணுவ படைகளை துடைத்து எறிந்து விட்டதாக கூறியுள்ளது. இது பற்றி ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில், அசோவ் கடலில் அமைந்திருக்கின்ற துறைமுகமான மரியுபோலின் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைனிய ராணுவ படைகளை அகற்றிவிட்டதாகவும், சில வீரர்கள் மட்டும் அசோவ்ஸ்டல் உலோக ஆலையில் தஞ்சம் அடைந்து […]
இதுவரை ”பீஸ்ட்” படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, வசூல் ரீதியாக இந்த […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்கிரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றது. அதே நேரம் இந்த போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு நேரில் சென்று அதிபரிடம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அல்லது துணை […]
கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான படம் கேஜிஎப். இந்தப் படம் வெளியாகும்போது எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் தான் வெளியானது. ஆனால் போகப்போக இந்தப் படம் ரசிகர்களை ஆட்கொண்டது என்னதான் சொல்ல வேண்டும். மிகவும் உணர்ச்சிகரமான வசனங்கள், அசாதாரண சண்டைக்காட்சிகள் என படம் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கேஜிஎப் இதனை தொடர்ந்து தற்போது மூன்று வருடங்கள் கழித்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. யாஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் […]
மேகாலயாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 58.61 விழுக்காடாகவும், நாகலாந்தில் 59.29 மெல் காடாகவும், உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேகாலாயாவில் ஆதார் அட்டைகள் பெற்றவர்கள் விகிதம் 2016- ல் 3.6% விகிதமும், 2020-ல் 30.6%, 2022- ல் 48.3 % சதவீதமாக இருந்தது. தற்போது அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டைகளை கட்டாயமாக்கப்பட்ட பின் ஆதார் அட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை 58.61% உயர்ந்துள்ளது. சமீப காலம் வரை, அரசு அளிக்கும் உதவிகள், நலத்திட்டங்களை […]
நடப்பு நிதி ஆண்டில் நுகர்வோர் விலை பணவீக்கம் 7 சதவீதமாக உள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் குறைந்தது நான்கு மடங்கு உயர வாய்ப்புள்ளது. ஜூன் மாத நிதிநிலை ஆய்வுக் கூட்டத்தில் முதற்கட்ட விலை உயர்வை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் 0.5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.2 சதவீதமாக இருக்கும் என பல்வேறு ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 5.7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. […]
அலுவலக பணியில் இருந்து பெண்கள் அதிகமாக வெளியிடுவதன் காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு ஈடாக அனைத்து துறைகளிலும் பெண்களும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நிறைய இடங்களில் பெண்கள் தான் தலைமை பொறுப்பில் இருக்கின்றனர். குடும்பத்தை மட்டுமல்லாமல் செய்யும் தொழிலையும் அவர்கள் சார்ந்த ஊழியர்களையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என நிரூபித்து இருக்கின்றனர். இந்த நிலையில் பெண் ஊழியர்கள் பற்றி அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது பெண் ஊழியர்கள் […]
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன்களை சென்னை ஃபாக்ஸான் தொழிற்சாலையில் தொடங்கவுள்ளது. மிக அழகான டிசைன், அதிநவீன கேமரா, ஏ15 பயோனிக் சிப் ஆகிய அம்சங்கள் கொண்ட ஐபோன் 13 இந்திய உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக சென்னையில் உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 12 ஆகியவற்றை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்தது. ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 12-ஐ இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் உற்பத்தி […]
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில்,அந்த அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (11.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கன […]
நடிகர் அஜித் படத்தை அடுத்து நடிக்க உள்ள 61-வது படத்தை எச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப குழுவினரின் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒளிப்பதிவு – நிரவ்ஷா, இசை -ஜிப்ரான், எடிட்டர்-விஜய் வேலு சுட்டி, ஸ்டண்ட் -சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்பராயன் மற்றும் பல்வேறு பணிகளுக்கான பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இன்று படப்பிடிப்பு தொடங்க உள்ள […]
கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது அதிக அளவு மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் மின்சார வாகனங்களின் விற்பனையும் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி 2021 -2022 ஆம் ஆண்டு மொத்தம் 4,29,000 மின்சார […]
அந்தமான் நிகோபார் தீவில் 2 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கம் மையம் அறிவித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 7.02 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் நிகோபர் தீவில், கேம்ப்பெல் பே […]
தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருசிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வியை சந்திக்க தற்போது கட்டாய வெற்றியை எதிர்நோக்கி கொண்டிருக்கிறார் தனுஷ். தனுஷ் தற்போது நடித்து வரும் படங்களின் மீது அதிக நம்பிக்கை வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் வாத்தி படத்தின் மூலமாக நேரடி […]
ஓமைக்ரான் எக்ஸ்இ மரபணுவின் பகுப்பாய்வு நடந்து வருவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொரோனா வைரஸின் எக்ஸ்இ எனப்படும் புதிய மாறுபாடு ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் கலப்பு என்று கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் […]
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறைந்ததன் காரணமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் எக்ஸ்இ வகையான தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அது அதிவேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு எக்ஸ்இ வகையான தொற்று […]
‘வலிமை’ படம் இதுவரை செய்த மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த படம் ரிலீசாகி 43 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை செய்த மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த […]
தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர நடை பாதை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடை பாதை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் […]
மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குனருமான ஸ்ரீனிவாசன் சில நாட்களுக்கு முன்பே இருதயத்தில் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் வெண்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் விரைவில் குணமடைந்து வீடு […]
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டகர் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்த படத்தில் மலையாள நடிகர் மற்றும் […]
ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Nancy Faeser கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியிலிருந்து 15 வன்முறை செயல்கள் உள்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரஷ்யர்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு எதிரான […]
நடிகர் வினய் பிரபல நடிகையை காதலித்து வருவதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் வினய். இதனையடுத்து வினை மோதிவிளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் துப்பரிவாளன் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். அவரது உயரத்திற்கும், தோற்றத்திற்கும் வில்லன் வேடம் செய்த காரணத்தினால் தொடர்ந்து வில்லன் வேடத்தில் […]
விஜயின் பீஸ்ட் பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியான பீஸ்ட் படத்தின் டிரைலர் குறித்த பேச்சுக்கள் தான் இன்னும் இணையதளம் முழுவதும் நிரம்பி வழிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான […]
தமிழ் சினிமா உலகில் விஜய் டிவி மூலமாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் டாப் டென் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார். மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரானார். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு […]
ரஷ்யாவின் அடுத்தகுறி தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையில் போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைக் […]
ராஷி கண்ணாவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. இவர் இமைக்காநொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து அரண்மனை3, அடங்கமறு, அயோகியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தற்போது இவர் சர்தார், மேதாவி, போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இவரின் முழு சொத்து […]
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது வீட்டு வாடகை சலுகையும் உயர்கின்றது. நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உள்ளது. அகவிலைப்படியை உயர்த்திய பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி கிடைக்கும். அதன்படி அகவிலைப்படியுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை படி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் வீட்டு வாடகை சலுகை அதிகரிக்கலாம் என்று தகவல் […]
நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள் முளைத்து இருந்தது குறித்து சரியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நியூஸிலாந்து நாடாளுமன்றத்தின் ரோஜா தோட்டத்திற்கு நடுவே சில இடங்களில் கஞ்சா செடிகள் முளைத்திருந்ததால் சர்ச்சைகள் எழுந்துள்ளது. அது எப்படி அங்கு முளைத்தது என மக்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்த சரியான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. நியூஸிலாந்து பாராளுமன்ற பகுதியே சுமார் ஒரு வாரமாக ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்கள் விட்டுச்சென்ற கஞ்சாவில் இருந்து விழுந்த விதைகள் மூலமாகத்தான் இந்த செடிகள் […]
ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் அடிக்கடி மருத்துவர் ஒருவர் காணப்படும் நிலையில், புடினுக்கு என்ன உடல்நலப் பிரச்சினை என கேள்வி எழுந்திருக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணரான yevgeny selivanov மருத்துவர் புடின் வீட்டிற்கு குறைந்தபட்சம் 35 தடவை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் தைராய்டு மற்றும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆவார். ரஷ்ய ஊடகம் ஒன்றில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. அந்த ஊடகம் தற்போது […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 01.04.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 02.04.2022 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி […]
மின்சார வாகனங்களின் விலை பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இன்றைய நவீன உலகில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் தனிமனித அந்தஸ்து அடையாளமாக கருதப்படும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் மாற்று எரிசக்தி போன்றவற்றை கருத்தில் கொண்டு தற்போது பயன்பாட்டில் […]
விரைவில் ‘செம்பருத்தி’ சீரியல் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ”செம்பருத்தி”. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கார்த்திக் ஷபானா இருவரும் ஆரம்பத்தில் ஜோடியாக நடித்தனர். சில வருடங்களுக்கு முன்னரே கார்த்திக் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். […]
அஜித் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவரின் 61வது படத்தை இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும், இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் […]
காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் (WHO) காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை. தென்னிந்தியாவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ளது. மேலும் இந்திய அளவில் […]
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியானது இன்று முதல் 27 தேதி வரை அந்நாட்டின் பாசெல் நகரில் வைத்து நடக்கவுள்ளது. இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்.எஸ்.பிரனாய், காஷ்யப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆகார்ஷி காஷ்யப், ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையடுத்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, துருவ் […]
ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளின் pm-kisan இன் 11 வது தவணை வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் இப்போது பிஎம்கிசான் திட்டத்தின் 11 வது தவணைக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திட்டத்தின் பத்தாவது தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விதிமுறைகளை சென்ற ஆண்டில் மத்திய அரசு மாற்றியிருந்தது. அதன்படி விவசாயிகள் இப்போது பதினோராவது தவணைக்கு e-Kyc வேலையை முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது. விரைவில் 11வது அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. e-KYC இல்லாவிட்டால் […]
அதிக குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம் தொடங்கியுள்ளது. அப்போது திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் செயல் குறிப்பு அரசிடம் இருக்கிறதா? என செல்வராஜ் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஐ பெரியசாமி, திருப்பூரில் 30 நியாயவிலை கடைகள் இயங்கி வருகிறது. திருப்பூரில் 3 முழு நேர கடைகள் […]
கடந்த டிசம்பர் மாதம் முதல் 2021 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மட்டும் 28,540 ஏடிஎம்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 27,945 ஏடிஎம்கள் உள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில்23,460 ஏடிஎம்கள் உள்ளதாகவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.