பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் ஒரு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி தமீம் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. இந்த விடுதியின் மீது கடந்த 26-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் ஒரு மேஜை தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி […]
Tag: தங்கும் விடுதி
சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், சீனியர் என்ற முறையில் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன். மாநில கல்லூரியில் கலைஞர் பெயரில் 2000 பேர் அமரக்கூடிய அரங்கம் அமைக்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாநில கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தங்கும் விடுதியில் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதுப்பேட்டையில் உழவர்சந்தை அருகில் ஒரு தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. இந்த தங்கும் விடுதிக்கு வாலிபர் ஒருவர் பெண்ணுடன் வந்தார். அவர்கள் தாங்கள் வெளியூர் என்றும் இரவு நேரம் ஆகியதோடு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தங்குவதற்கு அறை வேண்டும் என விடுதி மேலாளரிடம் கேட்டனர். இதனையடுத்து தங்கும் விடுதி மேலாளர் அருள் என்பவர் […]
சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் ரயில் நிலையம் அருகில் தனியார் தங்கும் விடுதி வசதி இருக்கின்றது. அந்த விடுதியில் கடந்த 27-ஆம் தேதி புங்கவாடி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் ஜெயசீலன் இரவு வழக்கம்போல் அறையின் கதவை பூட்டிக்கொண்டு உறங்கியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஜெயசீலன் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் […]
தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வாரம் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். இதனால் ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் களைக்கட்டியுள்ளது. நட்சத்திர ஏரிகளில் படகு சவாரி செய்தும், ஏரி சாலைகளை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை […]
தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற நகரில் நேற்றுமுன்தினம் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற நகரில் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை உடைத்து சமையலறைக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உப்பு மிகுந்த தின்பண்டங்களை சாப்பிட்டுள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
கனடாவில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வன்கூவர் பகுதியில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதி ஒன்றில் மார்ச் 30ஆம் தேதியன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள இரண்டு தங்கும் விடுதியில் தீப்பற்றி எரிந்ததுள்ளது. இதனால் அங்கு இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்கும் […]
பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Southall என்ற பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இவ்விடுதியில் பணம் செலுத்தி மக்கள் இரவு நேரங்களில் தூங்குவர். இந்நிலையில் இவ்விடுதியில் பெயிண்ட் அடிப்பதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அதனை திறந்து பார்த்த அவர் அதனுள் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் […]