முறையான சிகிச்சை அளிக்காததால் தன் வலது காலை இழந்த பேருந்து ஓட்டுனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் மேலத்தெருவில் வசித்து வரும் ஜோதி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜோதிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. […]
Tag: தஞ்சாவூர் மாவட்டம்
குப்பை அள்ளுவது போல நடித்து 19½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் மர்மநபர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த 19½ பவுன் நகை மற்றும் பணத்தை கடந்த 9-ஆம் தேதி திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவம் […]
ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 5 வாலிபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செய்வது தொடர்ந்து வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் தலைகவசம் அணியாமல் பைக் ரேஸ் செய்வதால் விபத்தில் பலரும் உயிரை இழக்கும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு […]
தஞ்சாவூர் மாவட்டம் தென்னூர் அருகே தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரையிலான சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னூர் பகுதியில் சாலை வளைவாக இருந்தது. இந்த சாலையை நேராக மாற்றி விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விரிவாக்க பணியின் போது சாலையில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் சாலையின் நடுவே வைத்துவிட்டு தார் சாலை போட்டிருக்கின்றனர். இந்த மின் கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் […]
அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி அருகே விளாங்குளம் கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிராம நிர்வாக உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பூமிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காட்டாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இதனால் பூமிநாதனுக்கும் பட்டங்காட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு […]
விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணை அமைந்துள்ளது. இங்கு நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் காவிரி போன்றவைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை பார்த்து ரசித்தனர். அதோடு கல்லணையில் உள்ள தண்ணீரை பார்த்து ரசித்த பொதுமக்கள், கரிகாலன் மணிமண்டபம், கரிகாலன் மண்டபம், கரிகாலன் பூங்கா போன்றவற்றையும் பார்த்து ரசித்தனர். இதனையடுத்து சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு சாதனங்களில் […]
விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் அருகே கீழ்க்குறிச்சி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன், நரசிம்மன் மற்றும் இளையராஜா என்ற 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் கரிகாலன் குடும்பத்துடன் சிங்கப்பூரிலும், நரசிம்மன் மன்னார்குடியிலும், இளையராஜா தன்னுடைய தந்தையுடன் தங்கி விவசாயமும் செய்து வந்துள்ளார். இதில் பன்னீர்செல்வம் தன்னுடைய மகன்களுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்த நிலையில், இளையராஜா தன்னுடைய சொத்து மற்றும் நரசிம்மனுக்கு சொந்தமான ஒரு பம்பு […]
திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 55-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் அனுமதிக்க படாததால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்நிலையில் ஸ்ரீநகர் காலனி அருகே […]
தொடர் மழையின் காரணமாக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏராளமான அணைகள் நிறைந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் கல்லணைக்கு திறக்கப்படுகிறது. இங்கிருந்து காவிரிக்கு வினாடிக்கு 7503 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாய்க்கு வினாடிக்கு 2608 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றிற்கு 8,703 கன அடி தண்ணீரும், […]
பண மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில் தமமுக ஒன்றிய பிரமுகரான ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம்பி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் கோபால், முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையனின் மகன் குகன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் குகன் ஆனந்தனிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 விரிவுரையாளர் மற்றும் 2 அலுவலக உதவி பணியாளர் […]
இடப்பிரச்சினை காரணமாக கூலித்தொழிலாளியை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தகொல்லைமேடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான பிரபு மற்றும் சின்னராசு என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரபு மற்றும் சின்னராசுவை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி […]
கனமழை பெய்ததால் வீடு இடிந்து விழுந்து பெண் பலியான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மருவூர் காலனி தெருவில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி என்ற மகளும் சுப்ரமணியன் என்ற மருமகனும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த 1991 – ஆம் ஆண்டு இவர் […]
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]
விவசாயத்தை முழுமையாக நம்பி உள்ள பாபநாசம் தண்ணீர் பஞ்சம் இன்றி முப்போகம் விளையும் தொகுதி ஆகும். காவிரி, கொள்ளிடம், குடஉருட்டி உள்ளிட்ட ஆறுகள் நிறைந்த வளமான இப்பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது. உலோக சிலைகள் தயாரிப்பு, மரத்தாலான தேர்கள் தயாரிப்பு, பாய் தயாரிப்பு மற்றும் நெசவுத் தொழிலும் நடைபெறுகிறது. பாபநாசம் தொகுதியில் திமுக ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிகமாக காங்கிரஸ் 8 முறையும், தமிழ் மாநில […]
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு தொகுதியில் நெல், தென்னை, கரும்பு ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் விவசாய பூமியாகும். தொகுதியின் பிரதான நீராதாரமாக 90 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லணை கால்வாய் உள்ளது. ஒரத்தநாடு தொகுதியில் 6 முறை திமுகவும், ஐந்து முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை காங்கிரஸ் கட்சி தொகுதியை கைப்பற்றியுள்ளது தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ. திமுகவின் எம். ராமச்சந்திரன். ஒரத்தநாடு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,43,014 ஆகும். ஒரத்தநாடு தொகுதியில் விவசாயமே பிரதான […]
திருவிடைமருதூர் கோவில்கள் நிறைந்த தொகுதியாகும். மகாலிங்கேஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளன. நவகிரக தலங்களான சூரியனார் கோவில், அக்னீஸ்வரர் ஆலயம் போன்றவையும் இங்கு உள்ளன. தொகுதியின் முக்கிய தொழில்களாக விவசாயமும், கைத்தறி பட்டு நெசவுத் தொழிலும் உள்ளன. பட்டுப் புடவைகளுக்கு புகழ்பெற்ற திருபுவனம் இங்குதான் உள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் 1977 முதல் இதுவரை நடைபெற்ற 10 தேர்தல்களில் 6 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் […]
தஞ்சை மாவட்டத்தின் திருவையாறு தொகுதி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் வாழ்ந்த தொகுதியாகும். சுற்றிலும் காவிரி, குடமுருட்டி, கொள்ளிடம், வெண்ணாறு, ஆகிய ஐந்து ஆறுகள் இருப்பதால் திருஐந்துஆறு திருவையாறு என பெயர்பெற்றது. வாழை, கரும்பு, தோட்டக்கலை பயிர்கள் இப்பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. திருவையாறு தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ திமுகவின் துரை சந்திரசேகரன் உள்ளார். தொகுதியின் மொத்த […]
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் தான் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை. மொழிப்போர் தியாகி அழகிரிசாமியின் ஊரும் இதுதான். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் பிறந்த ஊரும் பட்டுக்கோட்டை. இந்த தொகுதியில் நெல் மற்றும் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பட்டுக்கோட்டையில் உள்ள நாழியம்மன் கோவில் புகழ் பெற்றதாகும். பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 3 முறையும், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி […]
தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணி விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து உள்ள தொகுதியாகும். இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட மனோரா கோட்டை இப்பகுதியின் சிறப்புமிக்க அடையாளமாக திகழ்கிறது. இங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் புகழ் பெற்றதாகும். பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள்2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக, தேமுதிக கட்சிகள் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. பேராவூரணியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி […]
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய வணிக நகரமாக திகழும் கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. தொன்மையான சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் அதிகளவில் அமைந்துள்ளன. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள், பஞ்சலோக விக்ரகங்கள் தயாரிக்கும் பணிகள் இங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பகோணத்தில் வெற்றிலையும், டிகிரி காபியும், பட்டு சேலைகளும் தனிசிறப்பு உடையவை ஆகும். கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 6 முறையும், […]
காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன்மையான நகரம் தஞ்சாவூர். மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியெழுப்பிய பெருவுடையார் கோவில், சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை ஆகியவை தஞ்சாவூரில் தனிச் சிறப்புகளாகும். தஞ்சையின் தனிப்பெரும் அடையாளமாக தமிழ் பல்கலைக்கழகம் திகழ்கிறது. 1951ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற கலைஞர் எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார். திமுக […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பூண்டி மாதா ஆலயம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு திருமண மண்டபத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சதீஷ் […]
அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மோனலிசா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். வினோத் அரசு பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவர் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பணியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழக நேர காப்பாளர் பணிக்கு மாற்றப்பட்டார். இதனால் வினோத் மன அழுத்தத்தில் இருந்து […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபுதேவா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபுதேவா தனது டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் சென்ற 6 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபுதேவா தனது காதலியுடன் தனக்குத் […]
கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி ஐயன் பெருமாள் கொத்தன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீடு பூட்டிக்கிடந்துள்ளது. ஆதலால் அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். […]
குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் சுரேஷ் என்று திருமணம் ஆகாத இரு மகன்கள் இருக்கிறார்கள்.தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வரும் கார்த்திகேயன் தினமும் குடித்துவிட்டு வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து நேற்றும் கார்த்திகேயன் குடித்துவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தம்பி சுரேஷ் அண்ணனை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த […]
தஞ்சாவூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாத 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நோய்க்கான தாக்கம் இல்லாத பட்சத்தில் அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளனர். இதனிடையே நோய் தொற்று பரவ காரணமாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுவை சேர்ந்த முத்துகண்ணு, வெள்ளைச்சாமி, சிவக்குமார் ஆகியோர் […]
முதல் கணவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி விவகாரத்து பெற்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரான 25 வயது வில்லிங்டன் கிறிஸ்டோபர் என்பவரை […]