Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மதகில் சிக்கிக் கொண்ட இளைஞர்… தேடுதல் பணி தீவிரம்..!!!

கொள்ளிடம் ஆற்று மதகுப் பகுதியில் சிக்கிய வாலிபரை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே இருக்கும் திருவைகாவூர் தெற்கு தெருவில் வசித்து வரும் ரவி என்பவரின் மகன் தினேஷ். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றிருக்கின்றார். அப்போது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை பார்த்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்றார். இதில் தினேஷ் மதகு பகுதியில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை ஊராட்சியில்… பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.. தலைமைதாங்கிய கூடுதல் ஆட்சியர்..!!!

பட்டுக்கோட்டை ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், சாமிநாதன், உதவி என்ஜினியர் சத்திய பாமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை அடுத்து கூடுதல் ஆட்சியர் பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை… உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..!!!

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகப் பிரியா என்பவர் எம்பிஏ முடித்திருக்கின்றார். இவரும் ரவிச்சந்திரன் என்பவரும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றார்கள். அங்கு பெண்கள் பிரிவுக்காக நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் லோகபிரியா தங்கப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் கிராம மக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை ரயில் நிலையத்திற்கு வயது 162…. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!!!

தஞ்சை ரயில் நிலையத்திற்கு 162-வது வயது ஆரம்பித்ததால் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தஞ்சை ரயில் நிலையத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும் 7 ரயில்வே பாதைகளும் இருக்கின்றது. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் ரயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்…. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு…!!!

கபிஸ்தலம் அருகே இருக்கும் தனியார் சர்க்கரை ஆலை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயி நாக முருகேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பின்வருமாறு, கபிஸ்தலம் அருகே இருக்கும் திருமன்றங்குடி தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நசுவினி அணையை விரிவு படுத்த வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை… உறுதியளித்த உதவி ஆட்சியர்…!!!

நசுவினி அணையை விரிவுபடுத்தி பாசன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தஞ்சை உதவி ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சத்தியசாமி மற்றும் விவசாயிகள் நசுவினி ஆற்றில் இருக்கும் அணையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து உதவி ஆட்சியர் அணையை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விதை நிலக்கடலையை மானிய விலையில் அரசே வழங்க வேண்டும்… விவசாயி கோரிக்கை..!!!

மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்து இருக்கின்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்தார்கள். அப்போது சிவவிடுதி ராமசாமி என்பவர் கூறியுள்ளதாவது, காடுவெட்டி விடுதி, சிவவிடுதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விருத்தாச்சலத்தில் காணாமல் போன மோட்டார் சைக்கிள்… நாகையில் ஓட்டும் போலீஸ்காரர்… டிஐஜி-யிடம் புகார்..!!!

விருத்தாச்சலத்தில் திருட்டு போன மோட்டார் சைக்கிளை நாகையில் இருக்கும் போலீஸ்காரர் ஓட்டி வருகின்றார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அருகே இருக்கும் வேட்டைகுடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தஞ்சை சரக டிஐஜியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2018 ஆம் வருடம் ஜூலை 7ஆம் தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டி வந்த நிலையில் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் 10ஆம் தேதி விருத்தாச்சலத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தஞ்சாவூர் மாநகரில் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொது மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து நேற்று மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி போன்றோரிடம் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தஞ்சையில் 2ஆம் உலகப்போரின்போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது. இங்கு இருந்து முன்னதாக பயணிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் தொங்கியப்படி பயணம்…. நடவடிக்கை எடுப்படுமா…? மக்களின் எதிர்பார்ப்பு…!!!!

கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதுபோல பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, வல்லம் போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடேடே..! தஞ்சை ஹாஸ்பிட்டலில் சூப்பரே.. அறிமுகமான புது மெஷின்..!!

உலக அளவில் செயற்கை உறுப்பு பொருத்தல் மற்றும் மாற்றுத் திறனர் உதவிக் கருவி தினமானது நேற்று தான் கொண்டாடப்பட்டது. அதன்படி இந்த தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு செயற்கை அவைய துணை நிலையத்தில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கை, கால்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியினை முதல்வர் பாலாஜி நாதன் முதலில் இயக்கிய வைத்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மது போதையில் தகராறு செய்த தம்பி”… “அடித்துக் கொன்ற அண்ணன்”… போலீசார் விசாரணையில் வெளியான பல தகவல்….!!!

மது போதையில் தகராறு செய்த தம்பியை  அவரின் அண்ணன் அடித்து கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் புளியம்பட்டி குருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த வைரப்பன் என்பவர் சிற்ப தொழிலாளி. இவரின் மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீரப்பன் கீழே தவறி விழுந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“400 வருடங்களைக் கடந்த தஞ்சை பீரங்கிமேடு”…. மும்முரமாக நடந்து வரும் சீரமைக்கும் பணி…!!!!!

21 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தஞ்சை பீரங்கி மேடு புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோவில் இருக்கின்றது. தஞ்சையில் ஆசியாவின் பழமையான நூலகமான தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம், ஆயுத கோபுரம் உள்ளிட்ட பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள் இருக்கின்றது. இந்த வரிசையில் ராஜகோபால் பீரங்கியும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பீரங்கி தஞ்சைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். எப்போதும் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் இது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விடிய விடிய ஆற்றுக்குள் இறங்கி நின்ற ஆசிரியையால்…. தஞ்சையில் பெரும் பரபரப்பு….!!!!

தஞ்சை மாவட்டத்தில் பள்ளியக்ரஹாரம் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு வெண்ணாற்றங்கரைக்கு அருகே ரேவதி நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் திடீரென ஆற்றுக்குள் இறங்கி வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார். இதனை கண்டதும் வழியாக சென்றவர்கள் அவரை வெளியே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் வெளியே வர மறுத்துள்ளார். இது குறித்து அவருடைய குடும்பத்திற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எந்திரத்தை சிறைபிடித்த விவசாயிகள்…. புறவழிச்சாலை அமைக்க தொடர் எதிர்ப்பு…. தஞ்சையில் பெரும் பரபரப்பு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு பகுதியில் தியாகராஜர் சமாதி மற்றும் புகழ் பெற்ற கோவில்கள் அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு செல்வதற்கான சாலைகள் மிக குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் கண்டியூர் போன்ற பகுதிகளிலும் சாலை குறுகலாக இருப்பதினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து திருவையாறு கண்டியூர் பகுதிகளில் அரசூரில் இருந்து விளாங்குடி வரை சாலையை இணைக்கும் வகையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்…. ஆய்வுப் பணியில் கலெக்டர்….!!!!

வடிகால் உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை நேற்று மாலை சுமார் 3:30 மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. இதனால் கொடி மரத்து மூளை பகுதியில் இருக்கும் அகழியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வடியும் தண்ணீர் வடிகால் மூலம் வடவாற்றிற்கு சென்று சேரும். இந்த நிலையில் வடிகாலில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறி நூற்றுக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருச்சி-அகமதாபாத் வாரந்திர புதிய ரயில்”…. சிறப்பான வரவேற்பு…!!!!!

திருச்சி-அகமதாபாத் வாரந்திர புதிய ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு மெயின் லைன் வழியாக ரயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மும்பை, தஞ்சை வழியாக அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு ரயிலானது தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

Just In: மேலும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  அதன்படி கனமழை எதிரொலியால் புதிதாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்”… போதிய பேருந்து இல்லாததால் அலைமோதிய கூட்டம்…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்காக டெல்டா மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனால் மக்கள் புதிய பேருந்து நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கும்பகோணம் கடை வீதிகளில் குவிந்த மக்கள்”…. வட மாநில விற்பனையாளர்களின் ஆடைக்கு ஆர்வம்….!!!!!

கும்பகோணத்தில் புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கும்பகோணத்திற்கு வந்தார்கள். இதனால் கும்பகோணம் நகர் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் சூழ்ந்தது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுவடை செய்யப்பட்ட நெல்… “மழையில் நினைந்ததால் விவசாயிகள் கவலை”… கோரிக்கை…!!!!!

அறுவடை செய்த நெல் மழையில் நனைந்ததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு வருட சாகுபடி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்களில் இதுவரை 85 சதவீதம் அறுவடை பணி நிறைவடைந்து இருக்கின்றது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அறுவடை செய்ததில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கொள்ளிடம் 35 மதகுகளும் திறப்பு”….. ஆறு கடல் போல காட்சி….!!!!

கொள்ளிடம் 35 மதகுங்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் கல்லணையில் இருக்கும் 35 மதகுகளும் திறக்கப்பட்டு 57 ஆயிரத்து 675 கன அடி நீர் வெளியேறுகிறது. இதனால் கல்லணை கொள்ளிடம் பாலத்தின் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பாதி அளவு மூழ்கி நிலையில் இருக்கின்றது. கொள்ளிடம் புதிய பாலத்தில் இருந்து பார்க்கும்போது கொள்ளிடம் ஆறு கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று மாலை நிலவரப்படி கல்லணை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த…. “தஞ்சையில் 2 1/2 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்….!!!!!!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இரண்டரை கோடி மதிப்பில் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் 2 கோடி 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போலி சான்றிதழுடன் மருத்துவம் பார்த்த சித்த வைத்தியர்”…. அதிரடியாக கைது செய்த போலீசார்….!!!!!

போலி சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்து வந்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அத்திவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த தென்னரசு என்பவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய மகன் நேசன். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததால் எனது மகனை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் பாரம்பரிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பட்டுக்கோட்டையில் 12ம் தேதியிலிருந்து இதை பயன்படுத்தக் கூடாது”…. நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்…. ஆணையர் அறிவிப்பு….!!!!!!

தஞ்சையில் வருகின்ற 12ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும் என ஆணையர் சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் உடனான பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பேசும்போது கூறியதாவது, அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றோம். அனைத்து விற்பனை மண்டலங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்வு”…. பயணிகள் அவதி….!!!!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தஞ்சையின் மையப் பகுதியில் தஞ்சை ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருக்கும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் கொரோனா காலத்தில் ஐம்பது ரூபாயாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான…. ஆக்கிரமிக்கப்பட்ட 5 கோடி நிலங்கள் மீட்பு….!!!!!

தஞ்சை அருகே இருக்கும் கத்தரிநத்தம் கிராமத்தில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் கந்தரி நத்தம் ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலஹஸ்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமாக 56.61 ஏக்கர் விளை நிலங்கள் இருக்கின்றது. 20 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த விளைநிலங்களை அதிகாரிகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் தங்க நகையை தவறவிட்ட பயணி… “கண்டக்டரின் நேர்மையான செயல்”…. குவியும் பாராட்டு…!!!!!

பேருந்தில் தங்க நகையை தவறவிட்ட பயணியிடம் பத்திரமாக தங்க நகை கொடுத்துள்ளார் கண்டக்டர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து விரைவு பேருந்து சென்னைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் சென்னையிலிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தது. இதன் பின்னர் இந்தபேருந்தில் கண்டக்டராக பணியாற்றும் உதயகுமார் என்பவர் பேருந்தை சோதனை செய்ததில் இரண்டு பவுன் தங்கச் சங்கில் கிடந்துள்ளது. இதன் பின்னர் அவர் அதை எடுத்து பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றார். இந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

துக்க அனுசரிப்பு…. “அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி”…..!!!!!

ராணி எலிசபெத் மறைவிற்கு அரை கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சென்ற மாணவர்கள்”…. ஆற்றில் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!!!!!

ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லை காடு கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ் என்பவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் அப்பகுதி வாலிபர்களுடன் சேர்ந்து சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார்கள். இதன் பின்னர் அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். இதில் நிதிஷ் ஆற்றில் மூழ்கினார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட…. “10 1/2 டன் பறிமுதல்”…. என்ன தெரியுமா…?????

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 10 1/2 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமை பொருள் வளங்கள் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை  சோதனை செய்ததில் நெல்மூட்டைகள் இருந்தது. அப்பொழுது போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தார்கள். அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் வெற்றிமணி, நாகமங்கலத்தைச் சேர்ந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்”…. போலீசார் விசாரணை…!!!!!

வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே இருக்கும் பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் செந்தில்குமார் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் தந்தை அதே பகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்தார்கள். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட கோவில் பூசாரி”…. போலீசார் விசாரணை….!!!!!

பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோவில் பூசாரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே இருக்கும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவில் இருக்கின்ற நிலையில் இக்கோவிலுக்கு மதுவூர் பகுதியை சேர்ந்த பூசாரி ஒருவருக்கு தங்குவதற்காக கிராம மக்கள் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் அவர் அங்கு தங்கி மக்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்திருக்கின்றார். அவ்வாறு வரும் பெண்களிடம் தங்க புதையல், பண புதையல் என […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: தஞ்சை ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு ரத்து – நீதிமன்றம் புது உத்தரவு

ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொலை வழக்கில் பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் போன்றவை உள்ளன. கும்பகோணத்தில் உள்ள சென்னியமங்கலத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியில் வரும் 10-ம் தேதி மின் நிறுத்தம்”….. உதவி செயற்பொறியாளர் தகவல்…!!!!!!

தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதிகளில் வரும் பத்தாம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது என உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் வரும் 10-ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லிதோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பணங்காடு, எடவாக்குடி, யாகப்பாசாவடி, அம்மாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்ட விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள்’…. கடைகளின் உரிமையாளர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம்….!!!!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்  விற்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர் முதன்மை செயலாளர் ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரின் ஆணையின்படி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட பொழுது சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்துக் கொலை”…. வாலிபர் கைது…!!!!!

முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்து இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுரேஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு வாசலில் நேற்று காலை 9 மணியளவில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை அடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை-விக்கிரவாண்டி புதிய புறவழி ச்சாலை”…. 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம்…..!!!!!

தஞ்சை-விக்கிரவாண்டி இடையிலான புதிய சாலையில் ஆயிரம் மர கன்றுகள் நடும் திட்டத்தை வன அலுவலர் தொடங்கி வைத்தார். தஞ்சை- விக்கிரவாண்டி இடையே புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் இந்த சாலையில் ஒரு பிரிவாக தஞ்சை அடுத்துள்ள சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் இருந்து தொடங்குகின்றது. இந்தநிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வரை 30 கிலோமீட்டர் தூரம் செல்கின்றது. இந்நிலையில் புதியதாக அமைக்கப்படும் இச்சாலையில் இருபுறமும் மரக்கன்று நட நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடக்கழிவுகளை சாம்பலாக்கும் கருவி…. “1 கோடி ரூபாய் மதிப்பில் தஞ்சை மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது”….!!!!

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திடக்கழிவுகளை சாம்பலாக்கும் கருவி தஞ்சை அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கழிவு பொருட்களை சுத்திகரிக்கும் நவீன கருவியானது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக ரூபாய் 75 லட்சம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி சார்பாக 25 லட்சம் கொடுக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை 300° […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“படிப்பிற்கு வயது ஓர் தடையில்லை” 68 வயதிலும்….. இத்தனை சாதனைகளா….? அசத்தும் முதியவர்…..!!!!

தஞ்சையை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் வழக்கறிஞருமான 68 வயதான ராமமூர்த்தி என்பவர் நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளார். படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளார். அதாவது 28 டிகிரி முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நீட் தேர்வு எழுதுவதின் மூலம் தனது நீண்ட கால ஆசையான டாக்டராக வேண்டும் என்ற கனவுக்கு தொடர்ந்து வெளிச்சம் கொடுத்து வருகிறார். இளைஞர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆத்தாளூரில் வீரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழா…. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்…!!!!!

ஆத்தாளூரில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆத்தாளூரில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் பல சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த நிலையில் சென்ற ஐந்தாம் தேதி கோவில் திருவிழாவானது காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் மது எடுத்தல் மற்றும் தேரோட்டம் நடந்தது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் முக்கிய வீதி வழியாக மாலை 6:30 மணிக்கு மீண்டும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சாலை மறியல்”….. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!!!

கும்பகோணம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களின் ஏழ்மை நிலைக் கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 2016 ஆம் வருடம் முதல் போராடி வருகின்றார்கள். இது பற்றி அதிகாரிகளிடமும் கோரிக்கை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஜாமினில் வெளிவந்த ரவுடியை வெட்டி கொலை செய்த 2 பேர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

ஜாமினில் வெளிவந்த ரவுடியை இரண்டு பேர் ஓடு ஓடி வெட்டி கொலை செய்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருக்கின்றது. மேலும் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் இவர் துலுக்கம்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற பொழுது இவருக்கும் இவரின் உறவினர்களான நடராஜன், ஜோதிராஜன், சிவக்குமார் உள்ளிட்டோருக்கிடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சையில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் நெல்”…. அரவைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டது….!!!!!

தஞ்சையிலிருந்து சென்னைக்கு அரவைக்காக 2000 டன் நெற்கள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெற்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்படுகின்றது. பின் அரவை செய்யப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்களில் இருந்து 2000 டன் நெல் 240 லாரிகளில் தஞ்சாவூர் ரயில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை”…. அறிவிப்பு பலகை வைத்த தொல்லியல்துறை…!!!!

தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. தஞ்சையில் உள்ள புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கிபி 1010 வருடம் கட்டப்பட்டது. கட்டிடக்கலைக்கு பெயர் போன இக்கோவில் தற்போது மத்திய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் கோவில் சுவற்றில் பல்வேறு சுவரொட்டிகள் ஓட்டுவது விளம்பர பேனர்கள் கட்டுவது போன்ற செயல்கள் நடந்து வந்த நிலையில் தொல்லியல் துறை கோட்டைச் சுவரில் விளம்பரங்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்றுகொண்டிருந்த கார்…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

ஓடும் காரில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஆபிரகாம் பண்டிதர் என்னும் நகரை சேர்ந்தவர் அசார். இவர்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்  தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவருடன் சேர்ந்து 5 பேர் பயணம் மேற்கொண்டனர். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் கணபதி நகர் அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென அதிக அளவில் புகை […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 11 ஆம் தேதி…. இளைஞர்களுக்கு முக்கியமான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வருகிற ஜூன் 11ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பூட்டிய வீட்டுக்குள் நான்கு நாட்களாக தவித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்”…. ஆட்சியர் நடவடிக்கை…!!!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பூட்டிய வீட்டுக்குள் நான்கு நாட்களாக தவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் ஓய்வுபெற்ற வேளாண் துறை பொறியாளர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ள நிலையில் சென்ற 10 வருடங்களாக அவர்கள் வெங்கட் ராமானை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். வெங்கட்ராமன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்படுகின்றது. இவருக்கு ஆட்டோ டிரைவர் நண்பர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில்… “சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்”…!!!!

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தார்கள். இதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக பள்ளி சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 2021-22 ஆம் வருடத்திற்கான சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் விருது வழங்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் நடந்த தேர் திருவிழா…. மின்சாரம் பாய்ந்தது எப்படி?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் […]

Categories

Tech |