தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் 25 வயதில் இளைஞருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயதாகிறது. இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக குடும்பத் தலைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சென்று அவர் தனது குடும்பத்திற்காக […]
Tag: தஞ்சை மாவட்டம்
நிவர் புயல் பாதிப்புகள் சமாளிக்கும் வகையில் தஞ்சையில் முன் எச்சரிகை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளதுடன் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை அதிகப்படியான கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக மழை பெய்யும் நேரத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
தஞ்சையில் அரிவாளை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வேளாண்மை துறை அமைச்சர் திரு. வி.ரா துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடந்த 13-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டரர். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 19 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து இன்று பிற்பகல் சொந்த ஊரான தஞ்சை […]
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை இடுகாட்டிற்க்கு கொண்டு செல்லும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்லதுரையின் உறவினர்கள் பட்டுக்கோட்டை பேராவூரணி சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை விலைநிலம் வழியாக தூக்கிச் […]
தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 500 முதல் 600 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் பல ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்வதால் நெல் மூட்டைகள் சேதமடைந்து முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுடன் சிரித்து பல குரல்களில் பேசி திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மகிழ்ந்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டுக்கோட்டையில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அனுமதியோடு அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளுக்கு நேரில் சென்ற திரைப்பட நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பல குரல்களின் பேசி மகிழ்வித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் […]
பட்டுக்கோட்டைய சேர்ந்த நபர் ஒருவர் சக கொரோனா நோயாளிகளுடன் தனது பிறந்தநளை விதி முறைகளை கடைப்பிடித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 6 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. அதன் அடிப்படையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்காவில் இதுவரை சுமார் 300க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உள்ளது. இதனிடையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் […]
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவர் கீற்று ஏற்றி செல்லும் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து 7 வருடங்கள் ஆகிய நிலையில் இவர்களுக்கு ஜனனிகாஸ்ரீ மற்றும் வருணிகாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகன்யா தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் கணவருடன் விட்டுவிட்டு […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை போலியானது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது சௌந்தரராஜப்பெருமாள் கோவில். இந்தக்கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை லண்டனில் உள்ள ஆஸ்மோரியன் அருங்காட்சியத்தில் இருப்பதாக இந்திய தூதரகம் மற்றும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் புதுச்சேரில் உள்ள பழைய ஆவணங்களில் உள்ள சிலைக்கும் […]