திருச்சி கிராப்பட்டி யார்டில் இருந்து, ரயில் நிலையம் அருகே வந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து விலகி தடம் புரண்டது. இதனால், ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஜாக்கிகள் மூலம் தடம் புரண்ட பெட்டிகளை மீட்டனர். இதைத் தொடர்ந்து, குருவாயூர், தேஜஸ் உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்குள்ளாயினர்.
Tag: தடம் புரண்ட ரயில்
சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தாவுக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திரவரம் ரயில் நிலையில் அருகில் இன்று காலை 3 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயிகள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜங்ஷன் கிராப்பட்டி பாலம் அருகில் இருக்கும் ரயில்வே யார்டில் இருந்து 18 பெட்டிகளுடன் ரயில் ஒன்று பராமரிப்பு பணிக்காக சென்னை பெரம்பூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. இந்நிலையில் ஒரு பெட்டியின் 4 சக்கரங்கள் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு தண்டவாளத்திற்கு கீழே இறங்கி ஜல்லி கற்கள் மீது சிறிது தூரம் ஓடியுள்ளது. இந்த சத்தம் கேட்டவுடன் என்ஜின் […]
பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று அம்ட்ராக் எம்பயர் பில்டர் என்ற பயணிகள் ரயில் சிக்கோகோவிலிருந்து சியாட்டிலுக்கு சென்று கொண்டிருந்த போது ஜோப்ளின் பகுதிக்கு அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் மொத்தம் 141 பயணிகளும் 16 பணியாளர்களும் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://twitter.com/i/status/1441946955781869569 இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் படுகாயம் […]
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். எகிப்தின் தலைநகரான கைரோ நகரிலிருந்து பயணிகள் ரயில் ஓன்று நைல் டெல்டா நகரமான Mansouraவிற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கலியுபியா மாகாணத்தில் உள்ள பான்ஹா நகரில் ரயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இதனால் ரயில் பெட்டியில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் முயற்சிக்குப் பின்னர் போராடி ரயிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். மேலும் அவர்கள் […]
தெற்கு பாகிஸ்தானில் தலைநகரான லாகூருக்கு பயணிகளுடன் சென்ற ரயில் இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கராச்சியிலிருந்து பயணிகளுடன் 18 பெட்டிகள் உடைய ரயில் ஒன்று லாகூருக்கு சென்றுள்ளது. அப்போது ரயிலில் இருந்த 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் ஆழமில்லாத சிறு பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதில் 40 நபர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ரயில் அதிகாலை 1:15 மணியளவில் […]