இந்தியாவில் கர்ப்பப்பை புற்று நோய்க்கான தடுப்பூசி விரைவில் அறிமுகமாகிறது. பெண்களுக்கு பொதுவாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படும். இதில் கர்ப்பப்பை வாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் அந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். அதோடு கர்ப்பபை வாயில் ஏற்படும் புற்று நோய்களை தடுப்பதற்கு இந்தியாவில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் […]
Tag: தடுப்பூசிகள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வடகொரிய நாட்டிற்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் அளிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தற்போது வட கொரியாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அங்கு நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு வடகொரிய நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி அளிக்க தயாராக உள்ளதாக கூறியிருக்கிறது. எனினும் தற்போது வரை இதற்கு வட கொரியா எந்த பதிலும் அளிக்கவில்லை. […]
பயோலஜிகல்-இ நிறுவனத்திடமிருந்து ‘கோர்பிவேக்ஸ்’ தடுப்பூசியை தலா 145 ரூபாய்க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பயோலஜிகல்-இ நிறுவனம் ‘கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உள்நாட்டு தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த டிசம்பர் மாதம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது. பயோலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி தடுப்பூசிகள் தலா ரூ. 145 க்கு வாங்க […]
உலக நாடுகள் முழுக்க ஒட்டுமொத்தமாக சுமார் ஆயிரம் கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் தற்போது வரை மொத்தமாகக் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 37 கோடியே 40 லட்சமாக அதிகரித்திருக்கிறது. எனவே, உலகம் முழுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நிலவரத்தின் படி உலக நாடுகள் முழுக்க ஆயிரம் கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் 425 கோடி மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் […]
தடுப்பூசிகள் தொடர்பாக எழுந்த முக்கிய கேள்விக்கு பூனம் கேட்டர்பால் விளக்கமளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றினால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். அதிலும் இந்த தொற்றானது தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்குகிறதாம். இந்த தொற்றிற்கு எதிராக தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் பயனளிக்குமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இது குறித்து WHOல் (உலக சுகாதார […]
ஆப்கானிஸ்தானுக்கு 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசு நன்கொடையாக அளித்துள்ளது. மேலும் காபூல் விமான நிலையம் வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகளை ஆப்கான் சுகாதாரத்துறை அமைச்சர் ஓமரிடம் சீன தூதர் வாங் யூ வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆப்கான் சுகாதாரத்துறை அமைச்சர் ஓமர் போர் தொடுப்பதற்காக தங்கள் நாட்டை நோக்கி டாங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்த நாடுகள் தங்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவவும் முன்வர வேண்டும் […]
ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசிகள்தான் முக்கிய ஆயுதமாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகளானது மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிப்பது மட்டும் எந்த பலனையும் தராது என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களை தடைசெய்த ஆஸ்திரேலியாவில் புதிய வகையாக உருமாறிய கொரோனாவின் பாதிப்புகள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய […]
சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிலும் பயன்பாட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது. சீனாவும் பிறநாடுகளும் சீன தடுப்பூசிகளை ஆய்வு செய்துள்ளனர். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் சீன தடுப்பூசிகள் பாதுகாப்பிலும் சரி பயன்பாட்டிலும் சரி சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. இதனை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான ஜெய் ஜோங்வெய் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதிலும் சீனாவில் சினோபாம், சினோவேக் என்ற இருவகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே சென்றடைவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ஒவ்வொரு நாடுகளும் தங்களின் மக்கள் தொகையில் குறைந்தது 40% அளவிற்கு தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து தீர்வு எடுக்க வேண்டும். அதுவரையில் பூஸ்டர் தடுப்பூசி செல்வது குறித்து எந்தவொரு அனுமதியும் வழங்கக்கூடாது. […]
பிரேசில் நாட்டுடனான கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்துள்ளது. பிரேசில் அரசு, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவேக்சின் தடுப்பூசிகள் 2 கோடி பெற கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது முதலாவதாக கோவேக்சின் தடுப்பூசி 4,00,000 டோஸ்கள் அந்நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனத்தின் வாயிலாக அனுப்புவதற்கு ஒப்பந்தமானது. எனினும், அந்நாட்டின் எதிர்க்கட்சியினர், பைசர் தடுப்பூசியை விட கோவேக்சின் அதிக விலை என்றும், தடுப்பூசி விஷயத்தில் அதிபர் ஊழல் செய்ததாகவும் குற்றம் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் மொத்தமாக கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் வெவ்வேறு வகையாக உருமாற்றம் அடைந்து பரவி வந்தாலும் தடுப்பூசிகளினால் அவற்றை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த கொரோனோவை எதிர்த்து நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து, கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் அகற்றியுள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற அனைத்து விதிமுறைகளும் […]
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவையில்லை என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் 2 ஆவது அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 14,019 பேரை கொண்டு இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதாரத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதாவது இங்கிலாந்தின் பொது […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு கடும் […]
உலக அளவில் அமெரிக்கா 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்து வழங்குவதற்கான நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதித்து வருவதால் அண்டை நாடுகளின் உதவியை நாடுகின்றனர். அதேபோல் அவசர தேவைக்காக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தடுப்பூசி கேட்டு அமெரிக்காவின் உதவியை கோரியிருந்தது. அதில் அவசர தேவையை பூர்த்தி செய்வதற்காக இலங்கையும் 600,000 ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை அமெரிக்காவிடம் கேட்டிருந்தது. இதையடுத்து அமெரிக்கா தற்போது […]
தடுப்பூசிகள், மக்களை காக்கும் கருவியாக செயல்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் Hans Kluge, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசியதாவது, தற்போதுள்ள சூழலில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக நாடுகள் சர்வதேச பயணத்தை மீண்டும் மேற்கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் தவிர்த்து விடலாம். மிக தீவிரமாக பரவும் அபாயம் உள்ள இந்த கொரோனா வைரஸ், ஐரோப்பிய பிராந்தியத்தில் சுமார் 26 நாடுகளில் […]
இந்தியாவில் இதுவரை 17.26 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலங்களும் கடுமையாக எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரையும் […]
நாளுக்கு நாள் உருமாற்றம் அடையும் கொரோனாவை தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியும் என்று உலக நாடுகள் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்தனமாக உள்ளது என்று நோபல் பரிசு வென்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான, Dr. அபிஜித் பானர்ஜி மற்றும் Dr. எஸ்தர் டுஃப்லோ ஆகிய இருவரும் கொரோனா தொடர்பில் உலக நாடுகளை எச்சரிக்கின்றனர். விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர்களது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக புது தடுப்பூசிகள், மருத்துவரீதியான முகக் கவசங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டிய நிலை […]
சுவிட்சர்லாந்திலிருக்கும் சரிபாதி மக்கள் முழுமையான தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த வகையில் சுவிட்சர்லாந்திலிருக்கும் நிர்வாகங்கள் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு சரியான பாதையை தேர்ந்தெடுத்து, அதில் செல்வதாக தொற்று தொடர்பான வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வல்லுனர்கள் கூறியதாவது, தொற்றுக்கு எதிராக மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை […]
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 40 லிருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்கள் 6 சதவீதம் பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா […]
இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்த இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் முன் களப்பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு உதவும் நோக்கில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதன்படி 5 லட்சம் தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியபோது அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான […]