கிரீஸ் அரசு தடுப்பூசி, செலுத்தாத மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது. கிரீஸ் நாட்டில் சமீப தினங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்திருக்கிறது. நேற்று 4608 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை 53% நபர்கள் தடுப்பூசி எடுத்துள்ளார்கள். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை 70%-ஆக அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. மேலும், இதற்கென்று புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் […]
Tag: தடுப்பூசி செலுத்தும் திட்டம்
அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக 12 வயதை கடந்த இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டு அரசு தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதுக்குறித்து அந்நாட்டின் பிரதமர் ராஜபக்சே கூறுவதாவது “கொரோனா பரவலை […]
உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்துவதில் முதல் 5 இடங்களை பிடித்த நாடுகளின் பட்டியல் வெளிவந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் முதல் 5 இடங்களில் எந்தெந்த நாடுகள் உள்ளன என்ற பட்டியலை “Our world in data” என்ற இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன் படி கொரோனாவின் தாயகமான சீனா தான் தடுப்பூசி செலுத்துவதிலும் முதலிடம் வகிக்கிறது. சுமார் 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கிறது. […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்நாட்டில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியளிக்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அங்கு தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. […]